சீதா தேவதாஸ்

சீதா தேவதாசு (Seeta Deva Doss) இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற தென்னிந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் ஆவார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை, கல்வி
[தொகு]1900 பிற்பகுதியில் பிறந்த சீதா, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான டே. மு. தேவதாசின் மகளாவார். இவரது தாய் மாசிலாமணி செல்லம்மாள் ஆவார்.[2]
சென்னை, எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் பள்ளியில் கல்வி பயின்று மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்லூரி கல்வியினை முடித்த பின்னர் மேல்படிப்புக்கு இங்கிலாந்து சென்றவர். இங்கிலாந்தின் கேம்பிரிட்ச்சியிலுள்ள கிர்டன் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
சட்டத்திருத்தம்
[தொகு]ஏப்ரல் 2, 1923 அன்று பெண்களும் வழக்கறிஞர்கள் ஆகலாம் என்ற சட்டத் திருத்தம், ஹரி கோர் என்ற பாரிஸ்டரின் தீவிர முயற்சியால் இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. 1928-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் இன்னர் டெம்பிள்[3] எனப்படும் பாரிஸ்டர் சங்கத்தில் பதிவு செய்து கொண்டார். இன்னர் டெம்பிள் பதிவு செய்து கொண்டவர்கள், இங்கிலாந்து, இங்கிலாந்து ஆளுமையின் கீழுள்ள நாடுகளில் வழக்கறிஞராகப் பணியாற்றலாம். இதே ஆண்டு இந்தியா திரும்பிய சீதா, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கழகத்தில் அக்டோபர் மாதம் பதிவு செய்துகொண்டார். அதேசமயம் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று தேர்ந்த முதல் பெண்ணான பி. ஆனந்தாபாய் பதிவு செய்ய வழக்கறிஞர் கழகம் அனுமதி மறுத்தது. தொடர் போராட்டத்துக்குப் பின் 22 ஏப்ரல் 1929-ஆம் ஆண்டு, அவரும் பதிவு செய்து கொள்ள முடிந்தது.[1]
பணி
[தொகு]சீதா, ஜான் & ராவ் என்ற சட்ட நிறுவனத்தில் பணியமர்ந்தார்.[1] சீதா வாதாடிய பிரபலமான வழக்கு திருவல்லிக்கேணி கொலை வழக்காகும். இந்திய மாதர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராகவும் தன்னார்வப் பணியாற்றினார். 1936-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியப் பெண்கள் சங்கம் பதினொன்றாவது மாநாட்டில் மதராஸ் மாகாணத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார் சீதா.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 லூயிஸ், நிவேதிதா (2021). முதல் பெண்கள் (2nd ed.). மைத்ரி பதிப்பகம். p. 92.
- ↑ "Madras Musings - We care for Madras that is Chennai". archive.madrasmusings.com. Retrieved 2025-03-21.
- ↑ "The Inner Temple". www.innertemple.org.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2025-03-21.