சீமா ஆசுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீமா ஆசுமி (Seema Azmi) என்பவர் "சீமா" என்று அழைக்கப்படுகிறார். இவர் ஓர் இந்தியத் திரைப்பட மற்றும் நாடக நடிகை ஆவார்.

சுயசரிதை[தொகு]

சீமா ஆசுமி[1] இந்தியாவின் அசாம் மாநிலம் குவகாத்தியில் அசாம்கர் பூர்வீகத்தில் பிறந்தார்.[2] இவர் தில்லியில் வளர்ந்தார். இங்கு இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்தார்.[3]

ஆசுமி 1996-ல் தில்லியில் உள்ள அசுமிதா நாடகக் குழுவில் சேர்ந்தார்.[4] கிரிஷ் கர்னாட்டின் ரகத் கல்யாண் (தலேடாண்டா), மகேஷ் தத்தானியின் இறுதி தீர்வுகள், ஏக் மாமூலி ஆத்மி, சுதேஷ் தீபக்கின் கோர்ட் மார்ஷியல், மற்றும் டாரியோ போவின் அராஜகவாதியின் விபத்து மரணம் ஆகியவை இவர் நடித்த நாடகங்களில் அடங்கும்.[5]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு தலைப்பு இயக்குனர் பங்கு
2005 வாட்டர் (தண்ணீர்) தீபா மேத்தா பகு-ராணி [1]
2007 சக் தே! இந்தியா [6] ஷிமித் அமீன் இராணி டிஸ்போட்டா
2008 சாஸ் பாஹு அவுர் சென்செக்சு ஷோனா ஊர்வசி லதா கே. கொடியல்பால்
2011 தி பெஸ்டு எக்சாட்டிக் மேரிகோல்ட் ஹோட்டல் ஜான் மேடன் அனோகி
2011 ஆரக்சன் பிரகாஷ் ஜா ஷம்பு யாதவின் மனைவி
2014 சவுண்ட் ஆப் சைலன்சு: தி கொலிசன் ஆப் இசுட்ராம்ச் வித்தின்) விபின் பராஷர் பெண்
2015 சிட்ராஃபிட் 3.0 மெகாபிக்சல் திவாகர் கோடகே ஷவ்லா
2015 தி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல் ஜான் மேடன் அனோகி
2018 மொஹல்லா அசி டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி ராம்தாயி
2021 பிசா மெய்ன் தபிஷ் [7] ரஹத் கான் ரபியா ஜைதி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Seema Azmi: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimes". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 22 April 2021.
  2. Dr. Ratan Bhattacharjee (15 August 2012). "Seema Azmi: An Actress with a Difference". பார்க்கப்பட்ட நாள் 11 September 2016.
  3. NSD. "NSD" (PDF).
  4. Dipanita Nath (6 April 2010). "To Sara, with Love". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 11 September 2016.
  5. Prominent Actor's of Asmita theatre
  6. "Seema Azmi Movies: Latest and Upcoming Films of Seema Azmi | eTimes". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 22 April 2021.
  7. Khan, Rahat, Fiza Mein Tapish (Drama), Salman Shaikh, Richa Kalra, Mithilesh Chaturvedi, Seema Azmi, பார்க்கப்பட்ட நாள் 30 April 2021

வெளி இணைப்புகள்[தொகு]

பஹு- ராணி [ http://www.boloji.com/index.cfm?md=Content&sd=Articles&ArticleID=12616

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமா_ஆசுமி&oldid=3899343" இலிருந்து மீள்விக்கப்பட்டது