சீன வங்கிக் கட்டிடம், சிங்கப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீன வங்கிக் கட்டிடம்
Bank of China Building, Dec 05.JPG

சீன வங்கிக் கட்டிடத்தின் புதிய பகுதி


தகவல்
அமைவிடம் ராபிள்சு பிளேசு, Downtown Core, சிங்கப்பூர்
நிலை பயன்பாட்டில் உள்ளது
பயன்பாடு வணிகக் கட்டிடம்
உயரம்
கூரை 168மீ, 551அடி
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை 36
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர் பி அண்ட் டி ஆர்க்கிடெக்ட்ஸ் அண்ட் எஞ்சினியர்ஸ்
உரிமையாளர் சீன வங்கி
புதிய பகுதி
புதிய பகுதியின் நுழைவாயில்

சீன வங்கிக் கட்டிடம், சிங்கப்பூர், சிங்கப்பூரின் மைய வணிகப் பகுதியில் அமைந்துள்ள இரண்டு வானளாவிகளைக் கொண்ட கட்டிடம் ஆகும். இலக்கம் 4 பட்டரி தெருவில் அமைந்துள்ள இக்கட்டிடம், மேபாங்க் கோபுரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

பழைய கட்டிடம்[தொகு]

சீன வங்கிக் கட்டிடத்தின் பழைய பகுதி 1954 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அக்காலத்தில் அது சிங்கப்பூரின் மிகவும் உயரமான கட்டிடங்களுள் ஒன்றாக விளங்கியது. தற்போது இந்தப் பெருமை இதற்கு இல்லையானாலும், இன்று இது சிங்கப்பூரில் உள்ள மிகப் பழைய வானளாவிகளுள் ஒன்றாக உள்ளது. 18 மாடிகளைக் கொண்ட இக்கட்டிடம், "பி அண்ட் டி ஆர்க்கிட்டெக்ட் அண்ட் எஞ்ஜினியர்ஸ் லிமிட்டட்." எனும் கட்டடக்கலை மற்றும் பொறியியல் ஆலோசனைச் சேவைகள் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டுவரை சிங்கப்பூரின் மைய வணிகப் பகுதியின் மிக உயர்ந்த கட்டிடமாக இதுவே விளங்கியது. 1974 இல் யு.ஓ.பி பிளாசா என்னும் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டபோது சீன வங்கிக் கட்டிடம் இப்பெருமையை இழந்துவிட்டது.


புதிய கட்டிடம்[தொகு]

சீன வங்கிக் கட்டிடத்தின் புதிய பகுதி 36 மாடிகளையும், 168 மீட்டர் உயரத்தையும் கொண்டது. பழைய கட்டிடத்துக்கு அருகிலேயே கட்டப்பட்ட இப் புதிய கட்டிடம் 2000 ஆவது ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

ஆள்கூற்று: 1°17′08″N 103°51′08″E / 1.285617°N 103.852177°E / 1.285617; 103.852177