சீன ஓவியம்
சீன ஓவியம் உலகின் பழமை வாய்ந்த தொடர்ச்சியான கலை மரபுகளுள் ஒன்று. தொடக்ககாலச் சீன ஓவியங்கள் பொருட்களையோ நிகழ்வுகளையோ காட்டுவனவாக அல்லாமல் கோலவுருக்களையும் வடிவங்களையும் கொண்ட அலங்காரங்களாகவே இருந்தன. கற்கால மட்பாண்டங்களில் சுருள் வடிவங்கள், நெளிவரிகள், புள்ளிகள், விலங்குகள் போன்றவை வரையப்பட்டிருந்தன. போரிடும் நாடுகள் காலம் (கிமு 403-221) என்று அழைக்கப்பட்ட காலப்பகுதியிலேயே சீன ஓவியர்கள் தமது ஓவியங்களில் தம்மைச் சுற்றியுள்ளவற்றைக் காட்ட முற்பட்டனர்.
மரபு வழியாக வரையப்படும் ஓவியங்களைச் சீன மொழியில் "குவோ குவா" எனக் குறிப்பிடுவர். இது தேசியம் அல்லது உள்ளூர் ஓவியம் என்னும் பொருள் கொண்டது. மரபுவழிச் சீன ஓவியங்களை வரையும் நுட்பம் ஓரளவுக்கு வனப்பெழுத்து (calligraphy) நுட்பத்தை ஒத்தது. தூரிகையைக் கறுப்பு அல்லது நிற மைகளில் தோய்த்து வரையப்படுகிறது. எண்ணெய் வண்ணங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. அக்காலத்தில் சீன ஓவியங்களை வரைவதற்காக விரும்பப்பட்ட பொருட்கள் கடதாசி, பட்டுத்துணி என்பனவாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ (Stanley-Baker 2010a)
- ↑ (Stanley-Baker 2010b)
- ↑ Ebrey, Cambridge Illustrated History of China, 162.