சீன எதிர்ப்பு உணர்வு
நாடுகள் | ஆதரவு | எதிர்ப்பு | Pos-Neg |
---|---|---|---|
![]() |
15% |
68% |
–53 |
![]() |
22% |
70% |
–48 |
![]() |
19% |
60% |
–41 |
![]() |
29% |
54% |
–25 |
![]() |
35% |
60% |
–25 |
![]() |
28% |
50% |
–22 |
![]() |
37% |
58% |
–21 |
![]() |
20% |
35% |
–15 |
![]() |
37% |
51% |
–14 |
![]() |
46% |
47% |
–1 |
World (excl. China) | 41% |
42% |
–1 |
![]() |
45% |
38% |
7 |
![]() |
37% |
25% |
12 |
![]() |
49% |
34% |
15 |
![]() |
44% |
23% |
21 |
![]() |
55% |
26% |
29 |
![]() |
63% |
27% |
36 |
![]() |
63% |
12% |
51 |
![]() |
83% |
9% |
74 |
![]() |
88% |
10% |
78 |
நாடுகள் | ஆதரவு | எதிர்ப்பு | Pos-Neg |
---|---|---|---|
![]() |
25% |
69% |
–44 |
![]() |
21% |
63% |
–42 |
![]() |
24% |
61% |
–37 |
![]() |
26% |
61% |
–35 |
![]() |
31% |
64% |
–33 |
![]() |
29% |
60% |
–31 |
![]() |
29% |
59% |
–30 |
![]() |
32% |
60% |
–28 |
![]() |
32% |
59% |
–27 |
![]() |
34% |
61% |
–27 |
![]() |
34% |
57% |
–23 |
![]() |
36% |
55% |
–19 |
![]() |
30% |
47% |
–17 |
![]() |
41% |
53% |
–12 |
![]() |
37% |
48% |
–11 |
![]() |
40% |
50% |
–10 |
![]() |
36% |
45% |
–9 |
![]() |
36% |
44% |
–8 |
![]() |
39% |
47% |
–8 |
![]() |
45% |
49% |
–4 |
![]() |
39% |
41% |
–2 |
![]() |
43% |
35% |
8 |
![]() |
49% |
36% |
13 |
![]() |
54% |
39% |
15 |
![]() |
47% |
31% |
16 |
![]() |
56% |
34% |
22 |
![]() |
51% |
29% |
22 |
![]() |
58% |
27% |
31 |
சீன எதிர்ப்பு உணர்வு (Anti-Chinese sentiment or Sinophobia) இதனை சீன மக்கள் குடியரசு அல்லது சீன மக்கள் அல்லது சீனப் பண்பாட்டிற்கு எதிராக சீனர் அல்லாதவர்கள் கொண்டிருக்கும் வெறுப்பு, பயம் அல்லது மிகையான ஐயம் ஆகியவை குறிப்பதாகும்.[3] சீனாவிற்கு வெளியே வாழும் நாடுகளில் சீன மக்களுக்கும் மற்றும் சீனா நாட்டிற்கும் எதிரான எதிர்ப்பு உணர்வு அதிகம் காணப்படுகிறது.[4][5][6] 2017-இல் பிபிசி உலக சேவை சீனா குறித்து உலக நாடுகளிடையே நடத்திய கருத்துக் கணிப்பில், பெரும்பாலான நாடுகள் சீனாவிற்கு எதிரான உணர்வு கொண்டிருப்பது வெளியானது. மேலும் ஐரோப்பிய கருத்துக் கணிப்புகளிலும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும் சீனாவிற்கு எதிரான உணர்வு கொண்டிருப்பது புள்ளி விவரங்கள் மூலம் வெளியாகியுள்ளது. பியூ ஆராய்ச்சி மையம், உலக நாடுகளில் சீனர்களுக்கு எதிரான உணர்வுகள் குறித்து ஆய்வு நடத்தியது. அதில் 38 நாடுகளில் 19 நாடுகளில் மட்டுமே சீனாவிற்கு ஆதரவான உணர்வு காணப்பட்டது.
