உள்ளடக்கத்துக்குச் செல்

சுகன்யா ராமகோபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகன்யா ராமகோபால்
தனி ஆவர்தனமாக 2019 இல் கடத்தை வாசிக்கும் சுகன்யா ராமகோபால்
பிறப்பு13 சூன் 1957 (1957-06-13) (அகவை 68)
மயிலாடுதுறை, தமிழ்நாடு
பணிதாள வாத்தியக் கலைஞர்
பெற்றோர்சுப்பிரமணியம்
ரங்கநாயகி
வாழ்க்கைத்
துணை
ராமகோபால்
விருதுகள்
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்கருநாடக இசை
இசைக்கருவி(கள்)
  • Ghatam
  • Mridangam
  • Veena

சுகன்யா ராமகோபால் (Sukanya Ramgopal) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கருநாடக இசைக்கலைஞராவார். கருநாடக இசையில் முதல் பெண் கடம் வாத்தியக்கலைஞர் என்ற பெருமைக்குரியவர். இவர் கருநாடக இசை வாய்பாட்டு, வயலின், மிருதங்கம், வீணை ஆகியவற்றிலும் தேச்சிபெற்றவர். சங்கீத நாடக அகாதமி விருது, கருநாடக சங்கீத நிருத்ய அகாடமி விருது, சென்னை மெட்ராஸ் இசை அகாதமியின் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

சுகன்யா ராமகோபால், தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில், சுப்பிரமணியம், ரங்கநாயகி இணையருக்கு ஐந்தாவது குழந்தையாக, 1957 சூன் 13 அன்று பிறந்தார். [1] இவர் தமிழறிஞர் உ. வே. சுவாமிநாதயரின் பேத்தியாவார். [2] இவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு மாண்டெசோரி பள்ளியிலும், பின்னர் என். கே. திருமலாச்சாரியார் தேசிய பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். [3] சென்னை எத்திராஜ் கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை முடித்த பிறகு, சென்னை நீதியரசர் பஷீர் அகமது சயீது மகளிர் கல்லூரியில் கணிதத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். [3]

சுகன்யா சென்னையின் பழைய திருவல்லிக்கேணிப் பகுதியில் உள்ள தியாகராஜ விலாசம் என்ற இடத்தில் வளர்ந்தார். சிறு வயதிலிருந்தே இசையைக் கேட்டு வளர்ந்தார். [4] அப்போதே தாள வாத்தியத்தியங்கள் மீது இவருக்கு விருப்பம் ஏற்பட்டது. சுகன்யாவும் அவரது சகோதரி பானுமதியும் முதலில் தாழக்குடி அய்யாசாமி ஐயரிடம் கர்நாடக இசை வாய்ப்பாட்டுப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். [2] [3] பின்னர், இவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள, கட வாத்தியக் கலைஞர் வித்யா விநாயக்ராமின் குடும்பத்தினரால் அமைக்கப்பட்ட ஸ்ரீ ஜெய கணேசா தாள வாத்ய வித்யாலயா என்ற இசைப் பள்ளியில் வயலின் கற்க அனுப்பப்பட்டார். [4] இவரது வயலின் ஆசிரியர்களாக தனபாலன், விக்குவின் சகோதரர் டி. எச். குருமூர்த்தி ஆகியோர் இருந்தனர். [3] வினாயக்ரமின் தந்தை டி. எச். ஹரிஹர சர்மா, சுகன்யாவுக்கு அங்கு நடைபெறும் மிருதங்க வகுப்பில் அதிக ஆர்வம் இருப்பதைக் கவனித்தார். எனவே அவர் இரகசியமாக இவருக்கு மிருதங்கம் கற்றுக் கொடுத்தார். [4] ஆனால் விரைவில் இவர் கட வாத்தியத்தால் ஈர்க்கப்பட்டு, விநாயக்ராம் மற்றும் அவரது தந்தையிடமிருந்து கட வாத்தியத்தைக் கற்றுக்கொண்டார். [4] முதலில் 'இந்த வாத்தியம் ஒரு பெண்ணுக்கு வாசிப்பதற்கு மிகவும் கடினமானது' என்று கூறி இவரது குரு வினாயக்ராம் கற்பிக்க மறுத்தார். ஆனால் இவரது அர்ப்பணிப்பையும் திறமையையும் கண்டு, பின்னர் இவருக்கு கற்பிக்க ஒப்புக்கொண்டார். [5] இவர் கொன்னக்கோல் (குரல் தாள வாத்தியம்) கலையிலும் திறமை வாய்ந்தவர். [6] இவர் அனைத்திந்திய வானொலியின் 'ஏ-டாப்' தரக் கலைஞர் ஆவார். [7]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சுகன்யாவின் கணவர் ராமகோபால் ஒரு பொறியாளர். [8] திருமணத்திற்குப் பிறகு, இவர்கள் கருநாடகத்தின் பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர்.

