சீனாவின் பொருளாதாரம்
சீனா பொருளாதாரம் | |
---|---|
சனவரி 2014இல் சாங்காய் நகரின் புதோங் மாவட்டம். | |
நாணயம் | ரென்மின்பி (RMB); அலகு: யுவான் (CNY) |
நிதி ஆண்டு | நாட்காட்டி ஆண்டு (சனவரி, 1 முதல் திசம்பர், 31 வரை) |
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள் | உலக வணிக அமைப்பு, ஏபெக், ஜி-20 மற்றும் பிற |
புள்ளி விவரம் | |
மொ.உ.உ | $11,211 டிரில்லியன் (பெயரளவு; ஏப்ரல் 2015)[1] $18.976 டிரில்லியன் (பிபிபி; ஏப்ரல் 2015)[1] |
மொ.உ.உ வளர்ச்சி | 6.9% (Q3 2015)[2][a] |
நபர்வரி மொ.உ.உ | $9,154 (பெயரளவு; 75வது; 2015) $13,992 (பிபிபி; 89வது; 2014)[4] |
துறைவாரியாக மொ.உ.உ | வேளாண்மை: 9.2%, தொழிற்றுறை: 42.6%, சேவைகள்: 48.2% (2014)[5] |
பணவீக்கம் (நு.வி.கு) | 2.0% (2014)[6] |
கினி குறியீடு | 46.9 (2014) |
தொழிலாளர் எண்ணிக்கை | 787.6 மில்லியன் (முதல்; 2012)[7] |
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கை | வேளாண்மை: 33.6%, தொழிற்றுறை: 30.3%, சேவைகள்: 36.1% (2012 மதிப்பு.) |
வேலையின்மை | 4.1% (Q2 2014)[8] |
சராசரி மொத்த வருவாய் | 4695 CNY ($739) (2015)[9] |
முக்கிய தொழில்துறை | சுரங்கமும் கனிமச் செயற்முறை, இரும்பு, எஃகு, அலுமினியம், பிற மாழைகள், நிலக்கரி; பொறிகள் அமைத்தல்; போர்த்தளவாடங்கள்; துணியும் உடையும்; பாறைநெய்; சிமென்ட்; வேதிப்பொருட்கள்; உரங்கள்; காலணிகள், பொம்மைகள், மின்னணுப் பொருட்கள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்கள்; உணவுப் பதப்படுத்தல்; தானுந்துகள், தொடர்வண்டிப் பெட்டிகளும் தொடர்வண்டிப் பொறிகளும், கப்பல்கள், வானூர்திகள் உள்ளிட்ட போக்குவரத்துத் தளவாடங்கள்t; தொலைத்தொடர்பு பொருட்கள், வணிக விண்வெளி ஏவூர்திக் கலங்கள், செய்மதிகள் |
தொழில் செய்யும் வசதிக் குறியீடு | 90வது (2015)[10] |
வெளிக்கூறுகள் | |
ஏற்றுமதி | $2.34 டிரில்லியன் (2014[11]) |
ஏற்றுமதிப் பொருட்கள் | தரவுச் செயற்பாடு பொறிகள், உடைகள், துணிகள், இரும்பும் எஃகும், ஒளியியல் மற்றும் மருத்துவச் சாதனங்கள் உள்ளிட்ட மின்னியல் மற்றும் பிறப் பொறிகள். தொழிற்றுறை பொருட்களின் அனைத்துப் பகுப்புகளிலும் |
முக்கிய ஏற்றுமதி உறவுகள் | ஐக்கிய அமெரிக்கா 16.9% ஆங்காங் 15.5% சப்பான் 6.4% தென் கொரியா 4.3% (2014 est.)[12] |
இறக்குமதி | $1.96 டிரில்லியன் (2014[11]) |
இறக்குமதிப் பொருட்கள் | மின்னியல் மற்றும் பிறப் பொறிகள், எண்ணெய் மறும் கனிம எரிபொருட்கள், ஒளியியல் மறும் மருத்துவச் சாதனங்கள், மாழைக் கனிமங்கள், நெகிழிகள், கரிமச் சேர்மங்கள் |
முக்கிய இறக்குமதி உறவுகள் | தென் கொரியா 9.7% சப்பான் 8.3% ஐக்கிய அமெரிக்கா 8.1% சீனக் குடியரசு 7.8% செருமனி 5.4% ஆத்திரேலியா 5% (2014 est.)[13] |
வெளிநாட்டு நேரடி முதலீடு | $1.344 டிரில்லியன் (2012)[14] |
மொத்த வெளிக்கடன் | $863.2 billion (2013) |
பொது நிதிக்கூறுகள் | |
