சீரா ஆலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீரா ஆலு
Jeera aloo
Jeera Aloo served with sprouts and dal.
சீரா ஆலு முளைகட்டிய பயறுடன்.
வகைபொறித்தல்
பரிமாறப்படும் வெப்பநிலைதுணை உணவு
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஇந்திய துணைக்கண்டம்
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாக
முக்கிய சேர்பொருட்கள்உருளைக்கிழங்கு சீரகம் விதைகள், மசலாப் பொருட்கள்
போலந்தின் சீரா ஆலு,

சீரகம் உருளை (சீரா ஆலு-Jeera aloo) என்பது வழக்கமான இந்தியச் சைவ உணவாகும். பெரும்பாலும் இது துணை உணவாகப் பூரி,[1] சப்பாத்தி, ரோட்டி அல்லது பருப்புடன் சூடாகப் பரிமாறப்படுகிறது. உருளைக்கிழங்கு (ஆலு), சீரகம் (ஜீரா)[1]மற்றும் இந்திய மசாலாப் பொருட்களின் தூள் முக்கியமான பொருட்களாகும். சிவப்பு மிளகாய்த் தூள், இஞ்சி, கொத்தமல்லி தூள், கறிவேப்பிலை, எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவை மற்ற தேவையான பொருட்களாகும். இதன் பாரம்பரிய தயாரிப்பில் காரம் குறைவாக இருக்கும்; ஆனால் தூள் மிளகு சேர்ப்பதனால் காரம் அதிகமாக இருக்கும். இதனுடைய மற்றொரு வகையாக உருளைக்கிழங்கிற்குப் பதிலாக வற்றாளை பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரா_ஆலு&oldid=3245051" இலிருந்து மீள்விக்கப்பட்டது