உள்ளடக்கத்துக்குச் செல்

சீலா கவுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீலா கவுடா
பிறப்பு1957 (அகவை 68–69)
பத்ராவதி, கர்நாடகா, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விராயல் கலைக்கல்லூரி
அறியப்படுவதுஓவியம், சிற்பம் நிறுவுதல்
விருதுகள்இல் மரியா லாஸ்னிக் பரிசு (2019)

சீலா கவுடா (Sheela Gowda, பிறப்பு 1957) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரில் வசிக்கும் சமகாலக் கலைஞரும் ஓவியரும் ஆவார்.[1] இவர் தனது 'செயல்முறை சார்ந்த' கலைப்பணிக்காக அறியப்படுகிறார். இவரது கலைப் படைப்புகள் பெரும்பாலும் இந்தியாவில் ஒதுக்கப்பட்ட மக்களின் அன்றாட தொழிலாளர் அனுபவங்களால் ஈர்க்கப்பட்டுள்ளது.[2]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் சிவமோகா மாவட்டத்தில் உள்ள பத்ராவதி என்ற இடத்தில் பிறந்தவர் சீலா. இவரின் தந்தையின் பணி காரணமாக, இவர் கிராம் மற்றும் நகர்ப்புறங்களில் மாறி மாறி வசித்து வந்தார். சீலாவின் தந்தை நாட்டுப்புற இசைகளை ஆவணப்படுத்தி நாட்டுப்புற பொருட்களை சேகரித்தார். சீலாவின் கலைக் கல்வி பெங்களூரில் உள்ள கென் ஸ்கூல் ஆஃப் ஆர்ட் என்ற பள்ளியில் 1979 ஆம் ஆண்டு தொடங்கியது, இது ஆர். எம். ஹடாபாத் நிறுவிய ஒரு சிறிய கல்லூரியாகும். இந்தியாவின் சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டயம் பெற்றார் (1982) மற்றும் 1986 இல் லண்டனில் உள்ள ராயல் கலைக் கல்லூரி ஓவியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், பத்ம விபூசன் விருது பெற்ற பேராசிரியர் கே. ஜி. சுப்பிரமணியன் என்பவரிடம் மேலும் நுணுக்கங்களைப் பயில பரோடா சென்றார்.[3]

வேலை

[தொகு]

சீலாவின் படைப்புகள் சடங்கு சார்ந்த தொடர்புகளிலிருந்து பெறப்பட்ட போஸ்ட்மினிமலிசத்துடன் தொடர்புடையவை. இயற்கையில் ஆழ்ந்த சிந்தனையுள்ள பெண்களைப் பற்றிய சீலாவின் ஆரம்பகால எண்ணெய் ஓவியங்கள் இவரது வழிகாட்டியான கே. ஜி. சுப்பிரமணியனின் ஓவியங்களால் ஈர்க்கப்பட்டவையாகும். நளினி மலானியின் நடுத்தர வர்க்க குழப்பம் மற்றும் கரடுமுரடான காம உணர்ச்சியால் அடக்கப்பட்ட பதற்றங்களை சித்தரிக்கும் வெளிப்பாட்டு திசையை நோக்கி ஈர்க்கப்பட்டன.[4] சீலா கவுடா 2019 இல் மரியா லாஸ்னிக் பரிசைப் பெற்றார்[5]

இந்தியாவில் மாறிவரும் அரசியல் சூழலுக்குப் பதிலளிக்கும் விதமாக 1990 களில் கவுடா சிற்பக்கலையில் கவனம் செலுத்தினார். லண்டனின் இனிவாவில் 2011 இல் தேர்இன் அண்ட் பிசைட் என்ற தலைப்பில் தனது முதல் தனி கண்காட்சியை நடத்தினார்.[6] அவர் 2014 இல் ஹியூகோ பாஸ் விருதுக்கான இறுதிப் போட்டியாளராக இருந்தார்.[7] ஊதுபத்தி மற்றும் குங்குமம் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி பேரழிவை நிலப்பரப்புகளை இவர் உருவாக்குகிறார், இது ஊதுபத்தித் தொழில்துறையின் தொழிலாளர் நடைமுறைகளுக்கும் பெண்களை அவர்கள் நடத்திடும் முறைகளுக்கும் இடையேயுள்ள நேரடி உறவைக் காட்டுகிறது.[6] இவரது படைப்புகள் பெண்களின் நிலைமையை சித்தரித்தன. இது பெரும்பாலும் அவர்களின் வேலையின் சுமை, மனத் தடைகள் மற்றும் பாலியல் மீறல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.[4]

குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்

[தொகு]
  • வாக்கர் கலை மையம், மினியாபோலிஸ், அமெரிக்கா [8]
  • சாலமன் ஆர். குகென்ஹெய்ம் அருங்காட்சியகம், அமெரிக்கா [9]
  • டேட், லண்டன், இங்கிலாந்து [10]

மூலம்

[தொகு]
  • வெட்ரென், எலிசபெத் , ஷீலா கவுடா . புரட்சியாளர் ஷீலா கவுடா.. கொனிசென்ஸ் டெஸ் ஆர்ட்ஸ், (724). 6 மார்ச் 2014
  • Singh, Devika (May 2014). "Sheela Gowda.". Art Press Sarl 411 (411): 18. ProQuest 1625537046. 
  • Vedrenne, Elisabeth (2014-09-05). "Sheila Gowda en révolte. [Rebellious Sheila Gowda.]". Connaissance des Arts 724 (724): 34. ProQuest 1560570062. 
  • Sardesai, Abhay (Sep 2013). "The Biennale everyone liked.". Art India 17 (4): 34–39. ProQuest 1496657486. 
  • Morgan, Jessica (May 2013). "Material concern: the art of Sheela Gowda.". Artforum 51 (9): 302–309. ProQuest 1412495693. 

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wright, Karen; Elderton, Louisa; Morrill, Rebecca, eds. (2019-10-02). Great Women Artists. London New York: Phaidon Press. p. 162. ISBN 978-0-7148-7877-5.
  2. "Sheela Gowda". Guggenheim Museum. Retrieved 7 March 2015.
  3. Rastogi & Karode, Akansha & Roobina (2013). Seven Contemporaries. New Delhi: Kiran Nadar Museum of Art. pp. 154–167. ISBN 978-81-928037-2-2.
  4. 4.0 4.1 Dalmia, Yashodhara. Indian Contemporary Art Post Independence. Vadehra Art Gallery, New Delhi.
  5. Armstrong, Annie (12 March 2019). "Sheela Gowda Wins 2019 Maria Lassnig Prize". ARTnews.com.
  6. 6.0 6.1 Skye Sherwyn (26 January 2011). "Artist of the Week: Sheela Gowda".
  7. "Sheela Gowda". www.guggenheim.org (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2017-10-19.
  8. "And Tell Him of My Pain". walkerart.org (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2017-10-19.
  9. "Loss". 2008-01-01. https://www.guggenheim.org/artwork/32625. 
  10. Tate. "'Behold', Sheela Gowda, 2009". Tate (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2025-08-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீலா_கவுடா&oldid=4483646" இலிருந்து மீள்விக்கப்பட்டது