சீட்டுக் கட்டுதல்
சீட்டுக் கட்டுதல் என்பது தமிழரிடையே வழங்கி வரும் ஒரு பணச் சேமிப்பு அல்லது சேகரிப்பு முறையாகும். குழுவாகச் சேர்ந்து பணத்தை மாதாந்தம் பங்களித்து எதாவது ஒரு தேர்வு முறையில் ஒருவருக்கு வழங்கப்படும். பொதுவாக பத்தில் இருந்து இருபது தனிநபர்கள் அல்லது வணிகங்கள் ஒரு சீட்டில் கலந்துகொள்வர். சீட்டை ஒழுங்கு செய்பவர் அல்லது சீட்டை பிடிப்பவர் முதலாவது சீட்டைப் பெறுவது வழக்கம்.
வகைகள்
[தொகு]சீட்டுக் கட்டுதலில் ஏலச் சீட்டு, தட்டு சீட்டு என்ற இரண்டு வகைகள் உண்டு. மேலும் முறைப்படி வங்கியூடாக உறுதிசெய்யப்பட்ட சீட்டு, முறைசாரா சீட்டு என்ற வகைப்பாடும் உண்டு. முறைசாரா சீட்டு பிடிப்பவரிடம் இருக்கும் நம்பிக்கையில் அல்லது நன்மதிப்பில் தங்கி அமைகிறது.
குலுக்கல் சீட்டு
[தொகு]தட்டு சீட்டு அல்லது குலுக்கல் சீட்டு என்பது கழிவு இல்லாத எளிமையான சீட்டு ஆகும், ஒப்பீட்டளவில் இடர் குறைந்தது. 10 பேர் 12 மாதம் ரூபா 1000 சீட்டில் கலந்து கொள்வார்கள் ஆனால் சீட்டுத் தொகை ரூபா 10000 ஆகும். ஒவ்வொரு மாதமும் யாருக்கு சீட்டுப் பணம் கிடைக்கும் என்று குலுக்கல் முறையில் தேர்வு செய்வர். சீட்டை முதலில் பெறுபவர்கள் அதை முதலீடு செய்து இலாபம் ஈட்ட முடியும்.[1]
ஏலச் சீட்டு
[தொகு]ஏலச் சீட்டு அல்லது கழிவுச் சீட்டு எனப்படுவது சற்றுச் சிக்கலானது, ஒப்பீட்டளவில் இடர் கூடியது, இலாபமும் கூடியது. யார் சீட்டுத் தொகையைப் பெறுவது என்பதைக் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்காமல் ஏலம் எனப்படும் முறையில் தேர்ந்தெடுப்பர். ஏலத்தில், ஒவ்வொரு மாதமும் எவர் ஒருவர் குறைந்த அளவில் சீட்டுப் பணத்தைப் பெற்றுக்கொள்ள ஏலம் எடுக்கிறாரோ, அவருக்கு சீட்டுத் தொகை போகும். அந்தக் கழிவுத் தொகை சீட்டில் கலந்து கொள்வோருக்குப் பிரித்துக் கொடுக்கப்படும்.[2]
இரண்டு நோக்கங்ளுக்காக ஒருவர் சீட்டுத் தொகையைக் கழித்து ஏற்றுக் கொள்வார். ஒன்று அவர் அத் தொகையை எடுத்து முதலீடு செய்து கூடிய இலாபம் ஈட்டும் நோக்குடன். மற்றையது அவருக்கு உடனடியாக பணத் தேவை என்றால்.
சமூகப் பயன்பாடு
[தொகு]தமிழ்ச் சமூகத்தில் சீட்டு ஒரு முக்கிய பணச் சேமிப்பு அல்லது சேகரிப்பு முறையாக உள்ளது. தனிப்பட்ட நபர்கள் மட்டும் இல்லாமல் வணிகங்களும் முதல் திரட்டும் ஒரு முறையாக இது உள்ளது.
சமூகச் சிக்கல்கள்
[தொகு]சீட்டில் ஏமாறுதல், அல்லது சீட்டில் இணைந்து விட்டு அதை கட்ட முடியாமல் சிரமப்படுதல் போன்ற சிக்கல்கள் உள்ளன.
கலைச்சொற்கள்
[தொகு]- சீட்டுக் கட்டுதல்
- சீட்டுப் பிடித்தல்
- ஏலச் சீட்டு/கழிவுச் சீட்டு
- குலுக்கல் சீட்டு/கழிவற்ற சீட்டு
- கூறல்
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ முருகேஷ் பாபு (6 நவம்பர் 2016). "பருவத்தே பணம் செய்: சீட்டு லாபமா, நஷ்டமா?". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2016.
- ↑ "சீட்டுகளும் அதன் லாப நஷ்டங்களும்!". கட்டுரை. http://tamil.goodreturns.in. 5 சூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2016.
{{cite web}}
: External link in
(help)|publisher=