சி. வே. கணேசன்
சி. வே. கணேசன் அல்லது சி. வி. கணேசன் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும் ஆவார்.
அரசியல்[தொகு]
இவர் 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு (தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு) அமைச்சசராக பதவியேற்றார்.[1] இவர் கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார்.[2]
கல்வி[தொகு]
திட்டக்குடியில் வசித்துவரும் கணேசன் முதுகலைப் பட்டத்தினை 1984ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்திலும், கல்வியியலில் இளநிலை பட்டத்தினை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
- ↑ புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு தினத்தந்தி 2021. மே. 7
- ↑ "Ganesan, C.V.(DMK):Constituency- TITTAKUDI (SC)(CUDDALORE) - Affidavit Information of Candidate:". myneta.info. 2021-12-28 அன்று பார்க்கப்பட்டது.