சீதா மலை
சீதா மலை | |
|---|---|
| ஆள்கூறுகள்: 11°50′12″N 76°12′03″E / 11.83677°N 76.20083°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளா |
| மாவட்டம் | வயநாடு |
| நேர வலயம் | ஒசநே+5:25 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீடு | 673579 |
சீதா மலை (Seetha Mount) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் புல்பள்ளி என்ற இடத்திற்க்கு அருகே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும்.[1]
அமைவிடம்
[தொகு]சீதா மலை, புல்பள்ளியிலிருந்து கபினிகிரி கிராமத்திற்குச் செல்லும் சாலையில் கபினி என்ற நதிக்கரையில் சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. [2]
அடையாளச் சின்னங்கள்
[தொகு]இக்கிராமத்தில் ஒரு பெரிய தேவாலயம் அமைந்துள்ளது. மேலும் அருகில் ஒரு சிறிய பள்ளியும் உள்ளது. இந்த கிராமத்தின் அஞ்சல் குறியீடு 673579 [3] ஆகும்.
போக்குவரத்து
[தொகு]சீதா மலை கிராமம் புல்பள்ளி நகரத்திற்கு அருகில் உள்ளது. இங்கு மனந்தவாடியிலிருந்து செல்லலாம். நீலம்பூர் என்ற ஊரிலுருந்து ஊட்டிக்கு செல்லும் சாலை மேப்படி கிராமம் வழியாக வயநாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வூரின் அருகில் மைசூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரின் அருகிலுள்ள விமான நிலையங்கள் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் 120 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பெங்களூரு சர்வதேச விமான நிலையம் - 290 கி.மீ தொலைவிலும் மற்றும் கண்ணூர் சர்வதேச விமான நிலையம் - 58 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளன.
படங்கள்
[தொகு]-
கபிலா
-
தேவாலயம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Seetha Mount, Wayanad, 673579 street location google map | Pincode, Street and address finder". myspouse.in. Retrieved 2016-05-01.
- ↑ "You seem to be using an unsupported browser". google.com. Retrieved 2016-05-01.
- ↑ "Seetha Mount Wayanad Kerala Pincode". pincodebox.in. Retrieved 2016-05-01.