புள்ளி விவரங்கள் மற்றும் பின்னணி
[தொகு]2013-இல் அமெரிக்காவின் பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) உலக நாடுகளில் சீனர்களுக்கு எதிரான உணர்வுகள் குறித்து நடத்திய பன்னாட்டு ஆய்வு நடத்தியது. அதில் 38 நாடுகளில் 19 நாடுகளில் சீனாவிற்கு ஆதரவான உணர்வு காணப்பட்டது. குறிப்பாக மலேசியாவில் 81% மற்றும் பாகிஸ்தானில் 81% சீனர்களுக்கு ஆதரான உணர்வு இருந்தது. ஆப்பிரிக்க நாடுகளில் குறிப்பாக கென்யாவில் 78%), செனகல் நாட்டில் 77% மற்றும் நைஜீரியா நாட்டில் 76% சீனர்களுக்கு ஆதரவான உணர்வு காணப்படுகிறது. தென்-அமெரிக்கவில் குறிப்பாக வெனிசூலா 71%, பிரேசில் 65% மற்றும் சிலியில 62% அளவில் சீன ஆதரவு உணர்வு காணப்படுகிறது.[7] இருப்பினும் மேற்கத்திய நாடுகளிலும், பிற ஆசிய நாடுகளிலும் சீனர்களுக்கு எதிராக நிரந்தரமான எதிர்ப்பு உணர்வு மேலோங்கி காணப்படுகிறது. ஜெர்மனி மற்றும் இத்தாலி மக்களில் 28%, அமெரிக்கர்களில் 37% மற்றும் ஜப்பானியர்களில் 5% நபர்களுக்கு மட்டுமே சீனாவிற்கு ஆதரவான உணர்வு காணப்படுகிறது.
ஆனால் கணக்கெடுக்கப்பு நடத்தப்பட்ட 38 நாடுகளில் 11 நாட்டு மக்களில் பாதிப்பேர் சீனாவிற்கு சாதகமாக பார்க்கப்படவில்லை. ஜப்பானியர்களிடம் நடத்தப்பட்ட காணக்கெடுப்பின்ல் 93% சீன எதிர்ப்பு உணர்வு கொண்டிருந்தனர். ஜெர்மானியர்களில் 64%, இத்தாலியர்களில் 62% மற்றும் இஸ்ரேலியர்களில் 60% சீனாவிற்கு எதிராக பார்வை கொண்டிருந்த்னர.[7]
38 நாடுகளில் 26 நாட்டு இளைஞர்களிடம் சீனா தொடர்பாக கருத்து கேட்கும் போது, சர்வதேச விவகாரங்களில் குறிப்பாக அன்டைநாடுகளுடன் சீனா கலந்து பேசாது,ஒரு தலைபட்சமாக தன்னிச்சையாக எல்லைப்பிரச்சனைகளில் செயல்படுவதால், சீனாவுக்கும் மற்ற அண்டை நாடுகளுக்கும் இடையில் பதட்டங்களை அதிகரித்தது என பாதிக்கும் மேற்பட்டவர்கள் கருத்து தெரிவித்தனர். ருசியாவைத் தவிர்த்து, பிராந்திய மோதல்கள் தொடர்பாக. வெளியுறவுக் கொள்கை முடிவுகளை எடுக்கும்போது சீனா மற்ற நாடுகளின் நலன்களைக் கருத்தில் கொள்ளத் தவறியது குறித்த கவலையை, ஆசிய-பசிபிக் நாடுகளான ஜப்பானில் 89%, தென் கொரியாவில்; 79% மற்றும் ஆஸ்திரேலியாவில் 79% - மற்றும் ஐரோப்பாவில் - ஸ்பெயின் 85%, இத்தாலி 83%, பிரான்ஸ் 83%, பிரிட்டன் 82% சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவித்தனர். ஏழு மத்திய கிழக்கு நாடுகளில் பாதி அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சீனா ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக நினைத்தனர். இதில் 79% இஸ்ரேலியர்கள், 71% ஜோர்டானியர்கள் மற்றும் 68% துருக்கியர்கள் உள்ளனர். ஐக்கிய அமெரிக்க நாடுகள் 60% சீனாவிற்கு எதிராக இந்த பிரச்சினை பற்றி ஒப்பீட்டளவில் குறைவான அக்கறை இருந்தது. ஆனால் ஆப்பிரிக்க நாடுகள் - குறிப்பாக கென்யா 77%, நைஜீரியா 70%, தென்னாப்பிரிக்கா 67% மற்றும் செனகல் 62% இந்த பிரச்சினை குறித்து சீனாவிற்கு ஆதரவாக உள்ளனர்.[7][7]