பொதுக் கடன் | மொ.உ.உற்பத்தியில் 14.95% (2015 மதிப்பீடு.)[15] |
வருவாய் | $2.118 டிரில்லியன் (2013 மதிப்.) |
செலவினங்கள் | $2.292 டிரில்லியன் (2013 மதிப்.) |
கடன் மதிப்பீடு | AA- (உள்நாடு) AA- (வெளிநாடு) AA- (டி&சி மதிப்பீடு) (இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு)[16] |
அந்நியச் செலாவணி கையிருப்பு | ▼ $3.3 டிரில்லியன் (முதல்; மார்ச் 2015)[17] |
Main data source: CIA World Fact Book ' |
சீன மக்கள் குடியரசின் சோசலிச சந்தைப் பொருளாதாரம்[18]அனைத்துலக நாணய நிதியத்தின்படி பெயரளவு மொ.உ.உற்பத்தியின்படி உலகின் இரண்டாவது பெரும் பொருளாதாரமாகும்;[4][19] கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையில் உலகின் மிகப் பெரிய பொருளாதாரமும் ஆகும்.[20] சீனாவின் தேசியப் புள்ளியியல் ஆணையம் இதனை மறுத்துள்ளது.[21] 2015 வரை[22] சீனா உலகின் மிக விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருந்தது; கடந்த 30 ஆண்டுகளாக சீனாவின் வளர்ச்சி வீதம் சராசரியாக 10%ஆக இருந்துள்ளது.[23] வரலாற்று மற்றும் அரசியல் காரணங்களால் இப்பொருளாதார வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.[24][25]
தயாரிப்புகளுக்கான உலக மையமாகவும் உலகின் மிகப்பெரிய தயாரிப்புப் பொருளாதாரமாகவும் விளங்குகின்றது; உலகில் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் மிகப்பெரும் பொருளாதாரமாகவும் விளங்குகின்றது.[26] தவிரவும் உலகின் மிக விரைவாக வளரும் நுகர்வோர் சந்தையாகவும் இரண்டாம் நிலையிலுள்ள இறக்குமதியாளராகவும் சீனா விளங்குகின்றது.[27] சீனா சேவைப் பொருட்களை நிகர இறக்குமதி செய்யும் நாடாகவும் உள்ளது.[28]
சீனா உலகின் மிகப்பெரிய வணிகமாற்று நாடாகவும் உள்ளது. பன்னாட்டு வணிகத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.[29] அண்மைய ஆண்டுகளில் வணிக அமைப்புகளிலும் உடன்பாடுகளிலும் கூடுதலாக பங்கேற்று வருகின்றது. 2001இல் உலக வணிக அமைப்பில் உறுப்பினராக சேர்ந்துள்ளது.[30] பல நாடுகளுடன் தளையற்ற வணிக உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளது; ஆத்திரேலியா, தென்கொரியா, ஆசியான், சுவிட்சர்லாந்து மற்றும் பாக்கித்தான் நாடுகளுடன் இத்தகைய வணிக உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.[31]
அனைத்துலக நாணய நிதியம் (IMF) அறிக்கையின்படி தனி நபர் வருமானம் அடிப்படையிலான தரவரிசையில் சீனா 2014இல் பெயரளவு மொ.உ.உற்பத்தியில் 77வதாகவும் கொள்வனவு ஆற்றல் சமநிலைப்படி 89ஆகவும் உள்ளது. சீனாவின் கடலோர மாகாணங்களான செஜியங், ஜியங்சு, புஜியான் மற்றும் முக்கியமாக குவாங்டாங் மிகவும் தொழில்மயமாயுள்ளன; உள்ளகத்தில் உள்ள மாகாணங்கள் குறைந்த பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ளன. சீனாவின் பொருளாதார முக்கியத்துவம் வளர்ந்துள்ள நிலையில் அதன் பொருளாதார நலன் குறித்தும் கட்டமைப்புக் குறித்தும் கவனிக்கப்படுகின்றது.[32][33]
