சீதல் மகாஜன்
சீதல் மகாஜன் | |
|---|---|
| துணைவர் | வைபவ் ராணே |
| பிள்ளைகள் | 2 |
| விருதுகள் | பத்மசிறீ டென்சிங் நோர்கே தேசிய சாகச விருது |
சீதல் மகாஜன் ராணே (Shital Mahajan Rane, பிறப்பு: 19 செப்டம்பர் 1982) என்பவர், இந்தியாவைச் சேர்ந்த சாகச விளையாட்டு, விண்வீழ் விளையாட்டு வீராங்கனை ஆவார். விண்வீழ் விளையாட்டுத் துறையில் எட்டு உலகச் சாதனைகளைப் படைத்துள்ளார். அண்டார்டிகா பகுதியில் 10,000 அடி உயரத்திலிருந்து வேகப்படுத்தப்பட்ட இயல் வீழ்ச்சிக் குதிப்பை நிகழ்த்திய முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் வட துருவம் மற்றும் தென் துருவம்[1] ஆகிய இரண்டிலும் குதித்த இளைய பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இச்சாதனைகளுக்காக இந்திய அரசு இவருக்கு 2011 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருதை வழங்கியது.[2]
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]சீதல் மகாஜன் 1982 செப்டம்பர் 19 அன்று மகாராட்டிர மாநிலத்தில் பிறந்தார்.[3] இவரது பெற்றோர் மம்தா மகாஜன், கமலாகர் மகாஜன் (டாட்டா மோட்டார்சில் பணிபுரிபவர்) ஆவர். [4][5]புனேயிலுள்ள பெர்குசன் கல்லூரியில் புவியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[6][7] 2004ஆம் ஆண்டு வட துருவத்தில் தனது முதல் வான்குடைக் குதிப்பை மேற்கொண்டார். பின்னர் பல்வேறு சர்வதேச விண்வீழ் விளையாட்டுச் சாதனைகளை நிகழ்த்தினார்.[8][9]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சீதல் மகாஜன், பின்லாந்தில் பணியாற்றிய மென்பொருள் பொறியாளர் வைபவ் ராணேவை 2008ஆம் ஆண்டுத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் தரையிலிருந்து சுமார் 600 அடி உயரத்தில் பறந்த சூடான காற்றுப் பலூனில் நடைபெற்றது.[10][11] இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.[12]
தொழில்வாழ்க்கை
[தொகு]2012 ஆம் ஆண்டு புனேயில் பீனிக்ஸ் விண்வீழ் விளையாட்டு அகாதமி என்ற பயிற்சி மையத்தை நிறுவினார். இந்த மையம் விண்வீழ் விளையாட்டு பயிற்சி மற்றும் சர்வதேச போட்டிகளுக்கானத் தயாரிப்புகளை வழங்கி வருகிறது.[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "One India". One India. 20 December 2006. Retrieved 23 November 2014.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on 19 அக்டோபர் 2017. Retrieved 11 November 2014.
- ↑ "Limca Book of World Records". Limca Book of World Records. 2014. Archived from the original on 6 டிசம்பர் 2014. Retrieved 23 November 2014.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Woodland". Woodland. 2014. Archived from the original on 29 நவம்பர் 2014. Retrieved 24 November 2014.
- ↑ "DNA 1". DNA India. 26 December 2005. Retrieved 24 November 2014.
- ↑ "Tribune India". Tribune India. 20 January 2007. Retrieved 23 November 2014.
- ↑ "NRI Internet". NRI Internet. 9 December 2006. Retrieved 24 November 2014.
- ↑ "Mid Day". Mid Day. 6 September 2014. Retrieved 23 November 2014. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Marathi Wikipedia". Marathi Wikipedia. 2014. Retrieved 24 November 2014.
- ↑ "IBN Live". IBN Live. 19 April 2008. Archived from the original on 23 November 2014. Retrieved 23 November 2014.
- ↑ "NRI Internet". NRI Internet. 9 December 2006. Retrieved 24 November 2014.
- ↑ "Indian Family, Including Twins, Skydives Over Amsterdam, Sets New Record". NDTV.com. Retrieved 2021-02-10.
- ↑ "Phoenix about". Phoenix. 2014. Retrieved 24 November 2014.