சுகாசினி கைதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுகாசினி கைதர் (Suhasini Haidar) இந்தியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர். சி.என்.என்-ஐ.பி.என். செய்தித் தொலைக்காட்சியில் பணியாற்றிய இவர், தற்போது தி இந்து நாளிதழில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பாக்கித்தான், சிறீலங்கா, லிபியா, லெபனான், சிரியா போன்ற நாடுகளில் தங்கி அந்நாடுகளில் நிலவிய பதற்றமான சூழ்நிலைகள் பற்றி விவரமாகச் செய்திகளைச் சேகரித்து தொலைக்காட்சி வழியாகப் பரப்பினார்.

பெற்ற விருதுகள்[தொகு]

  • சிறந்த தொலைக்காட்சிச் செய்தி வழங்குனர் விருது; 2010
  • சிறந்த உரையாடல் காட்சி விருது; 2010
  • 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த அரசியல் துறை செய்திப் பணிக்காக பிரேம் பாட்டியா நினைவு விருதினை 11 ஆகஸ்ட் 2015 அன்று பெற்றார்[1].

இந்திய அரசியலாளர் சுப்பிரமணியன் சாமியின் மகளான சுகாசினி, நதீம் கைதர் என்பவரை மணந்து கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Suhasini Haidar wins Prem Bhatia Award". தி இந்து. 12 ஆகஸ்ட் 2015. http://www.thehindu.com/news/national/suhasini-haidar-wins-prem-bhatia-award/article7527347.ece. பார்த்த நாள்: 15 ஆகஸ்ட் 2015. 

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகாசினி_கைதர்&oldid=2716178" இருந்து மீள்விக்கப்பட்டது