உள்ளடக்கத்துக்குச் செல்

சீ (வலைத் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீ (ஆங்கிலம்:SHE) என்பது ஓர் இந்திய குற்றவியல் வலைத்தொடர் ஆகும். இதனை ஆரிஃப் அலி மற்றும் அவினாஷ் தாஸ் ஆகியோர் இயக்கியிருந்தனர்.‌ இம்தியாஸ் அலி மற்றும் திவ்யா ஜோஹ்ரி ஆகியோர் கதை எழுதினர்.[1] இத்தொடர் ஒரு அப்பாவியான பெண் காவலர் ஒருவர் தேடப்படும் பிரபல கடத்தல்காரனை கண்டுபிடிக்க விபச்சாரியாக செல்வதைப் பற்றியது.[2] நடிகை ஆதிதி போஹங்கர் பெண் காவலராக நடித்திருந்தார். இவருடன் விஜய் வர்மா, கிஷோர் (நடிகர்) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சீ தொடர் நெட்பிளிக்ஸ் செயலியில் 30 மார்ச் 2020 இல் வெளியிடப்பட்டது.[3][4]

கதை

[தொகு]

ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னனை காவலர்கள் தேடுகின்றனர். காவலர்களின் தேடலில் பிடிபடாத கடத்தல் தலைவனப் பற்றிய தகவல்களை பெறுவதற்காக.. ஒரு உளவாளியை போதைப்பொருள் கடத்தல் கூட்டத்திற்கு அனுப்ப முடிவு செய்கின்றனர். உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி ஒரு பெண் காவலரை உளவாளியாக அனுப்ப காவலர்கள் முனைகின்றனர். கடத்தில் கூட்டத்திற்குள் செல்ல பெண் காவலர் ஒரு விபச்சாரியாக நடிக்க வேண்டும் என்பதால் அப்பாவியான நாயகி பூமிகா பர்தேஷியை (ஆதிதி போஹங்கர்) தேர்ந்தெடுக்கின்றனர். முதலில் மறுக்கும் பூமிகா.. தொடர்ச்சியாக உயர் அதிகாரிகள் தரும் தொல்லையாலும, குடும்ப சூழலாலும் விபச்சாரியாக செல்ல முடிவு செய்கிறாள்.[5]

இதற்காக பூமிகா மும்பை நகரின் பிரபலமான விபச்சாரிகள் நிற்கும் சாலையில் தன்னுடைய அவர்களைப் போலவே நிற்கிறார். கம்பீரமாக கடமை செய்ய வேண்டிய காவலர், இவ்வாறு விபச்சாரியாக சாலையில் நிற்பது வேதனையாக உள்ளது. இதனிடையே பூமிகா தன்னுடைய கொடூரமான கணவருடன் விவாகரத்து வாங்க போராடுகிறார். பூமிகாவின் நோய்வாய்ப்பட்ட அம்மாவும், கல்லூரி மாணவியான தங்கையும் அவளுக்கு மேலும் சுமையாக இருக்கின்றனர்.[6]

அப்பாவியாக இருக்கும் பூமிகா தொடர்ந்து விபச்சாரியாக நடிப்பதால் அவளுடைய பலவீனங்கள் மறைந்து தெகிரியமான பெண்ணாகிறாள். காவலர்கள் தேடும் நாயக்கின் ஒரு கையாளான சஸ்யா (விஜய் வர்மா) நாயகியை விபச்சாரத்திற்காக அழைத்துச் செல்கிறார். பூமிகாவும் சஸ்யாவிடம் நற்பெயரை பெறுகிறார். சஸ்யா அவர்களின் கடத்தல் தலைவன் நாயக்கிற்கு பூமிகாவை பிடிக்கும் எனவும், நாயக் மும்பை வந்தால் அவளை அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் கூறுகிறான். இதனிடையே கல்லூரி படிக்கும் தங்கையை புதிய கைப்பேசி கொடுத்து வசீகரிக்கும் நபரை பூமிகா மிரட்டி அனுப்புகிறார். காவல் அதிகாரிகள் எதிர்பார்த்தபடி நாயக் மும்பை வருகிறார். சஸ்யாவும் நாயக்கிடம் பூமிகாவை அழைத்துச் செல்கிறார்.