சீனாவின் சூழலியல் மாசிற்கான நீண்டநாள் சமூகப் பொருளாதாரச் செலவை தவிர்க்க[34][35][36] வானிலை மாற்றம் மற்றும் சூழலியலுக்கான கிரந்தாம் ஆய்வுக் கழகத்தின் நிக்கோலசு இசுடெர்னும் பெர்குசு கிரீனும் சீனாவின் பொருளாதாரம் உயர்நிலைத் தொழினுட்பம் சார்ந்தும் குறைந்த கரிம வெளிப்பாட்டையும் ஆய்வு மற்றும் புதுமை சார்ந்ததுமான தேசிய மேம்பட்ட தொழில் வளர்ச்சியையும் தழுவ வேண்டும் எனவும் கனரக தொழில் மீதான சார்பை குறைக்கவும் பரிந்துரைத்துள்ளனர். இது மைய அரசின் பொருளாதார திட்ட நோக்கங்களுடன் ஒத்துள்ளது.[37]
சீ சின்பிங்கின் சீனக் கனவு "இரண்டு 100களை" சாதிக்க திட்டமிட்டுள்ளது: சீனப் பொதுவுடமைக் கட்சியின் நூற்றாண்டு விழா ஆண்டான 2021இல் தேவைகளில் நிறைவேற்றுவதில் "கூடியளவில் நல்லநிலையிலுள்ள சமூகமாக" முன்னேற்றுவது; மக்கள் குடியரசை நிறுவிய நூற்றாண்டு விழா ஆண்டான 2049இல் நவீனமயமாக்கலில் முழுமையும் வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறுவது.[38]
சீனப் பொருளாதாரத்தின் உலகமயமாக்கலால் 2005ஆம் ஆண்டு அலுவல்முறையாக வெளியிடப்பட்ட சீரான பொருளாதார முன்னறிவிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. 2010களின் துவக்கத்தில் சீனா தே.உ.உ (கொ.ஆ.ச) $10-டிரில்லியனை எட்டிய முதல் ஆசிய நாடானது; ஐக்கிய அமெரிக்காவுடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் சமநிலை எட்டியது.[39] As China's economy grows, so does China's ரென்மின்பி, which undergoes the process needed for its internationalization.[40] 2015இல் சீனப் பொருளாதாரம் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை துவக்கியுள்ளது.
மேற்கத்திய ஊடகங்களால் சீனா முறையற்ற வணிக செயற்முறைகளைப் பின்பற்றுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது; செயற்கையான நாணயமாற்று வீத குறைப்பு, அறிவுசார் சொத்துத் திருட்டு, பாதுகாப்புவாதம், உள்ளூர் சார்பு பற்று குறித்தும் சீனப் பொதுவுடமைக் கட்சி முற்றுரிமை, சீனப் பண்பாட்டுடனான சோசலிசம் குறித்தும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.[41][42][43][44]
2015இல் சீனப் பொருளாதாரம் "மந்தப்படுத்தப் படுவதாகவும்" ஆனால் இது பொருளாதார வளர்ச்சி வீதத்தை மட்டுப்படுத்துவதன்றி எந்தப் பொருளியல் பின்னடைவையும் குறிக்கவில்லை என விளக்கப்பட்டுள்ளது.[22] அடிப்படை எஃகு, சிமென்ட் தொழிற்சாலைகளின் கூடுதல் திறனளவைக் குறைக்கவும்,[45] விற்பனை குறைகின்ற தானுந்துகிளன் தயாரிப்பைக் குறைக்கவும்[46] இவ்வாறு மட்டுப்படுத்தப்படுகின்றது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Report for Selected Countries and Subjects". World Economic Outlook Database, அனைத்துலக நாணய நிதியம். April 2015. பார்க்கப்பட்ட நாள் 14 April 2015.
- ↑ "China's Growth Slows to 6.9%".
