உள்ளடக்கத்துக்குச் செல்

சீமா மேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீமா கௌசிக் மேத்தா
மார்ச்சு 2019 இல்
பிறப்புc.1976
தேசியம்இந்தியர்
கல்விஅகாதமி ஆஃப் ஆர்ட் கல்லூரி, சான்பிரான்சிஸ்கோ
பணிகதக் நடனக்கலைஞர் & நகை வடிவமைப்பாளர்
அறியப்படுவதுநாரி சக்தி விருது

சீமா கௌசிக் மேத்தா (Seema Mehta), (பிறப்பு c.1976) ஒரு இந்திய கதக் நடனக் கலைஞர் மற்றும் நகை வடிவமைப்பாளர் ஆவார். இவர், மும்பையில் வசதி குறைந்த குழந்தைகளுக்கு கதக் நடனத்தைக் கற்றுக்கொடுத்து, ஆதரித்ததற்காக 2019 ஆம் ஆண்டில் நாரி சக்தி புரஸ்கார் விருதைப் பெற்றார்.

வாழ்க்கை

[தொகு]
மேத்தா 2019 இல் 'லீலா டான்ஸ் கலெக்டிவ்' நிகழ்ச்சிக்காக நடனமாடினார்

இவர் 1976 இல் பிறந்தார் [1] மேலும் இவர் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அகாதமி ஆஃப் ஆர்ட் கல்லூரியில் படித்தார்.[2]

இவர் 2010 இல் சித்ரேஷ் தாஸின் சிஷ்யையாக சேர்ந்தார், 2015 இல் தனது குரு இறக்கும் வரை கூடவே இருந்து யோசனைகளைப் பின்பற்றி அவரிடம் பயிற்சி பெற்றார். மேலும் தனது குருவின் நடன பாணியை இந்தியாவில் நிகழ்த்தியுள்ளார்.[3] சீமா மேத்தாவும் பண்டிட் தாஸும் சேர்ந்து இந்தியாவில் சந்தம் நிருத்ய பாரதி என்ற நடனப் பள்ளியின் இரண்டாவது கிளையை மும்பையில் 2010 இல் நிறுவினர். மேத்தாவின் வழிகாட்டி, கல்கத்தாவில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கதக் நடனம் கற்றுக்கொடுத்து, அக்குழந்தைகள் சுரண்டலின் சுழற்சியில் இருந்து விடுபட உதவினார்.[4]

2019 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று சீமா மேத்தாவுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது [5] விருதுக்கு 1000 பெண்கள் பரிந்துரைக்கப்பட்டனர் மற்றும் 44 பேர் அதைப் பெற தேர்வு செய்யப்பட்டனர். மும்பையில் வசதி குறைந்த குழந்தைகளுடன் பணிபுரிந்ததால் சீமா தேர்ந்தெடுக்கப்பட்டார். குழந்தைகள் தங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி கதக் நடனத்தைக் கற்றுக்கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட மேனகா காந்தி, இந்தியாவில் பெண்களின் லட்சியம் குறித்து பேசினார்.[6]

விழாவில், சீமா மேத்தா அமெரிக்க டாப் டான்சர் ஜேசன் சாமுவேல்ஸ் ஸ்மித்துடன் தோன்றினார். சாமுவேல்ஸ் ஸ்மித் முன்பு தனது வழிகாட்டியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கதக் மற்றும் தட்டி நடனம் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன, ஏனெனில் கதக் நடனம் வெறும் காலில் செய்யப்படுகிறது. இருவரும் பாதங்களை முக்கிய வித்தியாசமான பாதணிகளுடன் பயன்படுத்துகின்றனர்.[7]

நகைகள்

[தொகு]

சீமா மேத்தா சந்தம் நிருத்ய பாரதி என்ற பள்ளியை நடத்தி வருகிறார், இவர், இன்றும் நகை வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளார். நகை வடிவமைப்பு மற்றும் நடனம் இரண்டும் தனது வாழ்க்கையின் ஒரு பகுதி என்று இவர் கூறுகிறார். இவர் தனது குடும்பத்தின் நகை வியாபாரத்தில் படைப்பு இயக்குநராக உள்ளார்.[8]

சான்றுகள்

[தொகு]
  1. Pawar, Yogesh (2019-03-24). "Seema Mehta on receiving the President's award for teaching kathak to underprivileged girls". DNA India (in ஆங்கிலம்). Retrieved 2020-06-08.
  2. Purushothaman, Kirubhakar (2017-03-02). "Sparkles are her business". The Asian Age. Retrieved 2020-06-08.
  3. Mumbai Mirror (2011-06-11). "Kathak dancer Seema Mehta performs". The Times of India. Retrieved 2021-01-15.
  4. "Umrao Jaan, the story untold". www.telegraphindia.com (in ஆங்கிலம்). Retrieved 2020-06-08.
  5. "Nari Shakti Puraskar - Gallery". narishaktipuraskar.wcd.gov.in. Retrieved 2020-06-08.
  6. Pawar, Yogesh (2019-03-24). "Seema Mehta on receiving the President's award for teaching kathak to underprivileged girls". DNA India (in ஆங்கிலம்). Retrieved 2020-06-08.Pawar, Yogesh (2019-03-24). "Seema Mehta on receiving the President's award for teaching kathak to underprivileged girls". DNA India. Retrieved 2020-06-08.
  7. "Watch how tap dance and kathak blend on NCPA stage". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-01-20. Retrieved 2020-06-08.
  8. Purushothaman, Kirubhakar (2017-03-02). "Sparkles are her business". The Asian Age. Retrieved 2020-06-08.Purushothaman, Kirubhakar (2017-03-02). "Sparkles are her business". The Asian Age. Retrieved 2020-06-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமா_மேத்தா&oldid=4385235" இலிருந்து மீள்விக்கப்பட்டது