மண்டல அளவிலான விரோதப் போக்குகள்
[தொகு]கிழக்கு ஆசியா
[தொகு]ஜப்பான்
[தொகு]1945-ஆம் ஆண்டிற்குப் பின் இரண்டாம் உலகப் போர் மற்றும் இராண்டாம் சீன-ஜப்பான் போர் முடிந்த பின்னர், சீன-ஜப்பான் உறவு வளர்ந்தது. ஜப்பானின் பண்பாட்டிற்கு எதிரான் சீனாவின் செயல்பாடுகளால் 2000-ஆம் ஆண்டு முதல் ஜப்பானில் சீன அரசுக்கு எதிரான உணர்வுகள் வளரத்துவங்கியது.[8][9] 2005-ஆம் ஆண்டு வசந்த காலம் முதல் 84% ஜப்பான் மக்கள சீனா மீது வெறுப்புணர்வு கொள்ளத் துவங்கினர்.[10]
2017 ஆம் ஆண்டில் ஒரு கணக்கெடுப்பின் பதிலளித்த ஜப்பானியர்களில் 51% பேர் புவியியல் பகுதி குறித்து பாகுபாட்டை அனுபவித்ததாக சீனர்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தனர்.[11] அதே ஆண்டில் கிடைத்த ஒரு அறிக்கையி படி, ஜப்பானிய உள்ளூர் மக்களிடமிருந்து சீன பார்வையாளர்களுக்கு எதிராக ஒரு குறிப்பிடத்தக்க சார்புகளைக் குறிப்பிட்டது.[12]தென் சீனக் கடலில் ஜப்பானுக்கு சொந்தமான சென்காகு தீவுகள் குறித்து, சீனா 2005 ஆண்டுகள் உரிமை கோருவதால், சீனாவிற்கு எதிரராக அரசியல் வெறுப்புணர்கள் ஜப்பானில் அதிகரித்த வண்ணம் உள்ளது.[13]
தென் கொரியா
[தொகு]2005-ஆம் ஆண்டு முதல் தென் கொரியாவிற்கும், சீனாவிற்கு பொதுவான தென் சீனக் கடலோரப் பகுதிகளில், சீன மீன் வளங்களைக் கைப்பற்றுவதற்கும், இராணுவ தளங்களை உருவாக்குவதற்கும் சீனா செயற்கைத் தீவுகளை உருவாக்கி வருவது, தென் கொரியா மக்களுக்கும், அரசுக்கும் சீனா மீதான எதிர்ப்பு உணர்வுகள் வளர்ந்து வருகிறது.[14][15]
மங்கோலியா நாட்டின் தெற்கு பகுதியான உள் மங்கோலியாவை 17-வது நூற்றாண்டில் சீனாவை ஆண்ட சிங் வம்சத்தினர் கைப்பற்றி சீனப் பேரரசில் இணைத்து கொண்டனர். தற்போதும் உள் மங்கோலியாப் பகுதிகள், சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் தற்போது வரை மரபு வழியாக மங்கோலியர்களுக்கு சீனா மீதான வெறுப்புணர்வு தொடர்ந்து இருந்து வருகிறது.[16]
சீனப் பேரரசு காலத்தில், பல நூற்றாண்டுகளாக வடக்கு வியட்நாமின் 1,281 கிலோ மீட்டர் எல்லைப்புறப் பகுதிகளை சீனா கைப்பற்றி தன் ஆட்சியில் வைத்திருந்தது. 1974 மற்றும் 1988-இல் வியட்நாமின் இரண்டு சிறு தீவுகளை சீனா கைப்பற்றியது. வியட்நாம் மீதான சீனாவின் ஆக்கிரப்பு இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. 1974 மற்றும் 1988-இல் தென் சீனக் கடலில் இருந்த வியட்நாமின் இரண்டு சிறு தீவுகளை சீனா கைப்பற்றியது. 1979-ஆம் ஆண்டில் வியட்நாமின் வடக்கு பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் சீனா 27 நாட்கள் போரிட்டு, பல்லயிரம் வியட்நாம் மக்களைக் கொன்றது.[17] 2014-இல் வியட்நாம் கடற்கரைப் பகுதிகளில் சீனா எண்ணெய் துரப்பண மேடைகள் அமைத்ததால் இருநாட்டவர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. 2016-இல் இப்பிணக்குகள் குறித்து பன்னாட்டு நீதிமன்றம், வியட்நாம் சார்பாக தீர்ப்பு வழங்கியது.
