சீனப் பொதுவுடமைக் கட்சியின் அரசியல் நிலைக்குழு
சீனப் பொதுவுடமைக் கட்சியின் அரசியல் நிலைக்குழு, (Politburo Standing Committee of the Chinese Communist Party) என்பது சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவாகும். இதன் 7 உறுப்பினர்களை சீனப் பொதுவுடமைக் கட்சியின் நடுவண் செயற்குழு தேர்வு செய்கிறது. இக்குழு சீனப் பொதுவுடமைக் கட்சியின் அரசியல் பணியகத்திற்கு அறிக்கை செய்ய கடமைப்பட்டுள்ளது.
செயல்பாடுகள்
[தொகு]அரசியல் நிலைக்குழுவானது மிக உயர்பதவிகளில் உள்ள அதிகாரிகளைக் கொண்டது. இது சீனப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் சீன மக்கள் குடியரசின் மிக உயர்ந்த அரசியல் முடிவெடுக்கும் அமைப்பாகும். நிலைக்குழு உறுப்பினர்களே சீனாவில் அரசியல் அதிகாரத்தின் மையமாக உள்ளனர்[1](பக்.57) .
அமைப்பு ரீதியாக அரசியல் நிலைக்குழுவின் கீழ் சீனப் பொதுவுடமைக் கட்சியின் அரசியல் பணியகம் மற்றும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்தியக் குழுவின் செயலகம் உள்ளது. கட்சியின் அரசியலமைப்பின்படி, கட்சியின் சீனப் பொதுவுடமைக் கட்சியின் நடுவண் செயற்குழு ஒரு முழுமையான அமர்வின் போது அரசியல் நிலைக்குழுவை தேர்ந்தெடுக்கிறது.[2]மத்தியக் குழுவின் பொதுச் செயலாளர் நிலைக்குழுவிலும் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும் கட்சியின் அரசியலமைப்பு குறிப்பிடுகிறது.
அரசியல் நிலைக்குழுவின் கூட்டங்களைக் கூட்டுவதற்கும், அதன் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பதற்கும் பொதுச் செயலாளர் பொறுப்பு வகிக்கிறார். நிலைக்குழு ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் கூடுகிறது, இருப்பினும் அதன் கூட்டங்கள் அரிதாகவே பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றன.[3] அரசியல் நிலைக்குழுவின் நிலைக்குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை தற்போது ஏழு பேராக உள்ளது.[4] அரசியல் நிலைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் தேசிய அளவிலான தலைவர்கள் ஆவர்.
19வது சீனப் பொதுவுடமைக் கட்சியின் நடுவண் செயற்குழுவின் அமர்வுக்குப் பிறகு, அக்டோபர் 2017ல் நடைபெற்ற ஒரு அரசியல் குழு கூட்டத்தில், சீனப் பொதுவுடைமைக் கட்சியின் செயலகம், மத்திய ஒழுங்கு ஆய்வுக் குழு, தேசிய மக்கள் பேராயம் நிலைக்குழுவின் முன்னணி கட்சி உறுப்பினர்கள் குழு, அரசவையின் முன்னணி கட்சி உறுப்பினர்கள் குழு, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் முன்னணி கட்சி உறுப்பினர்கள் குழு, உச்ச மக்கள் நீதிமன்றத்தின் முன்னணி கட்சி உறுப்பினர்கள் குழு மற்றும் உச்ச மக்கள் வழக்கறிஞர் அலுவலகத்தின் முன்னணி கட்சி உறுப்பினர்கள் குழு ஆகியவை தங்கள் பணிகளை ஒவ்வொரு ஆண்டும் அரசியல் குழுவிற்கும் அதன் அரசியல் நிலைக்குழுவிற்கும் அறிக்கை செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.[5]
இதனையும் காண்க
[தொகு]- சீனப் பொதுவுடமைக் கட்சி
- சீனப் பொதுவுடமைக் கட்சியின் தேசிய பேராயம்
- சீனப் பொதுவுடமைக் கட்சியின் நடுவண் செயற்குழு
- சீனப் பொதுவுடமைக் கட்சியின் அரசியல் பணியகம்
- சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்தியக் குழுவின் செயலகம்
- சீன மத்திய இராணுவ ஆணையம்
- மக்கள் விடுதலை இராணுவம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Li, David Daokui (2024). China's World View: Demystifying China to Prevent Global Conflict. New York, NY: W. W. Norton & Company. ISBN 978-0393292398.
- ↑ "Chapter III Central Organizations of the Party – Article 22". China Internet Information Center. Archived from the original on 18 October 2007. Retrieved 26 March 2013.
- ↑ "Decoding Chinese Politics: Party Center". Asia Society. Retrieved 11 October 2024.
- ↑ "The Chinese Communist Party". Council on Foreign Relations (in ஆங்கிலம்). Retrieved 2023-09-24.
- ↑ (in zh). 2017-10-27 இம் மூலத்தில் இருந்து 2020-11-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201109125251/http://www.xinhuanet.com/politics/19cpcnc/2017-10/27/c_1121868508.htm. பார்த்த நாள்: 2019-02-28.