சீசியம் இருபிசுமத்தைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
12048-44-1 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Bi2Cs | |
வாய்ப்பாட்டு எடை | 550.87 g·mol−1 |
உருகுநிலை | 630 °C (1,166 °F; 903 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சீசியம் இருபிசுமத்தைடு (Cesium dibismuthide) என்பது CsBi2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிசுமத்துடன் சீசியத்தைச் சேர்த்து 650 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச்செய்து விளைபொருளை குளிர்வித்தால் இலேசான் வெள்ளி நிறத்தில் சீசியம் இருபிசுமத்தைடு படிகங்கள் உருவாகின்றன. படிகங்கள் Fd3m இடக்குழுவில்[2] கனசதுரப்படிக வடிவில் Cu2Mg கட்டமைப்பைக் கொண்டுள்ளன.[3] சில ஆதாரங்கள் சீசியம் இருபிசுமத்தைடு காற்றுக்கு உணர்திறன் இல்லை ஆனால் ஈரப்பதத்திற்கு சற்று உணர்திறன் கொண்டிருக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றன.[2] இருப்பினும், சில நிமிடங்களுக்கு காற்றில் விடப்பட்ட பிறகு இச்சேர்மம் சிதைந்து வெப்பத்தை வெளியிடுவதாகவும் பிற ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zhuravlev, N. N. (Oct 1958). "Structure of superconductors XIII: Investigation of bismuth-cesium alloys". Journal of Experimental and Theoretical Physics (USSR) 34 (7): 571–573. http://www.jetp.ras.ru/cgi-bin/dn/e_007_04_0571.pdf.
- ↑ 2.0 2.1 Emmerling, Franziska; Längin, Nina; Petri, Denis; Kroeker, Martin; Röhr, Caroline (Jan 2004). "Alkalimetallbismutide ABi und ABi2 (A = K, Rb, Cs) — Synthesen, Kristallstrukturen, Eigenschaften" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 630 (1): 171–178. doi:10.1002/zaac.200300312. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.200300312.
- ↑ Zhuravlev, N. N. Structure of superconductors. XIII. Investigation of bismuth-cesium alloys. Zhurnal Eksperimental'noi i Teoreticheskoi Fiziki, 1958. 34: 827-829. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-4510.
- ↑ Gutowska, Sylwia; Wiendlocha, Bartlomiej; Klimczuk, Tomasz; Winiarski, Michał J. (2023-07-27). "Superconductivity in Bismuth Pyrochlore Lattice Compounds RbBi2 and CsBi2 : The Role of Relativistic Effects" (in en). The Journal of Physical Chemistry C 127 (29): 14402–14414. doi:10.1021/acs.jpcc.3c02176. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-7447.