சீனா-பிலிப்பைனஸ் இடையே உள்ள கடலில் அமைந்த ஸ்பார்ட்டிலி தீவு மற்றும் ஸ்கார்பாரோ சோகல் தீவுகள் தொடர்பாக சீனா உரிமை கொண்டாடி வருவதால், சீனர்களுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் மக்கள் வெறுப்புணர்வு கொண்டுள்ளனர். இதனால் பிலிப்பைன்ஸ் மக்கள் சீனப் பொருட்களை வாங்குவதை நிறுத்தி, தங்கள் சீன எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்.[18]

இந்தோனேசியாவை ஆண்ட டச்சு கிழக்கிந்திய கம்பெனிப் படைகள் நடத்திய 1741-43-ஆம் ஆண்டு ஜாவா போர் மற்றும் 1740-ஆம் ஆண்டு பட்டாவியா படுகொலைகளில் ஆயிரக்கணக்கான சீனர்கள் கொல்லப்பட்டனர். அது முதல் சீனாவிற்கு எதிரான வெறுப்புணர்வு இந்தோனேசியாவில் வளரத்தொடங்கியது.[19][20][21][22][23]
சீனப் படைகள் இந்தோனேசியர்கள் மீது நடத்திய தாக்குதல்களில் 50,000 முதல் 1,20,000 வரையான இந்தோனேசியர்கள் கொல்லப்பட்டனர்.[24] D[4][25][26] 1998-இல் இந்தோனேசியாவின் அதிபர் சுகார்த்தோ பதவி நீக்கப்பட்டப் பின்னர் நடைபெற்ற உள்நாட்டுக் கலவரத்தில், இந்தோனேசியாவில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான சீனர்களின் வணிக அமைப்புகளை சூறையாடப்பட்டதுடன், சீனர்களும் கொல்லப்பட்டனர்.[27][28]
அண்மைக் காலமாக தென் சீனக் கடலில் அமைந்த இந்தோனேசியாவிற்கு உரிமையான தீவுப்பகுதிகளை சீனா உரிமை கொன்டாடி வருகிறது. இதனால் இந்தோனேசியாவில் சீனர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு வளர்ந்து வருகிறது.[29][30][31]
2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின்னர், மியான்மர் இராணுவ ஆட்சியாளர்களுக்கு சீனா தனது ஆதரவைத் தொடர்ந்து நல்கி வருவதால், மியான்மர் தேசியவாதிகள் சீனா மீது வெறுப்புணர்வு கொண்டுள்ளனர்.
