சீர்திருத்த செயலாக்கம்
Appearance
ஆங்கிலத்தில் affirmative action என்ற செயற்பாட்டை தமிழில் சீர்திருத்த செயலாக்கம் எனலாம். பரிவுச் செயலாக்கம் என்றும் சிலர் தமிழில் குறிப்பிடுவர். எச் சொல் பொருத்தமானது என்று ஒரு பொது இணக்கம் இன்னும் இல்லை.
சீர்திருத்த செயலாக்கம் ஏன் தேவை?
[தொகு]சீர்திருத்த செயலாக்கம் ஏன் தேவை என்பது நோக்கி பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றுள் சில பின்வருவன:
- சமூகத்தில் சம சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு சீர்சிருத்த செயலாக்கம் தேவையாகின்றது.
- தலித்துக்களுக்கு அல்லது தாழ்த்தப்படோருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு ஈடாக சீர்திருத்த செயலாக்கம் அமைகின்றது.
- இயற்கையாகவே சமூக கட்டமைப்புகள் சில சாதிக்களுக்கு சார்பாகவும், சில சாதிக்களைப் பாதிக்கும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இக்கட்டமைப்பை உடைக்க அல்லது மீற சீர்திருத்த செயலாக்கம் தேவையாகின்றது.