சுகதா பாண்டே
Appearance
சுகதா பாண்டே Sukhada Pandey | |
---|---|
அமைச்சர் பீகார் அரசு | |
பதவியில் 26 நவம்பர் 2010 – 16 சூன் 2013 | |
கலை, கலாச்சாரம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் | 26 நவம்பர் 2010 - 16 சூன் 2013 |
பீகார் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2010–2015 | |
முன்னையவர் | இரிதை நாராயண் சிங் |
பின்னவர் | சஞ்சய் குமார் திவாரி |
தொகுதி | பக்சர் |
பதவியில் 2000–2005 | |
முன்னையவர் | மஞ்சு பிரகாசு |
பின்னவர் | இரிதை நாராயண் சிங் |
தொகுதி | பக்சர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
சுகதா பாண்டே (Sukhada Pandey) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதீய சனதா கட்சியைச் சேர்ந்த இவர் பீகார் மாநிலத்தின் அமைச்சரவையில் கலை, கலாச்சாரம் மற்றும் இளைஞர் விவகாரத் துறையின் அமைச்சராக இருந்தார். தேசியக் கட்சியின் துணைத் தலைவராகவும் இவர் உள்ளார்.[1]
ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவரான சுகதா பாண்டே கன்யாகுப்ச்சா பிராமண குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார்.[2] மகத் மகிளா கல்லூரியின் (பாட்னா பல்கலைக்கழகம்) ஓய்வு பெற்ற முதல்வர் என்றும் அறியப்படுகிறார்.[2]