நடிகர்கள்

[தொகு]
  • பூமிகா பர்தேஷியாக ஆதிதி போஹங்கர்
  • சஸ்யாவாக விஜய் வர்மா
  • ஜேசன் பெர்னாண்டஸாக விஸ்வாஸ் கினி
  • ஹேமந்தாக சாகிப் அயூப்
  • கார்த்தியாக விஷேஷ் சாகர்
  • சந்தீப் ஸ்ரீதர் தபாலே
  • டி.சி.பி ஷிஷிர் மாத்தூராக பரிதோஷ் மணல்
  • ரூபாவாக சிவனி ரங்கோல்
  • பூமிகாவின் தாயாக சுஹிதா தத்தே
  • நாயக்காக கிஷோர் குமார் ஜி
  • லோகண்டேவாக சந்தீப் தபாலே
  • ஆழ்ந்தவராக துருவ் துக்ரால்

அத்தியாயங்கள்

[தொகு]

இத்தொடர் ஏழு அத்தியாயங்களை கொண்டது.

விமர்சனம் மற்றும் வரவேற்பு

[தொகு]

ஃபர்ஸ்ட் போஸ்ட்டைச் சேர்ந்த ஸ்வேதா ராமகிருஷ்ணன் இந்தத் தொடரின் ஒளிப்பதிவையும், நடிகர்களின் நடிப்பையும் பாராட்டினார்.ஆனால் இம்தியாஸ் அலியின் திரைகதை ஏமாற்றிவிட்டதாக கூறினார்.[7] இந்துஸ்தான் டைம்ஸ் இந்த தொடரை வெகுவாக பாராட்டியது.[8]

ஸ்க்ரோல்.இன் விஜய் வர்மாவின் நடிப்பை பாராட்டியதுடன், திரைகதையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இறுதியாக அவருடைய கதாப்பாத்திரத்தை ஓரம் கட்டியதை ஏற்க இயலவில்லை என கூறியது.[9]

குறிப்புகள்

[தொகு]
  1. Arora, Akhil (4 March 2020). "Imtiaz Ali's She: Trailer, March Release Date Unveiled for New Netflix Series From India". https://gadgets.ndtv.com/entertainment/news/she-netflix-india-2020-series-trailer-release-date-march-cast-vijay-varma-imtiaz-ali-2189599. பார்த்த நாள்: 5 March 2020. 
  2. "In Netflix series 'She', an undercover constable takes on a ganglord". 4 March 2020. https://scroll.in/reel/955127/in-netflix-series-she-an-undercover-constable-takes-on-a-ganglord. பார்த்த நாள்: 5 March 2020. 
  3. "Aaditi Pohankar's Netflix series 'She' is about a female constable taking on a drug cartel". The Hindu. 4 March 2020. https://www.thehindu.com/entertainment/movies/aaditi-pohankars-netflix-series-she-is-about-a-female-constable-taking-on-a-drug-cartel/article30981662.ece. பார்த்த நாள்: 5 March 2020. 
  4. "Netflix drops power-packed trailer of Imtiaz Ali's crime-thriller 'She'". The Free Press Journal. 4 March 2020. https://www.freepressjournal.in/entertainment/bollywood/netflix-drops-power-packed-trailer-of-imtiaz-alis-crime-thriller-she. பார்த்த நாள்: 5 March 2020. 
  5. "She Review: Women Deserve Better Than This Netflix Series". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-03-23.
  6. "She Web Series Review Netflix Series | A Perfect Review" (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-05-23. பார்க்கப்பட்ட நாள் 2020-05-28.
  7. "Netflix's She review: Imtiaz Ali's streaming debut could have been an intelligent thriller if not for its inherent male gaze-Entertainment News, Firstpost". Firstpost. 23 March 2020.
  8. "She review: Imtiaz Ali's bad luck spills onto sleazy, sloppy new Netflix series". Hindustan Times (in ஆங்கிலம்). 20 March 2020.
  9. Ramnath, Nandini. "'She' review: Profane games and limp erotic thrills in Imtiaz Ali's first web series for Netflix". Scroll.in.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீ_(வலைத்_தொடர்)&oldid=3944430" இலிருந்து மீள்விக்கப்பட்டது