சீன பெரிய எலி
சீன பெரிய எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | Chaetocauda Wang, 1985
|
இனம்: | C. sichuanensis
|
இருசொற் பெயரீடு | |
Chaetocauda sichuanensis Wang, 1985 |
சீன பெரிய எலி (Chinese dormouse) அல்லது சிஸ்வான் எலி டாா் மவுஸ் எனும் சிற்றின வகையைச் சேர்தது ஆகும். இவை சீனாவின் வட சிச்சுவான், சீனாவின் சல்பால்டை கலப்பு காடுகளில் காணப்படும் (சாட்டோகாடா சிச்சுவான்சிஸ்) ஒரு வகை எலிகள் ஆகும். வாங்லாங் இயற்கை பாதுகாப்பு பகுதியில் எடுக்கப்பட்ட இரண்டு பெண்மாதிரிகள் மட்டுமே இதுவரை அறியப்பட்டவையாகும். இது 1985 ஆம் ஆண்டில் வாங் யூஜியால் முதலில் விவரிக்கப்பட்டது மற்றும் கேபெட் மற்றும் ஹில் (1991, 1992) ஆகியோரால் ஒரு புதிய மரபணுவால் கேடோகொகுடா சிச்சுவான்சிஸின் போினத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இது சாட்டோகொடுவின் போினத்தின் ஒரே விலங்கு ஆகும். இதில் உள்ள இரண்டு மாதிரிகளின் தலை மற்றும் உடல் நீளம் 90 மிமீ மற்றும் 91 மிமீ, வால் நீளம் 92 மிமீ மற்றும் 102 மிமீ என இருந்தது. அவைகள் 24.5 மற்றும் 36.0 கிராம் எடையும் உடையவையாக இருந்தன. இவை இரவாடிகளாகும். மேலும் இவை மரங்களில் சுமார் 3 மீட்டர் உயரத்தில் கூடுகட்டி வசிக்கின்றன. கடல் மட்டத்திலிருந்து 2500 மீ உயரத்தில் காணப்படுகிறன்றன. இவற்றின் குறுகிய, தனிமைப்படுத்தப்பட்ட வசிப்பிடத்தின் காரணமாக 2004 ஆண்டு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அழிந்துவரும் இனமாக செம்பட்டியலில் பட்டியலில வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1]
மேற்காேள்கள்
[தொகு]- {{{assessors}}} (2008). [http://www.iucnredlist.org/details/6860/0 Chaetocauda sichuanensis]. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 10 July 2009. Listed as DataDeficient (DD v2.3)
- Corbet, G.B. & Hill, J.E. 1991. A World List of Mammalian Species, Third edition. Natural History Museum Publications & Oxford University Press, London and Oxford.: v-viii, 1-243.
- Wang, Youzhi. 1985. A new genus and species of Gliridae. Acta Theriologica Sinica, Vol. 5 (1985), pp. 67-75.
வெளி இணைப்புகள்
[தொகு]- The Dormouse Hollow
- An illustration of The Chinese Dormouse at the Animal Diversity Web பரணிடப்பட்டது 2006-03-20 at the வந்தவழி இயந்திரம்