சீடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரிசிமாவைக் கொண்டு உண்டாக்கப்படும் ஒரு பலகாரமே சீடை. வெல்ல சீடை, உப்பு சீடை என்ற வகைகளும் உண்டு. கிருஷ்ண ஜெயந்தி நாளன்று செய்வர். கண்ணனுக்கு பிடித்த பலகாரம் எனவும் கூறுவர்.

தயாரிக்கும் விதம்[தொகு]

சீடை செய்வதற்கு அரிசிமாவும், உழுந்து மாவும் தேங்காயும் சீரகமும் எள்ளும் உப்பும் தேவைப்படுகின்றன. அரிசிமாவுடன், குறைந்தளவு உளுந்து மாவு, சிறிது வெண்ணெய், சிறிதளவு வெள்ளை எள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தேங்காய்த் துறுவலை அரைத்து பின்னர் கலக்கவும். தேவையான அளவு தண்ணீர், பெருங்காயம், உப்பு சேர்த்து, கெட்டியான மாவாக பிசையவும். பிசைந்த மாவை, தேங்காய் எண்ணெய் தொட்டு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வாணலியில் மிதமான தீயில் பொறித்து எடுக்கவும்.

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீடை&oldid=2740754" இருந்து மீள்விக்கப்பட்டது