சீதாநதி வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீதாநதி வனவிலங்கு சரணாலயம் (Sitanadi Wildlife Sanctuary) இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள [[தம்தரி மாவட்டம்|தம்தரி மாவட்டத்தில்]] அமைந்துள்ளது [1]. வன விலங்கு ஆர்வலர்களை, சீதாநதி வனவிலங்கு சரணாலயம் ஆண்டு முழுவதும் கவர்ந்திழுக்கும் ஒரு பிரபலமான சரணலாயமாகும். வன உயிர் பாதுகாப்புச் சட்டம் 1972 இன் படி இச்சரணாலயம் 1974 இல் நிறுவப்பட்டது. 556 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் கடல் மட்டத்திலிருந்து 327 மற்றும் 736 மீட்டர்களுக்கு இடைப்பட்ட உயரத்தில் இச்சரணாலம் அமைந்துள்ளது. சீதாநதி இச்சரணாலாயத்தில் தோன்றி பாய்ந்து தியோகட்டுக்கு அருகில் மகாநதியுடன் இணைகிறது. சீதாநதியின் பெயர் இச்சரணாலயத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது. சீதாநதி வனவிலங்கு சரணாலயம் அதன் பசுமையான தாவரங்கள் மற்றும் செழித்த பல்வேறு விலங்கினங்களால் அறியப்படுகிறது. தனிப்பட்ட மற்றும் பல்வேறு வகையான சிறப்புகளைப் பெற்ற இச்சரணாலயம் மத்திய இந்தியாவில் சிறந்த வன விலங்கு சரணாலயமாக வெளிப்படுவதற்கு பெரும் சாத்தியங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sitanadi Wildlife Sanctuary". Tourism of Chhattisgarh. பார்த்த நாள் 10 March 2016.

புற இணைப்புகள்[தொகு]