சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு (திரை இசைத் தொகுப்பு)
| சீத்தம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு | ||||
|---|---|---|---|---|
ஒலிப்பதிவு
| ||||
| வெளியீடு | 7 டிசம்பர் 2012 | |||
| ஒலிப்பதிவு | 2012 | |||
| இசைப் பாணி | திரைப்பட ஒலிப்பதிவு | |||
| நீளம் | 27:29 | |||
| மொழி | தெலுங்கு | |||
| இசைத்தட்டு நிறுவனம் | ஆதித்தியா மியூசிக்கு | |||
| இசைத் தயாரிப்பாளர் | மிக்கி ஜே மேயர் | |||
| மிக்கி ஜே மேயர் காலவரிசை | ||||
| ||||
சீத்தம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு (Seethamma Vakitlo Sirimalle Chettu (soundtrack)) என்பது வெங்கடேசு, மகேஷ் பாபு, அஞ்சலி மற்றும் சமந்தா ருத் பிரபு ஆகியோர் நடித்த சீதம்மா வகிட்லோ சிரிமல்லி செட்டு என்ற இதே பெயரில் 2013 ஆம் ஆண்டு வெளியான குடும்ப-நாடகத் திரைப்படத்தின் திரை இசைத் தொகுப்பு ஒலிப்பதிவு ஆகும். சிறீகாந்த் அட்டாலா இயக்கிய, படத்தின் இசையை மிக்கி ஜே மேயர் அமைத்தார். இது சிறீகாந்த் அட்டாலாவுடன் இவரது இரண்டாவது ஒத்துழைப்பைக் குறிக்கிறது. மணிசர்மா படத்திற்கான மறுபதிவு மற்றும் பின்னணி இசையை வழங்கினார். அதே நேரத்தில் அனந்த ஸ்ரீராம் மற்றும் சிறீவெண்ணிலா சீதாராம சாஸ்திரி பாடல்களுக்கு பாடல்வரிகளை இயற்றினர். இதன் வெளியீடு 2012-ஆம் ஆண்டு திசம்பர் 7 அன்று ஐதராபாத்திலுள்ள நானக்ராம்குடாவில் இராமாநாயுடு படப்ப்பிடிப்பு அரங்கத்தில் ஆதித்தியா மியூசிக்கு லேபிளின் கீழ் ஒரு விளம்பர வெளியீட்டு விழாவுடன் இது வெளியிடப்பட்டது.
தயாரிப்பு
[தொகு]2008-ஆம் ஆண்டில் வெளியான கொத்த பங்காரு லோகம் படத்தைத் தொடர்ந்து, இப்படத்திற்கு இசையமைக்க சிறீகாந்த் அடலா மீண்டும் மிக்கி ஜே. மேயரைத் தேர்ந்தெடுத்தார். இப்படத்தின் ஒலி உரிமைகள் சூன் 2012-ஆம் ஆண்டில் ஆதித்தியா மியூசிக்கு நிறுவனத்திற்கு விற்கப்பட்டன.தலைப்புப் பாடலின் முன்னோட்டம் 2012-ஆம் ஆண்டு மே 31 அன்று வெளியிடப்பட்டது.[1]
2012-ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று மகேசு பாபு மற்றும் சமந்தா நடிப்பில் இங்க செப்பலே பாடல் [[புனே]வில் உள்ள மகர்பட்டாவில் படமாக்கப்பட்டது.[2][3] கடைசிப் பாடலான வான சினுக்குலு பாடல் நவம்பர் 25 முதல் மூன்று நாட்கள் வெங்கடேசு மற்றும் அஞ்சலி நடிப்பில் கேரளாவில் படமாக்கப்பட்டது.[4] படப்பிடிப்பு தொடங்கிய அதே வேளையில், ஆறடுகுழுந்தடா பாடலின் முப்பது வினாடி முன்னோட்டம் 2012-ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று ரெட் எஃப் எம் 93.5 மூலம் வெளியிடப்பட்டது.[5]
அனைத்து ஏழு விளம்பரப் பாடல்களும் 2012-ஆம் ஆண்டு திசம்பர் 1 அன்று ஆதித்தியா மியூசிக்கின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டன.[6] படத்தின் தொடக்க விழா 2012 திசம்பர் 7, அன்று ஐதராபாத்தில் உள்ள நானக்ராம்குடாவில் உள்ள இராமநாயுடு படபிடிப்பு தளத்தில் நடைபெற்றது. அதே நாளில் அதிகாரப்பூர்வ ஒலிப்பதிவும் வெளியிடப்பட்டது.[7][8] படத்தின் டிரிபிள் பிளாட்டினம் டிஸ்க் விழா 2013-ஆம் ஆண்டு சனவரி 19, அன்று ஐதராபாத்தில் உள்ள சில்பகலா வேதிகாவில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.[9]
பாடல் பட்டியல்
[தொகு]| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
|---|---|---|---|---|
| 1. | "ஏமி சேத்தாம்" | ரஞ்சித், கார்த்திக், மைனாம்பட்டி சிறீராம சந்திரா | 4:28 | |
| 2. | "ஆறடுகுழுந்தடா" | கல்யாணி | 4:26 | |
| 3. | "சீத்தம்மா வாகிட்லோ" | சித்ரா, குழுவினர் | 3:43 | |
| 4. | "இங்க்கா செப்பலே" | ராகுல் நம்பியார், சுவேதா பண்டிட் | ||
| 5. | "மாரி அந்தகா" | சிறீராம சந்திரா | 3:48 | |
| 6. | "வான சினுக்குலு" | கார்த்திக், அஞ்சனா சௌமியா | 3:45 | |
| 7. | "மேகலோ" | கார்த்திக், சிறீராம சந்திரா | 3:57 | |
மொத்த நீளம்: |
27:29 | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sitamma Vakitlo Sirimalle Chettu (Preview Track)". Raaga. Retrieved 11 July 2012.
- ↑ Pasupulate, Karthik (6 December 2012). "Mahesh and Samantha on a song in Pune". The Times of India. Archived from the original on 9 July 2015. Retrieved 9 July 2015.
- ↑ "Mahesh-Samantha charms Telugu crowd at Magarpatta City". Ragalahari. Retrieved 16 November 2012.
- ↑ "SVSC rain song shoot begins". 123 Telugu. Retrieved 25 November 2012.
- ↑ "SVSC Promo Song Playing in Red FM". Movies.infoonlinepages.com. Archived from the original on 17 December 2012. Retrieved 29 November 2012.
- ↑ "Aditya Music - Seethamma Vakitlo Sirimalle Chettu". Facebook. Retrieved 1 December 2012.
- ↑ "Mahesh Babu-Venkatesh's SVSC audio today". The Times of India. 7 December 2012. Archived from the original on 2012-12-19. Retrieved 7 December 2012.
- ↑ "Photos: Mahesh's Seethamma Vakitlo Sirimalle Chettu audio released". Oneindia Entertainment. Retrieved 8 December 2012.
- ↑ "SVSC disc function on 19 Jan". Idlebrain. 17 January 2013. Retrieved 18 January 2013.