இசை வாழ்க்கை

[தொகு]

கருநாடக இசையில் முதல் பெண் கடம் இசைக் கலைஞர் என்று சுகன்யா ராம்கோபால் பரவலாக அறியப்படுகிறார். இவர் லால்குடி ஜெயராமன், எம். பாலமுரளிகிருஷ்ணா, பாலக்காடு ஆர். ரகு போன்ற பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களுக்கு கடம் வாசித்துள்ளார். [8] இவர் கருநாடக இசை வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், வீணை ஆகியவற்றிலும் திறமை வாய்ந்தவர். [8]

கட தரங் என்பது 1992 ஆம் ஆண்டு சுகன்யாவால் உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான முயற்சியாகும். [9] கட தரங்கில், இவர் வெவ்வேறு சுருதிகளில் உள்ள 6 முதல் 7 கடங்களை வாசித்து, தாள வாத்தியத்தில் மெல்லிசையை உருவாக்குகிறார். [6] இவர் 8 கடங்களுடன் சங்கராபரணம் ராகத்தையும், 7 கடங்களுடன் ஸ்ரீரஞ்சினி ராகத்தையும் வாசித்தார்.[3] கருநாடக இசைக் கச்சேரியில் தாள வாத்தியம் முதன்மை அங்கமாக இடம்பெறுவது இதுவே முதல் முறை. [6] இவர் முழுவதும் பெண்களைக் கொண்ட வாத்தியக் குழுவான ஸ்த்ரீ தால் தரங்கை வழிநடத்துகிறார், அதில் கடம், வயலின், வீணை, மோர்சிங், மிருதங்கம் ஆகியவற்றை வாசிக்கும் பெங்கள் அடங்குவர்.[4] இந்தக் குழு தொடர்ந்து நாட்டின் புதிய மற்றும் மூத்த பெண் தாள இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது. [10] இவர் பெங்களூரில் ஸ்ரீ விக்கு விநாயக்ராம் கடம் பள்ளியையும் நடத்திவருகிறார். [5] கடத்தை கற்பிப்பதற்கும் பிரபலப்படுத்துவதற்கும் சுனாதம் அறக்கட்டளையை நிறுவியுள்ளார்.[8]

சுகன்யா 'சுநாதம், தி விக்கு பாணி ஆஃப் கடம் பிளேயிங்' என்ற பெயரில் கடத்தைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதியுள்ளா. 2000 ஆம் ஆண்டில் காளி ஃபார் வுமனால் வெளியிடப்பட்டு சி. எஸ். லட்சுமியால் எழுதப்பட்ட தி சிங்கர் அண்ட் தி சாங்: கான்வெர்சேஷன் வித் வுமன் மியூசிஷியன்ஸ் என்ற புத்தகத்திலும் இவர் இடம்பெற்றுள்ளார்.[6]

