சீலிகெரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


சீலிகெரைட்டு
Seeligerite
Seeligerita 01.JPG
சிலி நாட்டின் அண்டோபாகாசுட்டா மண்டலத்திலுள்ள சியாரா கோர்தா தன்னாட்சிப் பகுதியின் காசுச்சா சுரங்கத்தில் கிடைத்த சீலிகெரைட்டு படிகங்கள்.
பொதுவானாவை
வகைஅயோடேட்டு கனிமம்
வேதி வாய்பாடுPb3Cl3(IO3)O
இனங்காணல்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
மேற்கோள்கள்[1][2]

சீலிகெரைட்டு (Seeligerite) என்பது Pb3Cl3(IO3)O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இதுவோர் அரியவகை ஈய குளோரேட்டு அயோடேட்டு கனிம அணைவுச் சேர்மமாகும். மஞ்சள் நிறத்தில் செஞ்சாய்சதுரப் படிகமாக இது படிகமாகிறது. ஈயம் ஒரு பகுதிக்கூறாக இருப்பதால் 6.83 என்ற உயர் ஒப்படர்த்தியும் இரு திசைகளில் மிகச்சரியான மற்றும் சரியான பிளவுகளும் காணப்படுகின்றன. nα=2.120 nβ=2.320 nγ=2.320 என்ற ஒளிவிலகல் எண் மதிப்புகளைக் கொண்டு ஒளிபுகும் தன்மையும் ஒளிகசியும் தன்மையும் கொண்டதாக சீலிகெரைட்டு கனிமம் காணப்படுகிறது [1].

சிலி நாட்டின் அண்டோபாகாசுட்டா மண்டலத்திலுள்ள சியாரா கோர்தா தன்னாட்சிப் பகுதியின் காசுச்சா சுரங்கத்தில் 1971 ஆம் ஆண்டு முதன் முதலில் சீலிகெரைட்டு கண்டறியப்பட்டது [1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீலிகெரைட்டு&oldid=2801060" இருந்து மீள்விக்கப்பட்டது