சீமா ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீமா ராவ் என்பவர்  அதிசயப் பெண் ஆவார். இந்தியாவின் பெண் கமாண்டோ பயிற்சியாளர். 15 ஆயிரத்திற்கும் மேல் கமாண்டோ படை வீரர்களுக்குப் பயிற்சி கொடுத்துள்ளார். இப்பணியில் இவருடைய கணவர் மேஜர் தீபக் ராவ் பங்களிப்புச் செய்கிறார்.[1]  மேலும் சீமா ராவ் 7ஆவது டிகிரி கருப்பு பட்டை பெற்றவர். உலக அமைதிக்கான விருதும் பெற்றவர்.

பிறப்பும் படிப்பும்[தொகு]

ரமாகாண்ட் சினரி என்ற பேராசிரியர் இவருடைய தந்தை ஆவார். சீமா ராவ் மரபுவழி மருத்துவம் பயின்று மருத்துவர் தகுதி பெற்றார். இவர் மேலும் இடர் மேலாண்மையில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

சாதனைகள்[தொகு]

இந்திய வான் படை பயிற்சியில் வானத்தில் குட்டிக் கரணம் போட்டு சாகசம் செய்தார். துப்பாக்கி சுடுவதில் வல்லவராகவும், மலை யேறுவதில் திறம் கொண்டவராகவும் மெய்ப்பித்துக் காட்டினார்.  மற்போர் வீரர் என்னும் தகுதியையும் பெற்றார்.[2] உலக அழகி மிஸ் இந்தியா என்ற போட்டியிலும் கலந்து கொண்டார். புரூஸ் லீ  உருவாக்கிய ஜீத் குணே டோ என்ற மற் பயிற்சிக் கலையிலும் வல்லவராகத் திகழ்கிறார்.

நூலாசிரியராக[தொகு]

சீமா ராவ் பாதுகாப்புப் பயிற்சிகள் குறித்த ஒரு கலைக்களஞ்சியத்தை எழுதித் தொகுத்துள்ளார். இந்தத் தொகுப்பு சுவாட், இன்டர்போல் எப். பி.ஐ ஆகிய அமைப்புகளால் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இந்நூல் மட்டுமல்லாமல் உலகப் பயங்கரவாதம் பற்றியும் வெற்றிகள் அடைவது குறித்தும் போரில் சண்டையிடுவது, மற்போர் செய்வது ஆகியன தொடர்பான நூல்களும் எழுதியுள்ளார்.

விருதுகளும் பாராட்டுகளும்[தொகு]

உலக அமைதி விருது, அமெரிக்க அரசுத் தலைவரின் தன்னார்வலர் சேவை விருது, மலேசியா விருது முதலிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவை மட்டுமல்லாமல் இந்தியா டுடே,  பெமினா, நியூ உமன், சொசைட்டி போன்ற இதழ்கள் சீமா ராவின் அருஞ்செயல்களைப் பாராட்டிக் கட்டுரைகள் எழுதின.[3][4][5][6][7][8]

மேற்கோள்[தொகு]

  1. "Indian Super Woman Dr. Seema Rao". Deccan Chronicle. பார்த்த நாள் 2016-08-21.
  2. "Dr Seema Rao - India's only commando trainer". indiatimes. பார்த்த நாள் 2016-07-11.
  3. "Seema Rao Role Model". Dainik Bhaskar. பார்த்த நாள் 2016-08-15.
  4. "ETV Gujarati Covers Dr Seema Rao". ETv Gujarati. பார்த்த நாள் 2016-08-15.
  5. "Dr Seema Rao Doordarshan interview for News program Tejaswani". DD News. பார்த்த நாள் 2016-10-28.
  6. "India's Only Female Commando Trainer, Who's Also A Firefighter & A Filmmaker". IndiaTimes. பார்த்த நாள் 2017-06-26.
  7. "Training Indian Special Forces for over 20 years". Scoop Whoop Good News on Facebook. பார்த்த நாள் 2017-06-26.
  8. "Meet Dr.Seema Rao". SBS Australia. பார்த்த நாள் 2017-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமா_ராவ்&oldid=2719869" இருந்து மீள்விக்கப்பட்டது