சீமென் சுழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீமென் சுழற்சி (Siemens cycle) என்பது வாயுக்களை குளிர்விக்க அல்லது திரவப்படுத்த பயன்படும் ஒரு நுட்பமாகும். [1] கே - லூசாக்கின் விதியின்படி ஒரு வாயு சுருக்கப்படும்போது வெப்பநிலைக்கும் அழுத்தத்திற்கும் இடையிலான நேர் விகிதச் சார்பு காரணமாக அதன் வெப்பநிலை அதிகரிக்கிறது. சுருக்கப்பட்ட வாயு பின்னர் ஒரு வெப்பப் பரிமாற்றியால் குளிரூட்டப்பட்டு பின்னர் அழுத்தத் தளர்வினால் விரிவடையச் செய்யும்போது வாயு அதே அழுத்தத்தில் அசலை விட மேலும் குளிர்ச்சியாக இருக்கும். கார்ல் வில்லெம் சீமென் 1857 ஆம் ஆண்டு சீமென் சுழற்சிக்கு காப்புரிமை பெற்றார் [2][3].

சீமென் சுழற்சியில் வாயுவை,

1. வெப்பமூட்டல் - வாயுவை அழுத்தத்திற்கு உட்படுத்தி – வாயுவுக்கு சிறிதளவு வெளிப்புற சக்தியைச் சேர்ப்பதன் மூலம் சுழற்சி முழுவதுமாக இயங்குவதற்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது.
2. குளிரூட்டல் - குளிரான சூழலில் வாயுவை மூழ்கடிப்பதன் மூலம் அதன் வெப்பம் மற்றும் ஆற்றல் இழக்கப்படுகிறது.
3. அடுத்த மற்றும் கடைசி கட்டத்திலிருந்து திரும்பும் வாயு ஒரு வெப்பப் பரிமாற்றி மூலம் மேலும் குளிரூட்டப்படுகிறது
4. வாயுவை விரிவடையச் செய்தல் மூலம் மேலும் குளிரூட்டப்பட்டு வெப்பம் மற்றும் ஆற்றல் நீக்கப்படுகிறது.

தற்போதைய சுழற்சியில் குளிரூட்டப்பட்ட நிலையில் இருக்கும் வாயு மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் அனுப்பப்படுகிறது -

5. வெப்பமூட்டல் - 3 ஆம் கட்டத்திற்கான ஒரு குளிரூட்டியாக பங்கேற்கும்போது வெப்பமூட்டப்படுகிறது.பின்னர்
6. முதல் சுழற்சியைத் தொடங்கும் போது, சுழற்சியின் அடுத்த கட்டத்தைத் தொடங்க வாயுவை இலேசான் அழுத்தத்திற்கு உட்படுத்தி சுருக்கி மீண்டும் சூடுபடுத்தப்படுகிறது.

ஒவ்வொரு சுழற்சியிலும் நிகர குளிரூட்டல் சுழற்சியின் தொடக்கத்தில் சேர்க்கப்படும் வெப்பத்தை விட அதிகம். வாயு அதிக சுழற்சிகளைக் கடந்து குளிர்ச்சியடையும்போது விரிவடையும் உருளையில் (சீமென் சுழற்சியின் நிலை 4) மேலும் குறைந்த வெப்பநிலையை அடைவது மிகவும் கடினமாகிறது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Adiabatic Expansion Cooling of Gases". Archived from the original on 2008-09-14. பார்க்கப்பட்ட நாள் 2020-04-23.
  2. Charles William Siemens, "Improvements in refrigerating and producing ice, and in apparatus or machinery for that purpose", British patent no. 2064 (filed: July 29, 1857).
  3. "The Siemens cycle". Archived from the original on 2016-10-30. பார்க்கப்பட்ட நாள் 2020-04-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமென்_சுழற்சி&oldid=3554766" இலிருந்து மீள்விக்கப்பட்டது