உள்ளடக்கத்துக்குச் செல்

சீகேட் டெக்னாலஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீகேட் டெக்னாலஜி (கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள செயல்பாட்டு தலைமையகம்)

சீகேட் டெக்னாலஜி (Seagate Technology) என்பது அமெரிக்காவைச் சேர்ந்த தரவுகளை சேமிக்கும் சாதனங்களை உருவாக்கும் ஒரு பெரும் நிறுவனம்[1]. இது முதலில் 1978ஆம் ஆண்டு ஷுகார்ட் டெக்னாலஜி என்ற பெயரில் நிறுவப்பட்டது. 1979ஆம் ஆண்டு முதல் வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. தற்போது இந்த நிறுவனம் சட்டபூர்வமாக ஐர்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் செயல்பாட்டு தலைமையகம் கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்ட் நகரத்தில் உள்ளது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் சேவைகளை வழங்குகிறது.

இந்நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்புகள் வன் வட்டு இயக்கிகள் (Hard Disk Drives - HDDs), கலப்பின இயக்கிகள், மற்றும் திட நிலை இயக்கிகள் (Solid State Drives - SSDs) ஆகியவை ஆகும். உலகின் மிகப்பெரிய வன் வட்டு தயாரிப்பாளர்களில் சீகேட் நிறுவனமும் ஒன்று.

சீகேட் வன் வட்டு-EXOS X18 18 TB வன் வட்டு பின்புறம்

சீகேட் நிறுவனம் பல்வேறு வகையான சேமிப்பு சாதனங்களை வழங்குகிறது. இதில் பராக்குடா, ஃபயர்குடா, இரொன்வூல்ஃப், ஸ்கைஹாக், எக்ஸோஸ், நைட்ரோ போன்ற தொடர்களில் உள்ள கடின வட்டு மற்றும் திட நிலை வட்டு சாதனங்கள் அடங்கும். இவை கணினிகள், விளையாட்டு கருவிகள், கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தரவகக் கூடங்களுக்கு ஏற்றவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், வெளியே இணைக்கக்கூடிய சேமிப்பு சாதனங்களும், மேகக் கணிமை சேமிப்பு சேவைகளும் வழங்கப்படுகின்றன.

இந்நிறுவனம் லைவ் கிளவுட் (Lyve Cloud) போன்ற மேகக் கணிமை சேமிப்புத் தீர்வுகளையும், தரவுச் சேமிப்பு அமைப்புகளையும் (Data Storage Systems) வழங்குகிறது.

சீகேட் வன் வட்டு (160GB)

வரலாறு

[தொகு]

சீகேட் நிறுவனம் 1980ஆம் ஆண்டு முதல் 5.25 அங்குலம் அளவுள்ள முதல் கடின வட்டு சாதனத்தை உருவாக்கியது. இது 5 மெகாபைட் சேமிப்பு திறன் கொண்டது. இந்த சாதனங்கள் ஐபிஎம் நிறுவனத்தின் கணினிகளில் பயன்படுத்தப்பட்டதால் சீகேட் விரைவாக வளர்ச்சி பெற்றது. 1980களில் பல்வேறு நிறுவனங்களை வாங்கி வளர்ச்சி அடைந்தது. 1989ஆம் ஆண்டு இம்பிரிமிஸ் டெக்னாலஜி, 1996ஆம் ஆண்டு கானர் பெரிபெரல்ஸ், 2006ஆம் ஆண்டு மேக்ஸ்டர் மற்றும் 2011ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தின் கடின வட்டு பிரிவுகள் ஆகியவை சீகேட் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டன. மேலும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சீகேட் டெக்னாலஜி - ( www.seagate.com )".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீகேட்_டெக்னாலஜி&oldid=4371870" இலிருந்து மீள்விக்கப்பட்டது