வரலாற்றுரீதியாக சீனா மீது பூடானுக்கும் நல்ல உறவு இருந்தது இல்லை. குறிப்பாக சீன இராணுவத்தினர் 1959-ஆம் ஆண்டில் திபெத்தை சீனாவுடன் இணைத்த பிறகு 1959 சீனா மீதான் திபெத்தியர்களின் கிளர்ச்சியின் போது தலைநகரம் லாசாவில் பௌத்த விகாரைகளையும், பௌத்த கல்வி நிலையங்களையும் இடித்து அழித்தனர். இதனால் பௌத்தர்களான பூடான் மக்களுக்கு சீனா மீது வெறுப்புணர்வு மேலும் கூடியது.[32] 1960-ஆம் ஆண்டில் சீன அரசு வெளியிட்ட வரைபடத்தில், பூடான் சீனாவின் ஒரு பகுதியாக சேர்த்திருந்தது. இதனால் சீனா மீது பூடான் மக்கள் தங்கள் வெறுப்புணர்வை வெளிப்படுத்தினர்.[33]
2009-இல் ஈழப்போரின் போது, விடுத்லைப் புலிகளை வீழ்த்த இலங்கை அரசுக்கு சீன அரசு உதவிய காரணத்தாலும், சீன முதலீடுகள் இலங்கையில் குவிந்த காரணத்தினாலும் சீனா மீது ஈழ மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் வெறுப்புணர்வு ஏற்பட்டது.[34][35][36]
1962 இந்திய சீனப் போரின் போது, சீன இராணுவம் எல்லைக் கோட்டை தாண்டி இந்தியப் பகுதிக்குள் நுழைந்து வடக்கு லடாக்கின் அக்சாய் சின் மற்றும் கிழக்கு லடாக்கின் பகுதிகளைக் கைப்பற்றினர். மேலும் அருணாச்சலப் பிரதேசத்தின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளையும் கைப்பற்றினர். இதனால் இந்தியர்களுகு சீனா மீது கடும் வெறுப்புணர் ஏற்பட்டதால், வடகிழக்கு இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த சீன வம்சாவளி மக்களை, இந்திய அரசு சிறைபிடித்து இராஜஸ்தான் மாநிலத்தின் தடுப்பு முகாம்களில் விசாரணை இன்றி 1967-ஆம் ஆண்டு வரை சிறை வைத்தனர். பின்னர் வம்சாவளி சீனர்களின் சொத்துக்களை கைப்பற்றி, வலுக்கட்டாயமாக இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டனர்.[37][38]
இந்திய எல்லைகளில் அடிக்கடி சீன இராணுவத்தினர் ஊடுவிருவி எல்லைப் பதட்டங்கள் ஏற்படுத்திய காரணத்தினால், 2014-இல் இந்தியாவில் உள்ள நாடு கடந்த திபெத்திய அரசும், இந்தியர்களும் இணைந்து சீனப் பொருட்களை வாங்குவதில்லை என்று இயக்கம் நடத்தினர்.[39][40]
2020 இந்தியா-சீனா எல்லை மோதல்களின் போது கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன இராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற கைகலப்பு மோதலில்[41] 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.[42] ஆனால் சீன இராணுவத்தில் 40 - 45 வீரர்கள் கொல்லப்பட்டதை சீனா மறைத்தது.[43] இந்த எல்லை மோதலுக்குப் பின்னர் சீனச் செயலிகளை, இந்தியர்கள் தங்கள் 5 மில்லியன் நகர்பேசிகளிலிருந்து அழித்தனர். மேலும் இந்திய அரசு சீனாவின் டிக்டாக் போன்ற பல சீனச் செயலிகளை இந்தியாவில் தடை செய்தது.[44]
2018-இல் கசக்ஸ்தான் நாட்டில் சீனா கனிம வளங்களை எடுப்பதற்கு வசதியாக கசக்ஸ்தான் அரசு நில சீர்திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனை கசக்ஸ்தான் மக்கள், சீன நிறுவனங்களுக்கும், கசக்ஸ்தான் அரசுக்கும் எதிராக கடுமையான் போராட்டங்கள் நடத்தினர்..[45][46] மேலும் சீன நாட்டின் சிஞ்சியாங் மாகாணத்தில் வாழும் உய்குர் இசுலாமியப் பழங்குடி மக்களுக்கு எதிராக சீன அரசு நடத்தும் மனித உரிமை மீறல் பிணக்குகளுக்காகவும், சீனா மீது கசக்ஸ்தான் மக்கள் வெறுப்புணர்வு கொண்டுள்ளனர்.
