மலபார் சீகாரப் பூங்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சீகார்ப் பூங்குருவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சீகாரப் பூங்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: பழைய உலக ஈப்பிடிப்பான்
பேரினம்: Myophonus
இனம்: M. horsfieldii
இருசொற் பெயரீடு
Myophonus horsfieldii
(விகோர்சு, 1831)
வேறு பெயர்கள்

Myiophoneus horsfieldii[2]

மலபார் சீகாரப் பூங்குருவி (Malabar whistling thrush) அல்லது அக்காக்குருவி, மலபார் விசிலடிச்சான் என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை இனமாகும். இது இந்தியத் தீபகற்பத்தில் மத்திய இந்தியா, கிழக்குத் தொடர்ச்சி மலைகள்[3] , மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற பகுதிகளில் வசிக்கிறது.

விளக்கம்[தொகு]

இப்பறவை மிக அழகான பறவையாகும். இது மைனாவைவிடப் பெரியதாகவும், புறாவைவிட சற்று சிறியதாகவும் காணப்படும். இது சுமார் 25-30 செமீ நீளமும்,[4] 101-130 கிராம் எடையுடையும் கொண்ட ஒரு பெரிய பூங்குருவி ஆகும். இதன் உடல் நிறம் மயில் நீலநிறத்தில் இருக்கும். இதனுடைய அலகும், கால்களும் கரிய நிறம் கொண்டவை. விழிப்படலம் ஆழ்ந்த பழுப்பு. பெரிய அளவிலான கரநீலங் கொண்ட இதனை எளிதாக மற்ற பூங்குருவிகளில் இருந்து பிரித்து அறிய இயலும். நெற்றியும் தோள்பட்டையும் ஆழ்ந்த நீலமாக இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Myophonus horsfieldii". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Delacour (1942) writes "the proper spelling is Myiophoneus Temminck and Laugier, 1822 Myophonus T. and L., 1822 is an orthographic error, as well as Myophoneus in their tables, x859, while Myiophonus Agassiz, 1846, is an unnecessary emendation."
  3. Ananth, G (1982). "Malabar Whistling Thrush near Madanapalle". Newsletter for Birdwatchers 22 (3&4): 10–11. 
  4. Collar, Nigel; Bonan, Arnau (2020-03-04), Billerman, Shawn M.; Keeney, Brooke K.; Rodewald, Paul G.; Schulenberg, Thomas S. (eds.), "Malabar Whistling-Thrush (Myophonus horsfieldii)", Birds of the World (in ஆங்கிலம்), Cornell Lab of Ornithology, doi:10.2173/bow.mawthr1.01, பார்க்கப்பட்ட நாள் 2022-02-01