சீவி யூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீவி யூன் (Zhiwei Yun செப்டம்பர் 1982) என்பவர் யேல் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியர் ஆவார். எண் தேற்றம், அல்சிப்ரா சாமெட்ரி போன்ற கணிதப்பிரிவுகளில் முனைந்த அறிவு கொண்டவர்.[1]

யேல் பல்கலைக்கழகத்தில் பணி செய்வதற்கு முன் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியர் மற்றும் இணைப்பேராசிரியராக இருந்தார்(2012-2016). அதற்கு முன் 2010-2012 இல் மசாச்சூட்ஸ் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றினார்.

சீனாவில் பிறந்த சீவி யூன் 2000 ஆம் ஆண்டில் பன்னாட்டுக் கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்கெடுத்துப் தங்கப்பதக்கம் பெற்றார்.[2] 2004 இல் பீகிங் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பட்டம் பெற்றார்.

கணிதத்துறை வளர்ச்சி சாதனைகளைப் பாராட்டி சாஸ்த்ரா இராமானுஜன் பரிசு இவருக்கு 2012 இல் வழங்கப்பட்டது.[3]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீவி_யூன்&oldid=2693660" இருந்து மீள்விக்கப்பட்டது