தஜிகிஸ்தான் நாட்டின் எல்லைப்புற நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் சீன இராணுவம் செயல்படும் காரணத்தால் தஜிகிஸ்தான் நாட்டு மக்கள் சீனா மீது வெறுப்புணர்வு கொண்டுள்ளனர்.[47][48]
சீனா நாட்டிற்குள் சீனர்கள் மீதான வெறுப்புணர்வு
[தொகு]1949-இல் சிஞ்சியாங் பகுதியை சீனா தனது நாட்டுடன் இணைத்து கொண்டது முதல், அப்பகுதியில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருந்த இசுலாமிய உய்குர் பழங்குடி மக்கள் சீன அரசு மீது வெறுப்புணர்வுடன் உள்ளனர்.[49][50][51][52][53] இசுலாமிய மத நம்பிக்கையாளர்களை சீன அரசு தடுப்பு முகாம்களில் அடைத்து, மூளைச்சலைவை செய்து மறு-கல்வி முறையை புகட்டி வருகின்றனர்.[54] மேலும் உய்குர் குழ்ந்தைகளை குடும்பத்திலிருந்து பிரித்து, தனி பள்ளிக்கூடகளில் வைத்து சீன அரசு பாடம் நடத்துகிறது. மேலும் உய்குர் முஸ்லீம் மக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்வதை தடை செய்ய, சீன இராணுவம் கருவுற்ற பெண்களுக்கு கட்டாயக் கருக்கலைப்பு செய்கிறது. மேலும் உய்குர் முஸ்லீம் மக்கள் சீனப் பண்பாட்டின் வாழ 5 ஆண்டுகள் கெடு விதித்துள்ளது. உய்குர் முஸ்லீம்களுக்கு எதிரான சீன அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு சீன அரசு மீது குற்றச்சாட்டுகள் சுமத்தியுள்ளது.[55][56][57][58]

வரலாற்றில் சீன ஆட்சியாளர்கள் திபெத்தை ஆக்கிரமித்து கைப்பற்றி பல்லாண்டுகள் ஆண்டனர். சீனாவின் யுவான் அரசமரபிஅர் திபெத்தைக் கைப்பற்றி 1354 முதல் 1270 வரை ஆண்டனர். பின்னர் சீனாவின் சீனாவின் குயிங் அரச மரபினர் திபெத்தைக் கைப்பற்றி 1720 முதல் 1904 வரை ஆட்சிசெய்தனர். 1910-இல் சீனர்கள் மீண்டும் திபெத்தை கைப்பற்றினர். சீன பொதுவுடமைக் கட்சித் தலைவர் தலைமையில் அமைந்த சீன அரசு, 1959-இல் [[திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல்|1959-இல் திபெத்தை சீனாவுடன் இணைக்கப்பட்டது. திபெத்தியர்கள் மீதான தலாய் லாமாவின் ஆன்மீக மற்றும் அரசியல் செல்வாக்கு சீனர்களால் வலுக்கட்டயாக நீக்கப்பட்டது. இதனால் சீனா மீது திபெத்திய மக்கள் கடும் வெறுப்புணர்வு கொண்டதால், 1959-இல் திபெத்தில் சீனர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடைபெற்றது. இதனால் திபெத்தியர்கள் ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர் 14-வது தலாய்லாமா தலைமையில் இந்தியாவில் திபெத்தியர்களின நாடு கடந்த அரசு நிறுவப்பட்டது.[59]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BBC World Service poll" (PDF). BBC. July 4, 2017. p. 36. Archived from the original (PDF) on டிசம்பர் 7, 2018. Retrieved ஜூன் 20, 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "China's Image in Greece (page 33)" (PDF). December 2017. p. 33.
- ↑ Company, Houghton Mifflin Harcourt Publishing. "The American Heritage Dictionary entry: Sinophobic". ahdictionary.com. Retrieved October 25, 2020.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ 4.0 4.1 "BBC News – Analysis – Indonesia: Why ethnic Chinese are afraid". http://news.bbc.co.uk/1/hi/world/analysis/51981.stm.