விருதுகளும் கௌரவங்களும்

[தொகு]
  • சங்கீத நாடக அகாதமி விருது 2014 [7]
  • கருநாடக சங்கீத நிருத்ய அகாடமி விருது, 1982 [11]
  • அனன்யா புரஸ்காரா 2015 அனன்யா கல்ச்சுரல் அகாதமி, பெங்களூர் [12]
  • இந்தியன் எக்ஸ்பிரஸ் வழங்கும் தேவி விருது 2015 [13]
  • மெட்ராஸ் மியூசிக் அகாதமியின் சிறந்த மூத்த கடம் கலைஞர் விருது, 2007[3]
  • மெட்ராஸ் மியூசிக் அகாதமியிலிருந்து 2017 ஆம் ஆண்டுக்கான டிடிகே விருது [14]
  • நாரத கான சபை, சென்னை, 1990 விருது [11]
  • டாக்டர். செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யரின் ராக தரங்கிணி விருது, 2000 [11]
  • பெங்களூரின் பெர்குசிவ் ஆர்ட்ஸ் மையத்திலிருந்து புட்டாச்சாரியா விருது, 2001 [3]
  • பெங்களூர் கயன சமாஜத்திலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞர் விருது, 2009 [3]
  • 2008 ஆம் ஆண்டு பெங்களூர் அய்யனார் இசைக் கல்லூரியால் அவர் பாராட்டப்பட்டார் [11]

பெற்ற பட்டங்கள்

[தொகு]

ஸ்ரீ தியாக பிரம்ம கான சபையின் வாணி கலா நிபுணா (பொருள்: பேச்சு மற்றும் கலை நிபுணர்) , மும்பையின் பாண்டுப் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியால் லய கலா நிதி (அதாவது: ரிதம் மற்றும் கலையில் பொக்கிசம்), பெங்களூர் ஸ்ரீ ராமகிருஷ்ண பஜனை சபாவினால் சாம்ராக்னி (பொருள்: தாளத்தின் ராணி), அண்ணா நகர் மியூசிக் சர்க்கிள் டிரஸ்ட் மற்றும் சத்குரு சங்கீத வித்யாலயாவால் லய வாத்ய சதுரா (பொருள்: தாள இசை நேர்த்தி) போன்ற பல பட்டங்களையும் சுகன்யா பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. India, Hachette (20 September 2021). Limca Book of Records 2020–22 (in ஆங்கிலம்). Hachette India. ISBN 978-93-88322-99-7.
  2. 2.0 2.1 "Sukanya Ramgopal Breaking Gender Stereotypes". www.magzter.com (in ஆங்கிலம்).
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 "The First Woman Ghatam Legend, Sukkanya Ramgopal and Her Success Story - The Verandah Club". theverandahclub.com (in ஆங்கிலம்).
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Meet Sukanya Ramgopal, the first woman to play the ghatam" (in en). https://www.thehindubusinessline.com/blink/watch/meet-sukanya-ramgopal-the-first-woman-to-play-the-ghatam/article28720078.ece. 
  5. 5.0 5.1 "Sukanya Ramgopal's lone battle to play the ghatam" (in en-IN). https://www.thehindu.com/entertainment/music/sukanya-ramgopal-has-been-fighting-a-lone-battle-to-play-the-ghatam/article22324959.ece. 
  6. 6.0 6.1 6.2 6.3 "Sukanya Ramgopal - Carnatic Classical".
  7. 7.0 7.1 "SRI THYAGA BRAHMA GANA SABHA'S CONFERMENT" (in en). http://www.chennaisonline.com/sri-thyaga-brahma-gana-sabhas-conferment/. 
  8. 8.0 8.1 8.2 8.3 Lalitha Kala Tarangini (PDF). March 2018. pp. 19–21.
  9. "Percussion Queen « Harmony Magazine" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 8 February 2022.
  10. Nair, Malini (December 2021). "Long unsung and marginalised, Indian women percussionists are finally making themselves heard". Scroll.in.
  11. 11.0 11.1 11.2 11.3 "Dinamalar Maargazhi isai | singer's profile | Dinamalar Maargazhi isai| List of Carnatic singers | music vocalist Profile". http://isailive.dinamalar.com/profile.php?id=1183. 
  12. "Percussion Queen « Harmony Magazine" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 8 February 2022.
  13. "Devi Awards 2015". www.eventxpress.com.
  14. "TTK Award".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகன்யா_ராமகோபால்&oldid=4450175" இலிருந்து மீள்விக்கப்பட்டது