உள்ளடக்கத்துக்குச் செல்

சீரடி சாய் பாபா கோவில், தெற்கு பிரன்சுவிக், நியூ ஜெர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீரடி சாய்பாபா கோவில், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம், மிடில்செக்ஸ் கவுண்டி, தெற்கு பிரன்சுவிக் நகரியம், 12 பெரின் சாலையில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவிலாகும். இதன் மண்டல குறியீட்டு எண் NJ 08850 ஆகும்.[1] இதன் புவியமைவிடம் 40°21'28.4"N அட்சரேகை 74°35'12.5"W தீர்க்க ரேகை ஆகும்.

கோவில் அமைப்பு[தொகு]

சாய் பாபா
சாய் பாபா

இக்கோவிலில் இரண்டு பெரிய மண்டபங்கள் அமைந்துள்ளன. முதலாவதாக அமைந்துள்ள மண்டபத்தின் மையத்தில் உள்ள பளிங்கு மேடையில், அம்ச பீடத்தில் அமர்ந்த நிலையில் சீரடி சாய் பாபாவின் பளிங்குச் சிலை நிறுவப்பட்டுள்ளது. தலைக்கு மேல் குடை அமைக்கப்பட்டுள்ளது. தலையில் கிரீடம் அணிவிக்கப்பட்டுள்ளது. இடதுகாலை ஒரு பீடத்தின் மீது ஊன்றியவாறு, வலது காலை இடது தொடையில் மடித்து வைத்த நிலையில் அமர்ந்துள்ளார். உடலைச் சுற்றி ஆடை போர்த்தப்பட்டுள்ளது. சீரடி சாய் பாபாவின் வலது புறம் சிவலிங்கம், இராமர் குடும்பம் ஆகிய சன்னதிகளும், வலப்புறம் கணபதி, இராதாகிருட்டிணர் சன்னதிகளும் அமைந்துள்ளன. இதனையொட்டி அமைந்துள்ள மற்றொரு மண்டபத்தில் பாலாஜி (வெங்கடாசலபதி), ஐயப்பன், நவக்கிரகம், மற்றும் அம்பிகை, சன்னதிகள் அமைந்துள்ளன.[1]

சிறப்பு பூசைகள் மற்றும் இல்ல நிகழ்ச்சிகள்[தொகு]

சத்தியநாராயண பூஜை, பாலாஜி திருக்கல்யாணம், புதுமனைபுகு விழா,புதிய கார் பூசை, குழந்தையின் முதல் உணவு (அன்னப்ராசனம்), பிறந்தநாள் விழா, பெயர் சூட்டும் விழா, உபநயனம், நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, மொட்டைபோடுதல், 25வது/50வது திருமண நிகழ்ச்சிகள், 60வது/80வது பிறந்தநாள் நிகழ்ச்சிகள், இரண்யஸ்ரார்த்தம், மற்றும் இறுதி சடங்குகள் ஆகிய சடங்குகள் இங்குள்ள புரோகிதர்கள் வாயிலாக நடத்திக்கொள்ளலாம். இதற்கான கட்டணங்கள் கோவில் வலைதளத்தில் தரப்பட்டுள்ள்ளன.[2]

சீரடி சாய் தாம் கோவில் முகவரி மற்றும் திறந்திருக்கும் நேரங்கள்[தொகு]

 • கோவில் முகவரி: 12 பேர்ரின் ரோடு, மோன்மவுத் ஜங்ஷன், நியூ ஜெர்சி, NJ 08852 +1(609) 937 2800 | +1(609) 937 2806 மின்னஞ்சல்: shirdisaidham1@gmail.com
 • திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை; மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை
 • வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 8:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை [3]

சீரடி சாய் ஆரத்தி நடைபெறும் நேரங்கள்[தொகு]

 • கக்கட் ஆரத்தி காலை 8:30 மணி
 • மதிய ஆரத்தி நண்பகல் 12.00 மணி
 • தூப ஆரத்தி மாலை 6:00 மணி
 • சேஜ் ஆரத்தி 8:00 மணி[3]

பாலாஜி ஆரத்தி நடைபெறும் நேரங்கள்[தொகு]

 • சுப்ரபாதம் காலை 9:00 மணி
 • ஜெய் ஜெகதீசா மாலை 7:00 மணி
 • சயன ஆரத்தி மாலை 7:30 மணி[3]

வரலாறு[தொகு]

2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சீரடி சாய் தாம் கூட்டிணைவு (Shirdi SAI Dham Inc) என்னும் அமைப்பு, கடந்த 19 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்து மத உறுப்பினர் அமைப்பு (Hindu Religious Membership Organization) என்ற பிரிவின் கீழ் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு நிர்வாகத்தில் செயல்படும் சீரடி சாய் தாம் கோவிலின் ஆண்டு வருமானம் $452,116 என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலில் சுமார் 6 ஊழியர்கள் பூசாரிகளாகப் பணிபுரிகின்றனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Home Shirdi Sai Dham
 2. Special Services Shirdi Sai Dham
 3. 3.0 3.1 3.2 Temple Timings Shirdi Sai Dham
 4. Shirdi SAI Dham Inc Buzzfile