உள்ளடக்கத்துக்குச் செல்

சி ஆா் டி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தா ரஞ்சன் டி சில்வா (சி ஆா் டி சில்வா)
சனாதிபதி சட்டத்தரணி (இலங்கை)பிசி
40ஆவது இலங்கையின் சட்டத்துறைத் தலைவர்
பதவியில்
2007–2008
நியமிப்புமகிந்த ராஜபக்ச
முன்னையவர்கே. சி. கமலாசபாய்சன்
பின்னவர்மோகன் பீரிசு
39ஆவது இலங்கையின் அரசாங்கத் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
2000–2007
நியமிப்புசந்திரிகா குமாரதுங்கா
முன்னையவர்கே. சி. கமலாசபாய்சன்
பின்னவர்பிரியசத் டெப்
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு7 நவம்பா் 2013 (aged 65)
கொழும்பு, இலங்கை
முன்னாள் மாணவர்ராயல் கல்லூரி கொழும்பு
தொழில்வழக்கறிஞர்

சித்தா ரஞ்சன் டி சில்வா (C.R. De Silva) (7 நவம்பர் 2013 அன்று காலமானார்) என்பவர் ஓர் இலங்கை வழக்கறிஞர் ஆவார். இவர் இலங்கையின் சட்டமா அதிபர் மற்றும் அரசாங்கத் தலைமை வழக்குரைஞராகவும் இருந்தார். இவர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவராக இருந்தார்.[1]

கொழும்பில் உள்ள அரச கழகக் கல்லூரியில் கல்வி பயின்றார். இங்கு இவர் 1968இல் ரக்பி கால்பந்து போட்டியில் அரச கழகக் கல்லூரி அணிக்குத் தலைமை தாங்கினர். குறிப்பாக பிராட்பி பதக்கப் போட்டியில், இவர்கள் பள்ளி வெற்றி பெற்றவா்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த ஆண்டு இவர் இலங்கை பள்ளி ரக்பி கால்பந்து அணிக்கும் தலைமை தாங்கினார். இதன்பிறகு இவர் இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1974இல் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்டு, தனது சட்டப் பயிற்சியைத் தொடங்கினார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1976 மே மாதம் அவர் சட்டத்துறைத் தலைமை வழக்கறிஞர் துறையில் அரச சட்ட ஆலோசகராகப் பணியில் சேர்ந்தார். 1984இல் இவர் சிரேசுட அரச சட்ட ஆலோசகராகப் பதவி உயர்வு பெற்று, 1992 அக்டோபரில் பிரதிச் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டார். 1996 டிசம்பரில் கூடுதல் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்ட பின்னர், 1997 பிப்ரவரி 19 அன்று இவர் சனாதிபதி சட்டமா அதிபராகப் பட்டமளித்தார். 1999 அக்டோபரில் இவர் இலங்கையின் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டார்; 2007 வரை அப்பதவியில் இவர் நீடித்தார். 1997 முதல் 10 ஆண்டுகளாக இவர் சட்டமா அதிபர் துறையின் குற்றவியல் பிரிவின் தலைவராக இருந்தார். 2007 ஏப்ரலில் இவர் இலங்கையின் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டார். 2009இன் தொடக்கத்தில் இவர் ஓய்வு பெற்றார். சட்டமா அதிபர் துறையில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய படுகொலை தொடர்பான நாட்டின் மிக முக்கியமான சில குற்றவியல் வழக்குகளில் இவர் அரசு சார்பாக கலந்துகொண்டார்.

புது தில்லி, ஆத்திரேலியா, கிரீசு மற்றும் இலங்கையில் நடைபெற்ற பல சர்வதேச இருதரப்பு விமானப் போக்குவரத்து பேச்சுவார்த்தைகளில் டி சில்வா இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். மேலும், குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை மற்றும் அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் அவையின் உடன்படிக்கை ஆகியவற்றின் விருப்ப நெறிமுறையின் கீழ் மனித உரிமைகள் குழுவிற்கான இலங்கைத் தூதுக்குழுக்களில் இவர் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

ஜெனரல் சர் ஜான் கொட்டேலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் தேர்வாளராகவும் பணியாற்றியுள்ளார், மேலும் இலங்கை சட்டக் கல்லூரியில் தேர்வாளராகவும் இருந்துள்ளார். இவர் இலங்கை சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழு, மருந்து கட்டுப்பாட்டு ஆணைக்குழு மற்றும் பட்டதாரி மருத்துவ நிறுவனம் ஆகியவற்றின் மேலாண்மைக் குழுவிலும் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

இறப்பு

[தொகு]

நீண்டகால நோய்க்குப் பிறகு 7 நவம்பர் 2013 அன்று இவர் காலமானார்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ C.R De Silva becomes new AG
  2. ↑ Daniel. "C.R. De Silva passes away | Breaking News". Dailymirror.lk. Archived from the original on 2013-11-09. Retrieved 2013-11-07.
  3. ↑ "Death of LLRC Head, former A.G, C.R. De Silva | Daily News Online : Sri Lanka's National News". Archived from the original on 2013-11-12. Retrieved 2013-11-08.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி_ஆா்_டி_சில்வா&oldid=4583152" இலிருந்து மீள்விக்கப்பட்டது