சுகன்யா (நடிகை)
சுகன்யா | |
---|---|
பிறப்பு | ஆர்த்திதேவி 25 நவம்பர் 1969[1] சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1991 2010 |
பெற்றோர் | தந்தை : ரமேஷ் தாயார் : பாரதி |
வாழ்க்கைத் துணை | ஶ்ரீதர ராஜகோபாலன் (2002–2003) (மணமுறிவு)[2] |
விருதுகள் | பிலிம்பேர் விருது– மலையாளம், தமிழ்நாடு சிறந்த நடிகைக்கான விருது |
சுகன்யா (Sukanya பிறப்பு: 25 நவம்பர், 1969[3]) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]- சென்னையில் வாழ்ந்த ரமேஷ்–பாரதி இணையரின் மூத்த மகளாக 25 நவம்பர் 1969 அன்று பிறந்தார். இவருக்கு கீதா என்ற ஒரு தங்கை உள்ளார்.
திரையுலக அனுபவம்
[தொகு]இவரது ஆர்த்தி தேவி என்ற இயற்பெயரை இவர் நடித்த முதல் திரைப்படமான புது நெல்லு புது நாத்து திரைப்படத்திலிருந்து இயக்குனர் பாரதிராஜாவால் சுகன்யா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திரையுலகில் நுழைந்தார். சுகன்யா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவா் திரைக்கு வருவதற்கு முன்பு பொதிகை தொலைக்காட்சியில் பெப்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினாா். அதன் பிறகு சன் டி.வி யில் அந்த நிகழ்ச்சியை உமா தொகுத்து வழங்கினாா். இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா என்னும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார்.
இவர் புது நெல்லு புது நாத்து, சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, உறுதிமொழி, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, கேப்டன், டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் திரையுலகில் சத்யராஜ், சரத்குமார், ரகுமான் உடன் அதிகமான திரைப்படங்களில் இணைந்து ஜோடியாக நடித்துள்ளார்.
கமலஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் போன்ற நடிகர்களுடனும் பெரும் வெற்றி திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். மொத்தமாக ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார்.
திருமண வாழ்க்கை
[தொகு]சுகன்யா அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர இராஜகோபால் என்பவரை 2002 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.[4] பின்பு கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி இருவரும் மணமுறிவு பெற்றனர்.
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
[தொகு]தமிழ்த் திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1991 | புது நெல்லு புது நாத்து | கிருஷ்ணவேணி | அறிமுக திரைப்படம் |
1991 | எம். ஜி.ஆர் நகரில் | சோபனா | |
1992 | சின்ன கவுண்டர் | தெய்வானை | |
1992 | இளவரசன் | பூங்கோதை | |
1992 | தம்பி பொண்டாட்டி | சுமதி | |
1992 | கோட்டை வாசல் | வசந்தி | |
1992 | திருமதி பழனிச்சாமி | அம்சவேணி | |
1992 | செந்தமிழ் பாட்டு | துர்காதேவி | |
1992 | சோலையம்மா | சோலையம்மா | |
1993 | சின்ன மாப்ளே | ஜானகி | |
1993 | வால்டர் வெற்றிவேல் | சுமதி | |
1993 | ஆதித்யன் | ராசாத்தி | |
1993 | சக்கரைத் தேவன் | சரசு | |
1993 | உடன் பிறப்பு | பவானி | |
1993 | தாலாட்டு | டாக்டர். ரேவதி | |
1993 | கருப்பு வெள்ளை | சுவர்ணா | |
1993 | சின்ன ஜமீன் | சத்யா | |
1994 | மகாநதி | யமுனா | |
1994 | கேப்டன் | உமா | |
1994 | சீமான் | பாக்கியம் | |
1994 | ஹீரோ | சீதா | |
1994 | வண்டிச்சோலை சின்ராசு | பார்வதி | |
1994 | ராஜபாண்டி | ராணி புவனா | |
1995 | மிஸ்டர். மெட்ராஸ் | மீரா | |
1996 | மகாபிரபு | மகாலட்சுமி | |
1996 | இந்தியன் | அமிா்தவள்ளி | |
1996 | புதிய பராசக்தி | பராசக்தி | |
1996 | பரிவட்டம் | ||
1996 | சேனாதிபதி | மீனாட்சி | |
1996 | ஞானப்பழம் | ஆா்த்தி | |
1997 | ஆஹா | கீதா | |
1997 | கோபுரதீபம் | மீனா | |
1997 | தம்பிதுரை | செண்பகம் | |
2000 | குட்லக் | தேவி | |
2001 | கிருஷ்ணா கிருஷ்ணா | பாமா | |
2001 | ஶ்ரீபண்ணாரிஅம்மன் | சிறப்புத் தோற்றம் | |
2004 | அடிதடி | ||
2006 | சில்லுனு ஒரு காதல் | நிர்மலா | |
2007 | தொட்டால் பூ மலரும் | பெரிய நாயகி | |
2008 | ஆயுதம் செய்வோம் | லீலாவதி | |
2008 | எல்லாம் அவன் செயல் | ||
2009 | அழகர் மலை | ||
2013 | சந்திரா | ||
2014 | என்னமோ நடக்குது | காயத்ரி |
தொலைக்காட்சித் தொடர்கள்
[தொகு]- சுவாமி ஐயப்பன் (ஏசியாநெட்)
- ஆனந்தம் (சன் தொலைக்காட்சி) - சாந்தி
- ஜன்னல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑
Sukanya Actress. Times of India.
Sukanya Actress Born - November 25, 1969 in Chennai, Tamil Nadu, India
{{cite book}}
: line feed character in|quote=
at position 8 (help); line feed character in|title=
at position 8 (help) - ↑ "விவாகரத்து உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகை சுகன்யா கணவர் மேல்முறையீடு".
- ↑
Sukanya Actress. Times of India.
Sukanya Actress Born - November 25, 1972 in Chennai, Tamil Nadu, India
{{cite book}}
: line feed character in|quote=
at position 8 (help); line feed character in|title=
at position 8 (help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-21. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.
வெளி இணைப்புகள்
[தொகு]- 1969 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- மலையாளத் திரைப்பட நடிகைகள்
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- கன்னடத் திரைப்பட நடிகைகள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்
- இந்தியத் திரைப்பட நடிகைகள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- சென்னை நடிகைகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்
- தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்