சீசெல்சு குழந்தை மேம்பாட்டு ஆய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீசெல்சு குழந்தை மேம்பாட்டு ஆய்வு (Seychelles Child Development Study) 1986 ஆம் ஆண்டு சீசெல்சில் உள்ள சுகாதார மற்றும் கல்வி அமைச்சகங்கள் உரோசெசுட்டர் பல்கலைக்கழகம் மற்றும் உல்சுடர் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் உருவாக்கிய ஒரு திட்டமாகும். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீது பாதரசம் வெளிப்பாட்டின் விளைவுகளை கண்காணிப்பதே இத்திட்டத்தின் குறிக்கோள் ஆகும். முதன்மையாக குறைந்த அளவிலான மீன் நுகர்வு மற்றும் குறிப்பாக நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்திட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.[1]

தலைமுடியின் பாதரச அளவுகள் இந்த ஆய்வுத்திட்டத்தில் உடல்மீதான வெளிப்பாட்டின் குறியீடாகப் பயன்படுத்தப்படுகின்றன.[2] இந்த திட்டத்தின் விளைவாக பல அறிவியல் ஆய்வுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பொதுவாக மெத்தில்மெர்குரி நுகர்வு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று முடிவு எட்டப்பட்டுள்ளது.[3][4][5][6][7][8][9] இருப்பினும், ஒரு கட்டுரை இவ்வேதிப் பொருளின் செயல்பாட்டுடனான தொடர்பு இந்த கூட்டுறவை மேலும் ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை அறிவுறுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் உணவு மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனமும் உலக சுகாதார அமைப்பின் கூட்டுக் குழுவும் இணைந்து ஓர் அறிக்கையை வெளியிட்டன. உயர் குழாய்சிதைவு நோய்க்குறியை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களுடன் தொடர்புடைய ஆரோக்கிய நலன்கள், மீனில் இருந்து கிடைக்கும் பாதரசத்தை உட்கொள்வதால் ஏற்படக்கூடிய பாதகமான நரம்பியல் விளைவுகளை விட அதிகமாக உள்ளது என்பது அவ்வறிக்கையாகும்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Seychelles Child Development Study". University of Rochester. பார்க்கப்பட்ட நாள் 31 October 2013.
  2. Myers, G. J.; Davidson, P. W.; Cox, C.; Shamlaye, C. F.; Choisy, O.; Cernichiari, E.; Choi, A.; Sloane-Reeves, J. et al. (1997). "The seychelles child development study: Results and new directions through twenty-nine months". Water, Air, & Soil Pollution 97 (1–2): 53–61. doi:10.1007/BF02409644. Bibcode: 1997WASP...97...53M. 
  3. Myers, G. J.; Davidson, P. W.; Cox, C.; Shamlaye, C. F.; Palumbo, D.; Cernichiari, E.; Sloane-Reeves, J.; Wilding, G. E. et al. (2003). "Prenatal methylmercury exposure from ocean fish consumption in the Seychelles child development study". The Lancet 361 (9370): 1686–1692. doi:10.1016/S0140-6736(03)13371-5. பப்மெட்:12767734. 
  4. Myers, G. J.; Davidson, P. W.; Shamlaye, C. F.; Axtell, C. D.; Cernichiari, E.; Choisy, O.; Choi, A.; Cox, C. et al. (1997). "Effects of prenatal methylmercury exposure from a high fish diet on developmental milestones in the Seychelles Child Development Study". Neurotoxicology 18 (3): 819–829. பப்மெட்:9339828. 
  5. Crump, K. S.; Van Landingham, C.; Shamlaye, C.; Cox, C.; Davidson, P. W.; Myers, G. J.; Clarkson, T. W. (2000). "Benchmark concentrations for methylmercury obtained from the Seychelles Child Development Study". Environmental Health Perspectives 108 (3): 257–263. doi:10.1289/ehp.00108257. பப்மெட்:10706533. 
  6. Van Wijngaarden, E.; Thurston, S. W.; Myers, G. J.; Strain, J. J.; Weiss, B.; Zarcone, T.; Watson, G. E.; Zareba, G. et al. (2013). "Prenatal methyl mercury exposure in relation to neurodevelopment and behavior at 19 years of age in the Seychelles Child Development Study". Neurotoxicology and Teratology 39: 19–25. doi:10.1016/j.ntt.2013.06.003. பப்மெட்:23770126. 
  7. Davidson, P. W.; Leste, A.; Benstrong, E.; Burns, C. M.; Valentin, J.; Sloane-Reeves, J.; Huang, L. S.; Miller, W. A. et al. (2010). "Fish consumption, mercury exposure, and their associations with scholastic achievement in the Seychelles Child Development Study☆". NeuroToxicology 31 (5): 439–447. doi:10.1016/j.neuro.2010.05.010. பப்மெட்:20576509. 
  8. Van Wijngaarden, E.; Davidson, P. W.; Smith, T. H.; Evans, K.; Yost, K.; Love, T.; Thurston, S. W.; Watson, G. E. et al. (2013). "Autism Spectrum Disorder Phenotypes and Prenatal Exposure to Methylmercury". Epidemiology 24 (5): 651–659. doi:10.1097/EDE.0b013e31829d2651. பப்மெட்:23873071. 
  9. Willingham, Emily (24 July 2013). "Mercury and autism not linked, again". Forbes.com. பார்க்கப்பட்ட நாள் 31 October 2013.
  10. "Seychelles". University of Ulster. Archived from the original on 10 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 2 November 2013.