சீதக்கமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீதக்கமங்கலம் , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம்[1]. இவ்வூர் குடவாசல் அருகே உள்ளது. இந்த கிராமத்தில் 1100 ஆண்டு பழமையான சிதிலடைந்த நிலையில் உள்ள பழைய சோழர் கால சிவாலயத்தில்] 3 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

  • இக்கல்வெட்டில் ஒன்று கி.பி.912 ஆம் ஆண்டை சேர்ந்த பராந்தக சோழனின் 5-ஆம் ஆண்டுக்குரியது. அதில் அந்த ஊரின் பழமையான பெயர் ஸ்ரீதொங்கமங்கலம் என குறிக்கப்பட்டுள்ளது.
  • நிலைக்கால் ஒன்றில் காணப்படும் மற்றொரு கல்வெட்டு இராஜராஜனின் 27-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1012) பொறிக்கப்பட்டது. அச்சாசனத்தில் அவ்வூருக்கு இரண்டு பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதுங்கமங்கலம் என்னும் அபிமானபூஷண சதிர்வேதிமங்கலம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. அபிமானபூஷணன் என்பது இராஜராஜனின் பட்டப்பெயராகும்.
  • மற்றொரு கல்வெட்டில் நாகப்பட்டினத்தில் கடாரத்து (மலேசியா) அரசன் கட்டிக் கொண்டிருந்த பௌத்தக்கோயிலுக்கு மாமன்னன் இராஜராஜன் 97 வேலி நிலத்தைத் தானமாகக் கொடுத்து அதைச் செப்பேட்டில் சாசனமாகப் பதிவு செய்ததும், அச்சாசனத்தில் கையொப்பமிட்ட துர்பில் ஸ்ரீதரபட்டன் என்பவர் ஸ்ரீதுங்கமங்கலத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2013-03-11.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதக்கமங்கலம்&oldid=3554738" இலிருந்து மீள்விக்கப்பட்டது