சீக்கிய வரலாற்று ஆய்வு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீக்கிய வரலாற்று ஆய்வு மையம்
Established1930
Headடாக்டர் கில்திப் சிங் தில்லான்
Locationஅமிர்தசரஸ், பஞ்சாப், இந்தியா
Websitekhalsacollege/sikhhistoryresearch

சீக்கிய வரலாற்று ஆய்வு மையம் (Sikh History Research Centre) அமிர்தசரஸ் நகரில் உள்ள கால்சா கல்லூரியின் நிர்வாகக் குழுவால் 1930 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது சீக்கிய வரலாற்றை நவீன வரலாற்று கண்ணோட்டத்தில் எழுதும் நோக்கிலும், வெளியிடும் நோக்கிலும் உருவாக்கப்பட்ட மையமாகும். [1] நிர்வாகக் குழுவால் இந்த மையத்தை உருவாக்குவதில் கரம் சிங்கிற்கு முக்கிய பங்கு வழங்கப்பட இருந்தது. இருந்தாலும், அவரது திடீர் மறைவின் காரணமாக, கால்சா கல்லூரியின் கீழ் சீக்கிய வரலாற்றுத் துறையாக எஸ்.ஜகத் சிங் அவர்களால் இந்த மையம் தொடங்கப்பட்டது, பின்னர் 20 அக்டோபர் 1931 ஆம் நாளன்று டாக்டர் காந்தா சிங் அவர்கள் இதன் பொறுப்பினை ஏற்றார்.[2]

மைய ஆதாரங்கள்[தொகு]

இந்த மையத்தில், சீக்கிய வரலாறு தொடர்பான, குரு நானக்கின் காலம் தொடங்கி தற்போதைய காலம் வரையிலான வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கின்றன, .இந்த ஆதாரங்கள் பாரசீகம், பஞ்சாபி மற்றும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் உள்ளன. பொதுவாக, இந்த ஆதாரங்கள் பாட்னாவிலுள்ள குடபட்ஷ நூலகம், உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள ராம்பூரில் உள்ள ராஜா நூலகம், ஹைதராபாத்தில் உள்ள சலார்ஜங் அருங்காட்சியகம், புனாவில் உள்ள சிந்திஸ் அலுவலகம் , மற்றும் ஜெய்ப்பூர் மாநில ஆவணக் காப்பகத் துறைகளிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக லண்டனில் உள்ள இந்திய அலுவலக நூலகத்திலிருந்தும் நகல்களைப் பெற்று இந்த ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.[2]

மைய நூலகம்[தொகு]

இங்குள்ள மைய நூலகத்தில் சுமார் 7,000 அரிய நூல்கள் உள்ளன இந்த அரிய கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. [3] அவற்றுள் பஞ்சாபி (207), பாரசீகம் (219), ஆங்கிலம் (123), உருது (41), சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி (11) உள்ளிட்ட 601 கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. [4][1] 1904 ஆம் ஆண்டு முதல் 1988 ஆண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த பஞ்சாபி இதழ்களானபுல்வாரி, குர்மத் பர்காஷ் மற்றும் ஆங்கில இதழான சீக்கிய விமர்சனம் ஆகியவற்றின் தொகுதிகளும், சீக்கிய வரலாற்று மாநாட்டின் 35 தொகுதிகளும் உள்ளன. 1904 இல் தொடங்கி, பஞ்சாப் பகுதியில் வெளியானஆங்கிலம், பஞ்சாபி, உருது மற்றும் இந்தி மொழிகளில் வெளியான நாளிதழ்கள் [5] தொடர்பான 380 கோப்புகள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட 90 நாளிதழ்களின் நறுக்குகளைக் கொண்டகோப்புகளும் இங்கு உள்ளன. இவற்றைத் தவிர, கல்சா கல்லூரியின் உள் இதழின் 35 நூற்கட்டுத் தொகுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. ஆய்வாளர்களின் வசதிக்காக அரிய ஆவணங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் திட்டத்தின் அடிப்படையில் 3,25,000க்கும் மேற்பட்ட பக்கங்கள் டிஜிட்டல் முறைப்படி படியெடுக்கப்பட்டுள்ளன. சீக்கிய வரலாற்று ஆய்வு மையம் பழைய நாணயங்கள், ஆயுதங்கள், ஓவியங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிற பொருட்களின் தொகுப்புகளைக் கொண்டுள்ளது. கையெழுத்துப் பிரதிகளை மீட்டெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்திட்டம் அங்கு நடைபெறுகின்ற உள்-திட்டமாகும். ஓவியங்கள் மற்றும் கலைப் பொருள்களை டிஜிட்டல் மயமாக்கும் பணி எதிர்காலத்தில் விரைவில் சி நிறைவடையும் நிலையில் உள்ளது. மேலும் டிசம்பர் 2018 இல் மையத்தின் புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு காட்சிக் கூடங்களில் ஏராளமான காட்சிப் பொருள்கள் ஏற்கனவே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. [4]

குறிப்பிடத்தக்க வெளியீடுகள்[தொகு]

சீக்கிய வரலாற்று ஆய்வு மையம் இன்றுவரை 21 வெளியீடுகளை உருவாக்கியுள்ளது. அவற்றுள் பின்வருபவை மிகவும் குறிப்பிடத்தக்கவையான வெளியீடுகள் ஆகும் : 1. பாய் வஸ்தி ராம் & பாய் ராம் சிங்கின் வரலாற்றுக் குறிப்பு 2. மகாராஜா ஆலா சிங்கின் ஒரு குறுகிய வாழ்க்கை வரலாறு 3. பஞ்சாபி மற்றும் உருது கையெழுத்துப் பிரதிகளின் பட்டியல் 4. பாரசீக மற்றும் சமஸ்கிருத கையெழுத்துப் பிரதிகளின் பட்டியல் 5. கல்சா கல்லூரியின் வரலாறு 6. டாக்டர் காந்தாவின் எழுதிய சீக்கிய வரலாறு மற்றும் மத ஆய்வு இதழ் 7. சர்தார் சுந்தர் சிங்கின் மஜிதியாவின் வாழ்வும் வாக்கும் 8. அமிர்தசரஸ் கல்சா கல்லூரியின் சுருக்கமான வரலாறு (1892-2003)

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Khalsa College Amritsar". khalsacollege.edu.in. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.
  2. 2.0 2.1 "ਸਿੱਖ ਇਤਿਹਾਸਕਾਰ ਡਾਕਟਰ ਗੰਡਾ ਸਿੰਘ ਨੂੰ ਯਾਦ ਕਰਦਿਆਂ". ਅਜੀਤ: ਸੰਪਾਦਕੀ (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.
  3. "Books list at SHRC".
  4. 4.0 4.1 "Clipping of Tribune India - Amritsar Tribune". epaper.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.
  5. "List of journals newspapers etc. at SHRC khalsa college compound, Amritsar".