சீசரின் பாலம்

ஆள்கூறுகள்: 32°03′13″N 48°50′55″E / 32.053723°N 48.848687°E / 32.053723; 48.848687
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீசரின் பாலம்
எஞ்சியுள்ள அணைப் பாலம்
பிற பெயர்கள் பொல் இ கைசர், வலேரியன் பாலம், சடிர்வன்
போக்குவரத்து சசானிட் பாதை பசாகடே−டெசிபோன்
தாண்டுவது கருன் ஆறு
இடம் சுஸ்தார்,  ஈரான்
வடிவமைப்பாளர் உரோம பொறியியலாளர்கள்
வடிவமைப்பு சிறு அணையுடன் பால மேற்கட்டுமானம்
கட்டுமானப் பொருள் மணற்கல் சதுரம், உரோம சிமிட்டிக் கலவை
மொத்த நீளம் சுமார் 500 மீ
அதிகூடிய அகல்வு 9 m
இடைத்தூண் எண்ணிக்கை 40+
கட்டியவர் சபூர் I
கட்டுமானம் தொடங்கிய தேதி சுமார் கி.பி. 260−270
நொறுங்கியது 1885
அமைவு 32°03′13″N 48°50′55″E / 32.053723°N 48.848687°E / 32.053723; 48.848687
அலுவல் பெயர்Shushtar Historical Hydraulic System
வகைகலாச்சாரம்
வரன்முறைi, ii, v
தெரியப்பட்டது2009 (33 வது தொடர்)
உசாவு எண்1315
அரசுஈரான்
பிராந்தியம்ஆசியா பசுபிக்

சீசரின் பாலம் (Caesar's bridge) அல்லது பாண்ட் இ கைசர் (Band-e Kaisar, பாரசீக மொழி: بند قیصر, "சீசர் அணை"‎, வலேரியன் பாலம் (Bridge of Valerian) என்பது ஈரான் சுஸ்தார் என்னுமிடத்தில் உள்ள பண்டைய வளைவுப் பாலமும், அந்நாட்டில் முதன்முதலில் அணையுடன் சேர்த்துக் கட்டப்பட்ட பாலமும் ஆகும்.[1] உரோமானியர்களால் கி.பி 3 ஆம் நூற்றாண்டு சசானிய கட்டளைப்படி கட்டப்பட்ட,[2] ஈரான் நிலப்பரப்பினுள் அமைந்துள்ள இப்பாலம் முக்கிய கிழக்கு உரோமப் பாலமாகவும் உரோம அணையாகவும் இருந்தது.[3] அதன் இரட்டை நோக்க வடிவமைப்பு ஈரானிய குடிசார் பொறியியல் மிக ஆழமான செல்வாக்கையும் சசானிய நீர் முகாமைத்துவ நுட்பத்தையும் காட்டுகிறது.[4]

ஈரானின் முக்கிய கிளை ஆறான கருன் ஆற்றுக்கு மேலாக கிட்டத்தட்ட 500 மீ நீளத்தில் சுஸ்தார் வரலாற்று திரவ இயங்கு முறை மைய கட்டமைப்பாக விளங்கியது. அதிலிருந்து விவசாய உற்பத்தியை நகர் பெற்றது.[5] இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் மூலம் பட்டியலிடப்பட்டு, 2009 இல் ஈரானின் 10 வது உலகப் பாரம்பரியக் களம் ஆகியது.[6] வில்வளைவு மேல் கட்டுமானம் பசாகடேவிற்கும் சசானிட் தலைநகர் டெசிபோனுக்கும் இடையில் முக்கிய பாதையைக் கொண்டு சென்றது.[7] இசுலாமிய காலத்தில் பல தடவைகள் பழுதுபாக்கப்பட்டு[8] இப்பாலம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பயன்பாட்டில் இருந்தது.[9]

வரலாறு[தொகு]

பாரசீகப் பாரம்பரித்தின்படி பாண்ட் இ கைசர் என்ற பெயர், சசானிய ஆட்சியாளர் முதலாம் சபூரினால் எடேசாப் போரில் (260) தோற்கடிக்கப்பட்டு முழுப்படையுடனும் பிடிபட்ட உரோமப் பேரரசர் வலேரியன் (253–260 கி.பி) பெயர் மூலம் பெறப்பட்டது. உரோம பொறியியல் படைப்பிரிவு உட்பட 70,000 பேரைக் கொண்ட அப்பெரும் படை வெற்றி பெற்றவர்களினால் தென் மேற்கு ஈரானில் முக்கிய விவசாய மையத்தில், சுஸ்தாரில் கட்டுமானப் பணிக்காக வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.[10] ஒட்டுமொத்தமாக சில 150,000 எக்டேர்கள் கொண்ட உழுது பயிரிடக்கூடிய நிலத்தின் பாரிய அகன்ற அதன் சேவைக்கு, உரோமானியர்கள் மூன்று கட்டமைப்புக்களைக் கட்டுவதற்கு ஏற்படுத்தப்பட்டார்கள். அக்கட்டமைப்புக்கள் முறையே: அபி காகர் எனப்பட்ட ஒரு கால்வாய், பாண்ட் இ கைசர், பாண்ட் இ மிசான் எனப்பட்ட இரு அணைகள் என்பனவாகும். இவை செயற்கை நீரோடைக்கு கருன் ஆற்று நீரைச் செலுத்த இயக்கின.[11][A. 1]

