சீச்சாங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீச்சாங்கல் நாட்டுப்புறத் தெருக்களில் சிறுவர் சிறுமியர் விளையாடும் ஒருவகை விளையாட்டு.

இது ஒரு குறி விளையாட்டு. விளையாடுவோர் ஒவ்வொருவருக்கும் 10 புளியங்கொட்டைகள். பொது புளியங்கொட்டைகள் (புளிய முத்துகள்) கொஞ்சம்.

பொது-முத்திலிருந்து எடுத்து மூன்றின் மேல் ஒன்று எனப் புளிய முத்துக்கள் ஒரு வட்டத்துக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆடுபவர் தன் கையிலுள்ள புளிய-முத்து ஒன்றால் அதனை அடித்து வெளியேற்ற வேண்டும். வெளியேறிய முத்தைத் தனக்காக ஈட்டிக்கொள்ளலாம். அடிக்கும் முத்து வட்டத்துக்குள் நின்றுவிட்டால் அது பொது-முத்து ஆகிவிடும். யார் அதிக முத்துகள் ஈட்டுகிறாரோ அவர் வென்றவர்.

மேலும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீச்சாங்கல்&oldid=982552" இலிருந்து மீள்விக்கப்பட்டது