- ↑ Ylan Q. Mui (23 October 2015). "Economists are starting to warn about the risk of a new U.S. recession". The Washington Post. http://www.washingtonpost.com/news/wonkblog/wp/2015/10/23/economists-are-starting-to-sound-alarm-about-the-risk-of-a-new-u-s-recession/. பார்த்த நாள்: 24 October 2015. "Outside economists believe the country’s growth rate may be as low as 3 percent...."
- ↑ 4.0 4.1 "China". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் October 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "GDP - COMPOSITION, BY SECTOR OF ORIGIN". CIA World Factbook. CIA World Factbook. Archived from the original on 11 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.
- ↑ "Inflation in China jumps to 6-month high". National Bureau of Statistics. பார்க்கப்பட்ட நாள் 11 January 2013.
- ↑ "Labor force, total". World Bank. World Bank. பார்க்கப்பட்ட நாள் 2 September 2014.
- ↑ "Theglobeandmail.com". Toronto: Theglobeandmail.com இம் மூலத்தில் இருந்து 4 பிப்ரவரி 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110204094749/http://www.theglobeandmail.com/report-on-business/economy/more-than-meets-eye-in-chinas-advance/article1674031/. பார்த்த நாள்: 28 February 2012.
- ↑ "Report results". http://www.stats.gov.cn/. Archived from the original on 15 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 20 June 2012.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ "Doing Business in China 2014" (PDF). உலக வங்கி.
- ↑ 11.0 11.1 "China 2014 trade surplus rockets to record high". menafn.com.
- ↑ "Export Partners of People Republic of China". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2013. Archived from the original on 12 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 2 April 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Import Partners of People Republic of China". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2013. Archived from the original on 6 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 April 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Foreign Direct Investment in China". US-China Business Council. Archived from the original on 2013-06-24. பார்க்கப்பட்ட நாள் 2015-11-18.
- ↑ Public debt, IMF, accessed on 21 February 2013.
- ↑ "Sovereigns rating list". Standard & Poor's. பார்க்கப்பட்ட நாள் 26 May 2011.
- ↑ "中国人民银行 - 黄金和外汇储备 (Gold & Foreign Exchange Reserves)". pbc.gov.cn.
- ↑ "The Changing of the Guard: China's New Leadership". INSEAD Knowledge.
- ↑ "GDP ranking". worldbank.org.
- ↑ "Report for Selected Countries and Subjects". Imf.org. April 2014. பார்க்கப்பட்ட நாள் 12 April 2014.
- ↑ "China denies being world's No.1 economy".
- ↑ 22.0 22.1 Nelson D. Schwartz and Rachel Abrams (24 August 2015). "Advisers Work to Calm Fearful Investors". The New York Times. http://www.nytimes.com/2015/08/25/business/dealbook/advisers-work-to-calm-fearful-investors.html. பார்த்த நாள்: 25 August 2015. "Even the most pessimistic observers think China will still grow by 4 or 5 percent"
- ↑ "Report for Selected Countries and Subjects". Imf.org. 16 April 2013. பார்க்கப்பட்ட நாள் 16 April 2013.
- ↑ uscc.org.
- ↑ mansfieldfdn.org பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "China Widens Lead as World's Largest Manufacturer". thomasnet.com.
- ↑ "China: Fastest Growing Consumer Market in the World". iMFdirect - The IMF Blog.
- ↑ intracen.org.
- ↑ Angela Monaghan. "China surpasses US as world's largest trading nation". the Guardian.
- ↑ "WTO - China - Member information". wto.org.
- ↑ "China, Switzerland sign free trade agreement". eubusiness.com. Archived from the original on 2016-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-11-18.
- ↑ USChinaInstitute. "2011 presentations on the state of the Chinese economy (USC US-China Institute's YouTube channel)". Youtube.com. பார்க்கப்பட்ட நாள் 28 February 2012.
- ↑ "2011 USC US-China Institute conference on the State of the Chinese Economy, complete schedule and presentations". China.usc.edu. பார்க்கப்பட்ட நாள் 28 February 2012.
- ↑ site resources.world bank.org.
