ஜீ தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சீ தமிழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஜீ தமிழ்
ஜீ தமிழ் சின்னம்
உரிமையாளர் ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டிஷ் டிவி (இந்தியா) அலைவரிசை 910
டிடி டைரக்ட்+ (இந்தியா) அலைவரிசை 111

ஜீ தமிழ் (ஆங்கிலம்: Zee Tamil) என்பது ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தால் அக்டோபர் 12, 2004 அன்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சி சேவை ஆகும். இது சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இது செயற்கைக்கோள்கள் ஊடாக உலகமெங்கும் பார்க்கக் கூடியதாக உள்ளது.

தற்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் (2018)[தொகு]

தொடர்கள்[தொகு]

பெயர் குறிப்பு கிழமை நேரம்
தேவதையைக் கண்டேன் வாசுதேவன் மற்றும் லட்சுமி என்ற இரு தம்பதியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு காதல் தொடர் ஆகும். இது ராம சீதா என்ற தெலுங்கு தொடரைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. திங்கள்-வெள்ளி 13.30
நிறம் மாறாத பூக்கள் வெண்மதி மற்றும் ராம் ஆகிய இருவரின் காதல் கதையை மையமாகக் கொண்ட தொடர் ஆகும். திங்கள்-வெள்ளி 14.00
தெனாலி ராமன் விஜயநகரப் பேரரசரான கிருஷ்ணதேவராயனின் அரசவையில் இருந்த எட்டு கவிஞர்களுள் ஒருவரான தெனாலி ராமனின் கதைகளைக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு நகைச்சுவை கலந்த வரலாற்றுத் தொடர் ஆகும். இது தெனாலி ராமா என்ற இந்தித் தொடரின் தமிழ் குரல்மாற்றம் ஆகும். திங்கள்-வெள்ளி 18.00
முள்ளும் மலரும் தர்மதுரை மற்றும் கலையரசன் என்ற இரு சகோதரர்கள் வாழ்வில் மகாலட்சுமி என்ற பெண் நுழையும் போது ஏற்படும் திருப்பங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு நகைச்சுவை கலந்த குடும்பத் தொடர் ஆகும். திங்கள்-வெள்ளி 18.30
அழகிய தமிழ் மகள் கபடி விளையாட்டில் ஆர்வம் கொண்ட பூங்கொடி என்ற பெண், படிப்பைத் தொடர சென்னை வரும்போது அவர் எதிர்கொள்ளும் தடைகளைத் தாண்டி எவ்வாறு வெற்றி பெறுகிறார் என்பதை மையமாகக் கொண்ட ஒரு குடும்பத்தொடர் ஆகும், இது முத்யல முக்கு என்ற தெலுங்கு தொடரைத் தழுவி எடுக்கப்பட்ட தொடர் ஆகும். திங்கள்-வெள்ளி 19.00
இனிய இரு மலர்கள் அபி மற்றும் பிரக்யா என்ற இரு காதல் தம்பதியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு காதல் தொடர் ஆகும். இது புகழ்பெற்ற குங்கும் பாக்யா என்ற இந்தித் தொடரின் தமிழ்ப் பதிப்பு ஆகும். திங்கள்-வெள்ளி 19.30
பூவே பூச்சூடவா பெண்களை வெறுக்கும் ஷிவா என்ற ஆணின் வாழ்க்கையில் ஷக்தி என்ற பெண் நுழையும் போது ஏற்படும் திருப்பங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு காதல் தொடர் ஆகும். திங்கள்-வெள்ளி 20.00
யாரடி நீ மோகினி முத்தரசன் என்பவரின் மனைவி சித்ரா இறந்த பிறகு ஆவியாக மாறுகிறார். அவர் முத்தரசனுக்கு வரும் துன்பங்களில் இருந்து அவரை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு மீயியற்கை கலந்த குடும்பத் தொடர் ஆகும். திங்கள்-வெள்ளி 20.30
செம்பருத்தி அகிலா என்ற பணக்காரப் பெண்மணியின் மகன் ஆதியின் வாழ்வில் செம்பருத்தி என்ற வேலைக்காரப் பெண் நுழையும் போது ஏற்படும் திருப்பங்களை மையமாகக் கொண்ட ஒரு குடும்பத் தொடர் ஆகும். இது முத்த மந்தாரம் என்ற தெலுங்கு தொடரைத் தழுவி எடுக்கப்பட்ட்ட தொடர் ஆகும். திங்கள்-வெள்ளி 21.00
ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ராசாத்தி என்ற பெண், குண்டாக இருப்பதால் விமர்சனங்களைச் சந்திக்கிறார். பிறகு அவர் இனியன் என்ற கபடி போட்டியாளரை மணந்து கொள்கிறார். இவர்கள் இருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது இத்தொடர் ஆகும். திங்கள்-வெள்ளி 21.30

உண்மைநிலை நிகழ்ச்சிகள்[தொகு]

பெயர் குறிப்பு கிழமை நேரம்
சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன்-2 சிறுவர்களின் பாடல் திறமையை வெளிக்கொண்டு வரும் ஒரு பாடல் போட்டி நிகழ்ச்சி ஆகும். பிரபல பாடகர்கள் கார்த்திக், சுஜாதா மற்றும் ஸ்ரீனி ஆகியோர் நடுவர்களாக இருக்க, தொகுப்பாளினி அர்ச்சனா இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி இதே பெயரைக் கொண்ட இந்தி நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது ஆகும். சனி-ஞாயிறு 18.30
டான்ஸ் ஜோடி டான்ஸ் பருவம்-2 12 ஜோடிகள் கலந்துகொண்டு தங்கள் நடனத் திறமையை வெளிப்படுத்தும் ஒரு நடன நிகழ்ச்சி ஆகும். பிரபல நடிகைகள் சினேகா, பிரியாமணி மற்றும் கௌதமி ஆகியோர் நடுவர்களாக இருக்க, சின்னத்திரை நடிகர் தீபக் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். சனி-ஞாயிறு 20.30

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீ_தமிழ்&oldid=2580242" இருந்து மீள்விக்கப்பட்டது