உள்ளடக்கத்துக்குச் செல்

சீதா நவமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதா நவமி
பூமியிலிருந்து சீதா தேவி தோன்றியதைக் குறிக்கும் காட்சி
பிற பெயர்(கள்)ஜானகி நவமி, சீதா ஜெயந்தி, ஜானகி ஜெயந்தி,
வகைசீதா நவமி
அனுசரிப்புகள்பூசை, விரதம்
நாள்16 மே 2024
நிகழ்வுஆண்டுதோறும்

சீதா நவமி (Sita Navami) என்பது இந்து சமயத்தில் மிகவும் பிரபலமான தெய்வங்களில் ஒருவரும், இலட்சுமி தெய்வத்தின் அவதாரமுமான சீதா தெய்வத்தின் பிறப்பைக் கொண்டாடும் ஓர் இந்துப் பண்டிகையாகும். இது இந்து மாதமான வைகாசியில் சுக்ல பக்ஷத்தின் (முதல் சந்திர பதினைந்து நாட்கள்) நவமியில் (ஒன்பதாம் நாள்) கொண்டாடப்படுகிறது.[1]

புராணக்கதை

[தொகு]

இராமாயணத்தின்படி, குழந்தை சீதா, மிதிலா இராச்சியத்தில் ஒரு தெய்வீக மண் பானையிலிருந்து ஒரு பண்ணை வயலிலிருந்து மன்னர் சிரத்வஜ ஜனகர், இராணி சுனயனா ஆகியோருக்குத் தோன்றினார் அல்லது வெளிப்பட்டார்.[2] பிராந்திய மரபின் படி, இந்த இடம் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சீதாமரி மாவட்டத்தின் புனௌரா தாம் பகுதியில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இராமாயணத்தில் வைகாசி மாதப் பூச நட்சத்திரத்தில் சுக்ல நவமியின் ஒன்பதாம் நாளாகக் குழந்தை சீதை அவதரித்த தேதியும் நேரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மன்னர் சிரத்வஜ சனகர் கலப்பையால் நிலத்தை உழுதபோது, இவரது கலப்பையின் ஒரு பகுதி பூமியில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த இடத்தைத் தோண்டியபோது, ஒரு மண் பானையில் ஒரு பெண் குழந்தை இருப்பதைக் கண்டார், சனகர். கலப்பையின் ஒரு முனை சீதா என்று அழைக்கப்படுகிறது. எனவே அந்தப் பெண்ணுக்கு சீதா என்று பெயரிடப்பட்டு மன்னரின் மகளாகத் தத்தெடுக்கப்பட்டார்.[3] பின்னர் சீதா விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமரை மணந்தார். சீதை தனது கணவனிடம் காட்டிய விசுவாசம், பக்தி, தியாகத்திற்காக மதிக்கப்படுகிறார். இவர் பெண்மையின் சுருக்கமாகக் கருதப்படுகிறார். மேலும் இந்தியத் துணைக் கண்டத்தில் சிறந்த மனைவியாகவும் தாயாகவும் கருதப்படுகிறார்.[3]

விளக்கம்

[தொகு]

சீதா நவமி என்பது சீதையின் தோற்றம் அல்லது வெளிப்பாட்டின் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. சீதா நவமியின் போது, திருமணமான பெண்கள் தங்கள் கணவர்களின் நீண்ட ஆயுளுக்காக விரதம் இருப்பார்கள்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sita Navami 2024: Plant Parijat for happiness and prosperity". The Times of India. 2024-04-30. https://timesofindia.indiatimes.com/astrology/others/sita-navami-2024-plant-parijat-for-happiness-and-prosperity/articleshow/109722562.cms. 
  2. Publishing, Bloomsbury (2011-09-13). Religious Celebrations: An Encyclopedia of Holidays, Festivals, Solemn Observances, and Spiritual Commemorations [2 volumes] (in ஆங்கிலம்). Bloomsbury Publishing USA. p. 457. ISBN 978-1-59884-206-7.
  3. 3.0 3.1 "Sita Navami 2023: Date, history, significance and all you need to know". The Economic Times. 2023-04-28. https://economictimes.indiatimes.com/news/new-updates/sita-navami-2023-date-history-significance-and-all-you-need-to-know/articleshow/99841620.cms?from=mdr. 
  4. "Sita Navami 2024 : सीता नवमी कब है? नोट कर लें डेट, पूजा- विधि, शुभ मुहूर्त और महत्व". Hindustan (in இந்தி). Retrieved 2024-05-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதா_நவமி&oldid=4207152" இலிருந்து மீள்விக்கப்பட்டது