சீன ட்றாகன்
Jump to navigation
Jump to search
சீன டிறாஹன் (Chinese Dragon) சீன தொன்மவியல் கதைகளில், பண்பாட்டில் ஒரு முக்கிய கற்பனை விலங்கு ஆகும். டிறாஹன் நெருப்பு கக்கிக்கொண்டு முகில்களுக்கிடையே பறந்து வரும் ஒரு மர்ம பிராணியாகவே படங்களில் பொதுவாக சித்தரிக்கப்படுவதுண்டு.
பயங்கரமான கோர பற்களையும், கோள் வடிவ மிருண்ட கண்களையும், நீண்ட காதுகளையும், மானின் கொம்புகளையும், முதலை போன்ற ஒரு முக அமைப்பும் டிறாஹன் கொண்டது. அதன் உடலும் நீண்ட பாம்பு போன்றும் முதலை போன்றும் அமைப்பு கொண்டது. அதன் உடலையும் முகத்தையும் பாம்பின் கழுத்து போன்ற ஒரு அமைப்பு பிணைக்கின்றது. அதன் முதுகின் மீது முட்கள் செருகி நிற்கும். டிறாஹனுக்கு இரு இறக்கைகளும் உண்டு. அதன் இரு கைகளும் கால்களும் புலியின் பாதங்கள் போல் வளைநகங்கள் கொண்டிருக்கும். அதன் வாலின் இறுதி, பாம்பின் வால் போன்று கூன் வடிவில் முடியும்.