- ↑ "Immigration Policy". The Princeton Encyclopedia of American Political History. (2010). Princeton University Press. “Compared to its European counterparts, Chinese immigration of the late nineteenth century was minuscule (4 percent of all immigration at its zenith), but it inspired one of the most brutal and successful nativist movements in U.S. history. Official and popular racism made Chinese newcomers especially vulnerable; their lack of numbers, political power, or legal protections gave them none of the weapons that enabled Irish Catholics to counterattack nativists.”
- ↑ Aaron Langmaid. Chinese Aussie rules players suffer abuse, racism, Herald Sun, February 21, 2013
- ↑ 7.0 7.1 7.2 7.3 Chapter 3. Attitudes toward China - Pew Global Attitudes. Posted on July 18, 2013.
- ↑ Matthew Forney, "Why China Loves to Hate Japan". Time, December 10, 2005. Why China Bashes Japan பரணிடப்பட்டது 2013-08-25 at the வந்தவழி இயந்திரம். Accessed June 1, 2008
- ↑ 2005 anti-Japanese Demonstrations
- ↑ 24-Nation Pew Global Attitudes Survey(2008) பரணிடப்பட்டது சூலை 4, 2008 at the வந்தவழி இயந்திரம் 35p, Pew Research
- ↑ "Joint Civil Society Report on Racial Discrimination in Japan (page 33)" (PDF). August 2018. Archived from the original (PDF) on 2019-12-14. Retrieved 2021-06-21.
- ↑ "Issues related to the increase in tourists visiting Japan from abroad (sections titled 'How foreign tourists are portrayed' and 'Acts of hate?')". www.japanpolicyforum.jp. November 2017. Archived from the original on நவம்பர் 15, 2019. Retrieved January 1, 2020.
- ↑ China, Japan dispute over islands may trigger new political tension
- ↑ The South China Sea Needs South Korea
- ↑ தென் சீன கடல் சர்ச்சை
- ↑ Billé (2015). Sinophobia: Anxiety, Violence, and the Making of Mongolian Identity.
- ↑ The Bitter Legacy of the 1979 China-Vietnam War
- ↑ Tiezzi, Shannon (September 17, 2014). "China Warns Citizens to Stay Away from Philippines". The Diplomat.
- ↑ History: October 9, 1740: Chinezenmoord, The Batavia Massacre. Posted on History Headline. Posted by Major Dan on October 9, 2016.
- ↑ 海外汉人被屠杀的血泪史大全. woku.com (in எளிதாக்கப்பட்ட சீனம்). Archived from the original on 2011-10-08. Retrieved 2021-06-22.
- ↑ "Archived copy" 十七﹒八世紀海外華人慘案初探 (in Chinese (Taiwan)). Taoyuan Department of Education. Archived from the original on January 2, 2017. Retrieved March 17, 2018.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "ǻܵļɱ". Retrieved May 9, 2015.
- ↑ 南洋华人被大规模屠杀不完全记录 (in Chinese (China)). The Third Media. Archived from the original on 2011-07-07. Retrieved 2021-06-22.
- ↑ Indonesian mass killings of 1965–66
- ↑ Indonesian academics fight burning of books on 1965 coup பரணிடப்பட்டது 2018-01-10 at the வந்தவழி இயந்திரம், smh.com.au
- ↑ Vickers (2005), p. 158
- ↑ "Inside Indonesia – Digest 86 – Towards a mapping of 'at risk' groups in Indonesia". Archived from the original on September 20, 2000. Retrieved May 9, 2015.
- ↑ "[INDONESIA-L] DIGEST – The May Riot". Archived from the original on March 25, 2017. Retrieved May 9, 2015.
- ↑ "Why Is China Pressing Indonesia Again Over the Natuna Islands?". www.worldpoliticsreview.com.
- ↑ Beech, Hannah; Suhartono, Muktita; Dean, Adam (March 31, 2020). "China Chases Indonesia's Fishing Fleets, Staking Claim to Sea's Riches". த நியூயார்க் டைம்ஸ்.
- ↑ "Indonesian students continue protests against Chinese workers". South China Morning Post (in ஆங்கிலம்). July 16, 2020. Retrieved September 4, 2020.
