சுகாதேவ் தோரட்
புனே, லாவாலேயில் உள்ள சிம்பயாசிஸ் சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் சுகாதேவ் தோரட் உரையாற்றுகிறார் | |
| பிறப்பு | 12 சூலை 1949 மஹிமாபூர், அமராவதி, மகாராஷ்டிரா, இந்தியா |
|---|---|
| நிறுவனம் | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) [சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான நிறுவனம்] |
| துறை | பொருளாதாரம் |
| பயின்றகம் | ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (முனைவர் பட்டம்) |
| விருதுகள் | பத்மஸ்ரீ (2008) வித்யாலங்காரா (2008) பி.கே. பாட்டீல் புருஷோத்தம் விருது (2007) பாரத் சிரோமணி (2006) அம்பேத்கர் சேத்தனா (2001)[1] டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது (2011) ராஜீவ் காந்தி சிறந்த தலைமைத்துவத்திற்கான தேசிய விருது (2014) - திருப்பதி, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 'அகாடமி ஆஃப் கிராஸ்ரூட்ஸ் ஸ்டடீஸ் அண்ட் ரிசர்ச் ஆஃப் இந்தியா' அமைப்பால் வழங்கப்பட்டது. |
சுகாதேவ் தோரட் (Sukhadeo Thorat ) (பிறப்பு: 12 ஜூலை 1949) [2]ஓர் இந்தியப் பொருளாதார நிபுணர், கல்வியாளர், பேராசிரியர்,எழுத்தாளர் ஆவார்.இவர் பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் 'பிராந்திய மேம்பாட்டு ஆய்வு மையத்தில்' 'எமெரிட்டஸ்' (ஓய்வுபெற்ற சிறப்புப்) பேராசிரியராக உள்ளார். [3]இவர் பி. ஆர். அம்பேத்கர் குறித்த ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவர்.
கல்வி
[தொகு]தோரட் மகாராஷ்டிராவின் பௌத்த சமூகத்தைச் சேர்ந்தவர்.[4] இவர் மகாராஷ்டிராவின் ஔரங்காபாத்தில் உள்ள மிலிந்த் கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டத்தையும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எம்.ஃபில் மற்றும் முனைவர் பட்டங்களையும் பெற்றார். மேலும், போலந்தின் வார்சாவில் உள்ள 'மெயின் ஸ்கூல் ஆஃப் பிளானிங்' நிறுவனத்தில் பொருளாதாரத் திட்டமிடலில் பட்டயப் படிப்பை முடித்தார்.
கல்விப் பணி
[தொகு]தோரட் 1973 முதல் 1980 வரை ஔரங்காபாத்தில் உள்ள வசந்த்ராவ் நாயக் மகாவித்யாலயாவில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1980 முதல் புது தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார்; மேலும் 1989–1991 காலகட்டத்தில் அமெரிக்காவின் அயோவா மாநிலப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றினார்.
இவர் 1992 முதல் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள 'சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின்' ஆராய்ச்சி உதவியாளராக இருந்து வருகிறார். ஜனவரி 2003 முதல் பிப்ரவரி 2006 வரை புது தில்லியில் உள்ள 'இந்திய தலித் ஆய்வுகள் நிறுவனத்தின்' இயக்குநராகப் பணியாற்றினார். 2006 முதல் 2011 வரை பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Prof. Sukhadeo Thorat". The World Bank. 3 October 2013. Retrieved 13 February 2014.
- ↑ "Prof. Sukhadeo Thorat, Chairman, ICSSR, New Delhi" (PDF). Indian Council of Social Science Research. Retrieved 13 February 2014.
- ↑ "What upper castes owe". 16 September 2016.
- ↑ "Life sktech". sukhadeothorat.in. Retrieved 2020-06-14.