இக்கதை முசுலிம் வரலாற்றாளர்களான தபாரி, முசுடி என்பவர்களினால் 9 ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளில் எடுத்துரைக்கப்பட்டது.[12] ஆயினும் அவர்களின் கதை விபரிப்பை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. இருப்பினும், உரோமானியர்களின் வரலாற்று நிகழ்வு தற்கால உள்ளூர்ப் பெயர்களால் சான்றாகின்றன. "உரோமிச்கான்" எனும் பக்கத்துக் கிராமம், "உருமியன்" எனும் பெயர் கொண்ட லூர் குலத்தவர் ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்.[7] மேலும், உள்ளூர் பாரம்பரியமானது வர்த்தக மூலமான உரோமானிய குடியேற்றக்காரர்கள், சித்திப்பட்டாடை உற்பத்தி, மற்றும் சில புகழ்பெற்ற மரபுகள் ஆகியவற்றால் குறிப்பிடுகின்றன.[12]

சுஸ்தாரியிலுள்ள அணைப் பாலம் பசாகடேவிற்கும் டெசிபோனுக்கும் இடையில் முக்கிய பாதை இணைப்பை செய்தது.[7] இப்பாதைக்கான மேலும் இரு சசானிட் அணைப் பாலங்கள் போரில் பிடிபட்ட உரோமக் கைதிகளைக் கொண்டு ஒரே காலத்தில் செய்யப்பட்டதாக ஊகிக்கப்படுகிறது. அவை இரண்டும் சுண்ணச்சாந்துடன் உரோம கட்டுமான வேலைக்கு பொருத்தமான வெளிப்படுத்துதோடு, அது உள்ளூர் கட்டுமானத்திற்கு முற்றிலும் புதிய தொழிநுட்பமாகும்.[13]

உரோம எடுத்துக்காட்டை மாதிரியாகக் கொண்ட, பாலத்தின் மேற்கட்டுமான ஒருமைப்பாடானது அணை வடிவமைப்பில் ஈரானிய திரவ இயங்கு முறை பொறியிலில் சாதாரண செயற்பாடாக மாறியது. இது கி.பி 1000 வரை நீடித்தது.[14]

உசாத்துணை[தொகு]

  1. Vogel 1987, ப. 50
  2. Smith 1971, ப. 56–61; Schnitter 1978, ப. 32; Kleiss 1983, ப. 106; Vogel 1987, ப. 50; Hartung & Kuros 1987, ப. 232; Hodge 1992, ப. 85; O'Connor 1993, ப. 130; Huff 2010; Kramers 2010
  3. Schnitter 1978, ப. 28, fig. 7
  4. Impact on civil engineering: Huff 2010; on water management: Smith 1971, ப. 60f.
  5. Length: Hodge 1992, ப. 85; Hodge 2000, ப. 337f.; extensive irrigation system: O'Connor 1993, ப. 130
  6. Shushtar Historical Hydraulic System, UNESCO, retrieved on May 1, 2010
  7. 7.0 7.1 7.2 Hartung & Kuros 1987, ப. 232
  8. Hartung & Kuros 1987, ப. 246
  9. Hodge 1992, ப. 85; Hodge 2000, ப. 337f.
  10. Vogel 1987, ப. 50; engineers: Kleiss 1983, ப. 106
  11. Smith 1971, ப. 58; hectares: O'Connor 1993, ப. 130
  12. 12.0 12.1 Kramers 2010
  13. Roman masonry: Hartung & Kuros 1987, ப. 232, 238, fig. 13; 249; Iranian non-use: Chaumont 1964, ப. 170, fn. 3
  14. Smith 1971, ப. 60f.; வார்ப்புரு:Harnvb

மூலங்கள்[தொகு]

  • Vogel, Alexius (1987), "Die historische Entwicklung der Gewichtsmauer", in Garbrecht, Günther (ed.), Historische Talsperren, vol. 1, Stuttgart: Verlag Konrad Wittwer, pp. 47–56 (50), ISBN 3-87919-145-X
  • Hartung, Fritz; Kuros, Gh. R. (1987), "Historische Talsperren im Iran", in Garbrecht, Günther (ed.), Historische Talsperren, vol. 1, Stuttgart: Verlag Konrad Wittwer, pp. 221–274, ISBN 3-87919-145-X

குறிப்பு[தொகு]

  1. The names of the two barrages are confused by Smith (1971) and Hodge (1992 & 2000). O'Connor (1993), too, incorrectly locates the Band-e Kaisar on the Ab-i Gargar branch.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசரின்_பாலம்&oldid=3773274" இலிருந்து மீள்விக்கப்பட்டது