சீர்சோந்து முகோபாத்யாய
சீர்சோந்து முகோபாத்யாய | |
|---|---|
2014 பெப்ரவரியில் முகோபாத்யாய | |
| பிறப்பு | 2 நவம்பர் 1935 மைமன்சிங்,[1] வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா[2][3] (தற்கால வங்காளதேசம்) |
| தேசியம் | பிரித்தானிய இந்தியர் (1935–1947) இந்தியர் (1947–தற்போது) |
| படித்த கல்வி நிறுவனங்கள் | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
| பணி | எழுத்தாளர், ஆசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | பைதகி, மானப்ஜமின், டர்பின், பார்த்திப் |
| விருதுகள் |
|
சீர்சோந்து முகோபாத்யாய (Shirshendu Mukhopadhyay, பிறப்பு 2 நவம்பர் 1935) [4] என்பவர்இந்தியாவைச் சேர்ந்த ஒரு வங்க எழுத்தாளர் ஆவார். இவர் பெரியவர்கள், குழந்தைகள் என இருதரப்பினருக்கும் கதைகளை எழுதியுள்ளார்.[5] பரோதாசரண், ஷபோர் தாஸ்குப்தா ஆகிய கற்பனை துப்பறிவாளர் பாத்திரங்களை உருவாக்கியதற்காக இவர் அறியப்படுகிறார்.[6]
வாழ்க்கை
[தொகு]சீர்சோந்து முகோபாத்யாய பிரித்தானிய இந்தியாவின், மைமன்சிங்கில் (தற்போதைய வங்காளதேசத்தில் ) 1935 நவம்பர் 2 அன்று பிறந்தார். முகோபாத்யாய்கள் பிக்ராம்பூர் (தற்போதைய முன்சிகஞ்ச் ) பைன்காராவைச் சேர்ந்தவர்கள். பிரிவினையின் போது இவரது குடும்பம் கொல்கத்தாவிற்கு குடிபெயர்ந்தது. இவரின் தந்தை இரயில்வேயில் பணிபுரிந்ததால் இவரது குழந்தைப் பருவத்தை பீகார், வங்காளம், அசாம் பல இடங்களில் கழித்தார். கூச் பீகாரில் உள்ள விக்டோரியா கல்லூரியில் இடைநிலைப் படிப்பை முடித்து, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வங்காள மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
முகோபாத்யாய பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். கல்கத்தாவில் இருந்த ஆனந்தபஜார் பத்திரிக்காவின் ஊழியராக இருந்துள்ளார். மேலும் தேஷ் என்ற பெங்காலி பத்திரிகையுடன் தொடர்புடையராகவும் இருந்தார்.[7]
கதைகள்
[தொகு]1959 ஆம் ஆண்டு " தேஷ் " இதழில் இவரது முதல் கதையான "ஜல் தரங்கா" வெளியானது. 7/8 ஆண்டுகள் கதை எழுதிய நிலையில் , தேஷ் பத்திரிகையின் வருடாந்திர பூசை பதிப்பில் இவரது முதல் புதினமான குன்போகா வெளியானது. சிறார்களுக்கான இவரது முதல் புதினமான மனோஜ்தர் அத்புத் பாரி என்று அழைக்கப்பட்டது. முகோபாத்யாயின் பல புதினங்கள் பின்னர் திரைப்படங்களாக உருவாக்கபட்டன.
விருதுகள்
[தொகு]- வித்யாசாகர் விருது (1985) – குழந்தைகள் இலக்கியத்தில் இவரது பங்களிப்புகளுக்காக
- ஆனந்த புரஷ்கர் (1973 மற்றும் 1990)
- மனாப்ஜமின் என்ற புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருது (1989)
- பங்கா பிபூஷன் விருது (2012)
- சாகித்ய அகாடமி பெல்லோஷிப் (2021) [8]
- ஏபிபி ஆனந்த சேரா பெங்காலி விருது (சேரார் சேரா) [9]
- குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் , 2023 [10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shirshendu Mukhopad". The Daily Star (Bangladesh). Retrieved 2020-12-14.
- ↑ "সবার পক্ষে লেখক হওয়া সম্ভব নয় : শীর্ষেন্দু মুখোপাধ্যায়". NTV (Bangladesh) (in Bengali). 2017-11-21. Retrieved 2020-12-14. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ৮৬তম জন্মদিন". risingbd.com (in Bengali). Retrieved 2020-12-14.
- ↑ লেখা (2023-11-02). "কেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পছন্দ করেন পাঠকেরা". Prothomalo (in Bengali). Retrieved 2024-06-15.
- ↑ "Shirshendu Mukhopadhyay". WorldCat.org. Retrieved 26 March 2010.
- ↑ Shreya Roy Chowdhury. "Sans successors, Feluda and Byomkesh still rule". timesofindia.com. Archived from the original on 2018-03-01.
- ↑ "Sirshendu Mukhopadhyay (b. 1935)". Parabbas.com. Retrieved 26 March 2010.
- ↑ Majee Mondal, Suvodip (20 September 2021). "Sahitya Akademi fellowship for Shirshendu Mukhopadhyay". https://timesofindia.indiatimes.com/city/kolkata/sahitya-akademi-fellowship-for-shirshendu/articleshow/86351746.cms.
- ↑ "বাঙালির ছক-ভাঙা গরিমার স্পর্ধাকে কুর্নিশ". Anandabazar Patrika. Kolkata. 25 December 2022. Retrieved 26 December 2022.
- ↑ Saurabh (2024-01-05). "Bengali Writer Shirshendu Mukyopadhyaya Receives 2023 Kuvempu Award". adda247 (in Indian English). Retrieved 2024-06-14.