சீரொளி வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீரொளியின் மூலம் பொருட்களை வெட்டும் தொழில்நுட்பம்
வடிவமைப்பு மென்பொருள் மூலம் வரையப்பட்ட பகுதியின் வரைபடம் (மேல்). உண்மையான உலோகப்பகுதியின் படிமம் (கீழ்).

சீரொளியின் மூலம் பொருட்களை வெட்டும் தொழில்நுட்பம் சீரொளி வெட்டு (Laser cutting) ஆகும். இது பொதுவாக தொழில்துறை உற்பத்திப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது பள்ளிகளில், சிறு தொழில்களில், மற்றும் பொழுதுபோக்காகவும் இதை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மூலத்திலிருந்து (source) வெளிவரும் உயர் சக்தி சீரொளியை கணினியின் உதவியுடன் இயக்குவதன் மூலம் பொருள்கள் வெட்டப்படுகிறது. தொழில்துறை சீரொளி வெட்டிகள் தட்டையான தாள் பொருள்களை வெட்டப் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் இரும்பு தூண்கள் மற்றும் குழாய்களை வெட்டவும் உதவுகிறது.

வரலாறு[தொகு]

1965 ஆம் ஆண்டு, முதல் உற்பத்தி லேசர் வெட்டும் இயந்திரம் வைர அச்சில் ஓட்டைகள் போட பயன்படுத்தப்பட்டது. இந்த இயந்திரம் மேற்கத்திய மின் பொறியியல் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டது. 1970 களின் தொடக்கத்தில், இந்த தொழில்நுட்பம் விண்வெளி பயன்பாடுகளுக்கான டைட்டானியத்தை வெட்ட பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், CO2 சீரொளிகள் உலோகம் அல்லாத பொருள்களை வெட்ட பயன்படுத்தப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரொளி_வெட்டு&oldid=2746354" இலிருந்து மீள்விக்கப்பட்டது