- ↑ cfr.org பரணிடப்பட்டது 2015-08-20 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ https://www.washingtonpost.com/world/worst-air-pollution-in-china-and-the-us/2014/02/02/6362127e-8c5b-11e3-833c-33098f9e5267_graphic.html
- ↑ http://www.lse.ac.uk/GranthamInstitute/wp-content/uploads/2014/05/Green-and-Stern-policy-paper-May-20141.pdf '...China is...planning to grow its high technology and high value-added industries. It is championing seven “strategic emerging industries”: energy efficient and environmental technologies; new energy; new-energy vehicles; next generation information technology; biotechnology; advanced equipment manufacture; and new materials.'
- ↑ "Xi Jinping's Chinese Dream". The New York Times. 4 June 2013. http://www.nytimes.com/2013/06/05/opinion/global/xi-jinpings-chinese-dream.html?pagewanted=all&_r=0.
- ↑ "Chinese industrial growth slows again". BBC News. 11 August 2010. http://www.bbc.co.uk/news/business-10936024. பார்த்த நாள்: 16 November 2013.
- ↑ http://www.brookings.edu/~/media/research/files/papers/2013/04/china-global-currency-financial-reform-kroeber/china-global-currency-financial-reform-kroeber.pdf
- ↑ http://www.ipcommission.org/report/IP_Commission_Report_052213.pdf
- ↑ "Trust-busting in China: Unequal before the law? - The Economist". The Economist.
- ↑ http://www.citizenstrade.org/ctc/wp-content/uploads/2011/05/20090428_chinamoreprotectionist_wsj.pdf
- ↑ Lingling Wei (27 February 2014). "China's Central Bank Engineered Yuan's Decline - WSJ". WSJ.
- ↑ Michael Schuman (28 August 2015). "Zombie Factories Stalk the Sputtering Chinese Economy". The New York Times. http://www.nytimes.com/2015/08/30/business/international/zombie-factories-stalk-the-sputtering-chinese-economy.html. பார்த்த நாள்: 29 August 2015. "...Changzhi’s cement plants are saddled by excess capacity. Companies in the province can produce three times as much cement as what was actually needed in 2014...."
- ↑ Zhu Shiyun, Bao Zhiming, and Han Wei (2 September 2015). "Automakers, Dealers Struggle with Sales Slump". Caixin. http://english.caixin.com/2015-09-02/100845989.html. பார்த்த நாள்: 6 September 2015.
குறிப்புகள்
[தொகு]வெளி இணைப்புகளும் மேற் படிப்பிற்கும்
[தொகு]- China Economic Information Network (CEInet) under the SIC
- China Monitor is the International presence of the SIC's CEInet பரணிடப்பட்டது 2017-09-14 at the வந்தவழி இயந்திரம்
- Chinability Background and statistics on China's economy and business climate.
- China's Creative Industries பரணிடப்பட்டது 2016-01-28 at the வந்தவழி இயந்திரம் a market design analysis of China's creative economy.
- Chinability Blog பரணிடப்பட்டது 2016-11-04 at the வந்தவழி இயந்திரம் Up-to-date analysis of the Chinese economy.
- China on the World Stage from the Dean Peter Krogh Foreign Affairs Digital Archives
- Asian Development Bank, China பரணிடப்பட்டது 2010-04-24 at the வந்தவழி இயந்திரம்
- China Economy (China Economic Information Network). News stories and subscriber-only market analysis for various sectors of the country's economy.
- The State of the Chinese Economy USC U.S. China Institute 2011 conference on the structure, health, and future of China's economy. Twenty leading analysts examined the macroeconomic situation, worries about property bubbles and debt accumulation, labor and human capital trends, and the challenges posed by the health care and pension needs of an aging population. யூடியூபில் USChinaInstitute காணொளி.
- China's economy. Articles By Subject. Economist.com
- China Economic Net
- China Economic Review
- Far Eastern Economic Review பரணிடப்பட்டது 2006-07-20 at the வந்தவழி இயந்திரம் Dow Jones' monthly magazine on Asia. For valuable insights on Asia's business and political development. With search and 58-year archive.
- Chinese Economy China Daily Special Coverage
- Financial Times, China
- The New York Times series "Choking on Growth"
- "Goldman Sachs Downgrades China’s Economy" Stocknewsdesk