- ↑ Garver, John W. (July 1, 2011). Protracted Contest: Sino-Indian Rivalry in the Twentieth Century – John W. Garver – Google Books. ISBN 9780295801209. Retrieved February 28, 2018.
- ↑ Brian Benedictus, The Diplomat. "Bhutan and the Great Power Tussle". The Diplomat. Retrieved February 28, 2018.
- ↑ "Sri Lanka protest over Chinese investment turns ugly". BBC. January 7, 2017.
- ↑ Shephard, Wade (January 8, 2017). "Violent Protests Against Chinese 'Colony' In Sri Lanka Rage On". Forbes.
- ↑ How Beijing won Sri Lanka's civil war. Posted on The Independent. Posted on may 23. 2010.
- ↑ Sen, Tansen (April 13, 2005). "Go for a slight change of route". Telegraph. http://www.telegraphindia.com/1050413/asp/opinion/story_4590518.asp.
- ↑ Schiavenza, Matt (August 9, 2013). "India's Forgotten Chinese Internment Camp". The Atlantic. Retrieved November 17, 2013.
- ↑ "Indo". The Times of India. Retrieved October 20, 2014.
- ↑ "Boycott Chinese products, says prominent cleric in Eid sermon". Zee News. October 6, 2014. Retrieved October 20, 2014.
- ↑ கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சீனாவின் திட்டமிட்ட செயல்!’ – அமெரிக்கா
- ↑ சீனா இந்தியாவிற்கு தரும் பிரச்சினைகள்
- ↑ "India says China's Galwan Valley claims 'untenable, exaggerated'". aljazeera.
- ↑ "Google Removes Viral Indian App That Deleted Chinese Ones: 10 Points". NDTV Gadgets 360.
- ↑ "Kazakhstan's land reform protests explained – BBC News". BBC News. April 28, 2016. https://www.bbc.com/news/world-asia-36163103.
- ↑ Catherine Putz, The Diplomat. "Land Protests Persist in Kazakhstan". The Diplomat. Retrieved February 28, 2018.
- ↑ "Archived copy". Archived from the original on July 26, 2018. Retrieved July 25, 2018.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Tajik social-democrats leader: China grabs more Tajik land than agreed. Posted by Ferghana International Agency, on April 16, 2013.
- ↑ Holdstock, Nick (June 13, 2019). China's Forgotten People: Xinjiang, Terror and the Chinese State (in ஆங்கிலம்). Bloomsbury Publishing. ISBN 978-1-78831-982-9.
- ↑ Holdstock, Nick (June 13, 2019). China's Forgotten People: Xinjiang, Terror and the Chinese State (in ஆங்கிலம்). Bloomsbury Publishing. ISBN 978-1-78831-981-2.
- ↑ Svanberg, Ingvar; Westerlund, David (1999). Islam Outside the Arab World (in ஆங்கிலம்). Routledge. ISBN 978-1-136-11322-2.
- ↑ Fallows, James (July 13, 2009). "On Uighurs, Han, and general racial attitudes in China". The Atlantic (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved January 1, 2020.
- ↑ "China's model village of ethnic unity shows cracks in facade". AP NEWS. November 22, 2018. Retrieved January 1, 2020.
- ↑ https://www.dinamalar.com/news_detail.asp?id=2789949
- ↑ சீனர்களாக மாற ஐந்தாண்டு கெடு; தவிக்கும் உய்குர் இன மக்கள்
- ↑ உய்குர் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஜின்ஜியாங்கில் சீனா மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகிறது: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு குற்றச்சாட்டு
- ↑ உய்குர் முஸ்லிம்கள் குழந்தைப் பேற்றைத் தடுக்க கட்டாயக் கருக்கலைப்பு, குடும்பக்கட்டுப்பாடு, ஐயுடி பொருத்தி கொடுமை: சீனா கையாளும் கொடூர முறை
- ↑ பிரான்ஸ் நாட்டு உய்குர் மக்கள் சீனாவுக்கெதிராகப் போராட்டம்
- ↑ Dalai Lama Escapes From Tibet: How and Why It Happened. Posted on Time. Posted on March 17, 2015.