சீப்பு விற்கிறது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீப்பு விற்கிறது என்னும் விளையாட்டு சிறுவர் சிறுமியரால் விளையாடப்படும்.

ஒளிதல், கண்டுபிடித்தல் என்கிற முறையில் இது விளையாடப்படும். ஒளியவேண்டியவர் கடைக்குச் சென்றுவருகிறேன் என்று சொல்லிவிட்டுக் மற்றவர் கண்ணிலிருந்து மறையும் இடத்துக்குச் சென்றுவருவார். அப்போது மற்றவர்கள் ஒளிந்துகொள்வர். திரும்பி வந்ததும் பாடிக்கொண்டே ஒளிந்தவர்களைத் தேடுவார்.

சீப்பு விற்கிறது
சித்தாடை விற்கிறது

இப்படிப் பாடிக்கொண்டு வரும்போது அவர் கண்ணில் படாமல் ஒளிந்துகொள்ள வேண்டும். பாடிவருபவர் கண்ணால் பார்த்து இருக்குமிடத்தைச் சொன்னாலே போதுமானது. ஆளையோ, உத்திக் கோட்டையோ தொடவேண்டும் என்பது இல்லை. கண்டுபிடிக்கப்பட்டவர் பட்டவர் ஆகவேண்டும். பின் அடுத்த ஆட்டம்.

மேலும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீப்பு_விற்கிறது&oldid=983164" இலிருந்து மீள்விக்கப்பட்டது