ச. வே. இராமன் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சி. வி. இராமன் பிள்ளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ச. வே. இராமன் பிள்ளை
பிறப்புகன்னங்கரா வேலாயுதன் ராமன் பிள்ளை
(1858-05-19)19 மே 1858
அரயூர், திருவிதாங்கூர்
இறப்பு21 மார்ச்சு 1922(1922-03-21) (அகவை 63)
திருவனந்தபுரம், திருவிதாங்கூர்
தொழில்புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர்
தேசியம்Indian
காலம்1880 முதல் 1920 வரை
வகைபுனைகதை, நாடகம்
கருப்பொருள்இலக்கியம், சமூக-கலாச்சாரம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்

கன்னங்கரா வேலாயுதன் ராமன் பிள்ளை (Cannankara Velayudhan Raman Pillai) (1858 மே 19 - 1922 மார்ச் 21) மேலும் சிவி எனவும் அழைக்கப்படும் இவர் இந்தியாவின் முக்கிய புதின எழுத்தாளரும், நாடகாசிரியரும், மலையாள இலக்கியத்தின் முன்னோடியாகவும் ஆவார். மார்த்தாண்ட வர்மா தர்மராஜா, இராமராஜ பகதூர் போன்ற வரலாற்று நாவல்களுக்காக இவர் அறியப்பட்டார். இது கடைசியாக மலையாளத்தில் எழுதப்பட்ட மிகப் பெரிய புதினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சுயசரிதை[தொகு]

ஒரு இளைஞனாக சி.வி.

முந்தைய பூர்வீக மாநிலமான திருவிதாங்கூரின் தலைநகரான திருவனந்தபுரத்தில் 1858 மே 19 அன்று சமசுகிருத அறிஞரான பனவிலகத்து நீலகண்ட பிள்ளை, பார்வதி பிள்ளை ஆகியோருக்கு பிறந்தார். இவரது பெற்றோர் இருவரும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் திருவிதாங்கூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர்கள். [1] பிள்ளை தனது குடும்பப் பெயரான கன்னங்கரா என்பதை தனது தாய் வழியே பெற்றார். இராமு என்று அன்பாக அழைக்கப்பட்ட இவர், வாழ்க்கையின் ஆரம்பத்தில், ஒரு பாரம்பரிய சமசுகிருதக் கல்வியைக் கொண்டிருந்தார். இவரது தந்தையின் பயிற்சியின் கீழ் ஆயுர்வேதத்தில் பாடங்களும், மந்திரமும், தந்திரம் கூட இருந்தது. திருவனந்தபுரத்தில் உள்ள முதல் ஆங்கிலப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர், இவர் திருவிதாங்கூரில் முதல் கல்லூரியான மகாராஜா கல்லூரியில் (இன்றைய திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரி ) பட்டம் பெற்றார். [2] அங்கு இவர் நிறுவனத்தின் முதல்வரான இராபர்ட் ரோசு, இராபர்ட் ஆர்வி ஆகியோரின் கீழ் ஒரு சிறந்த கல்வி வாழ்க்கையைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. 1881 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னை மாகாணத்தில் 7 வது இடத்தைப் பெற்றார். இந்த காலகட்டத்தில், இவர் தி கேரள பேட்ரியாட் என்ற பெயரில் ஒரு இதழைத் தொடங்கினார். [3]

பட்டப்படிப்பு முடிந்தபின், பிள்ளை சட்டம் பயின்றார். ஆனால் கல்லூரியிருந்து வெளியேறி, சென்னைக்குச் சென்று அரசு வழக்கறிஞர் தேர்வுக்குச் சென்றார். அதுவும் பாதியிலேயே கைவிடப்பட்டது. [1] பின்னர், இவர் உயர்நீதிமன்றத்தில் எழுத்தராக சேர்ந்தார். அங்கு இவர் கணக்காளர் பதவிக்கு உயர்ந்தார் . பின்னர், அரசு அச்சகத்தில் சேர்ந்தார். மேலும் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது ஒரு கண்காணிப்பாளராக ஓய்வு பெற்றார். இடையில், இவர் 1886 இல் மலையாளி, 1901 இல் வஞ்சிராஜ் மற்றும் 1920 இல் மிதாபாசி ஆகிய மூன்று வெளியீடுகளை வெளியிட்டார். [3]

குடும்பம்[தொகு]

இவரின் முதல் திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. இவர் 1887 ஆம் ஆண்டில் தனது 30 வயதில் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது இவரது மனைவி பாகீரதி அம்மாவுக்கு 16 வயதுதான் ஆகியிருந்தது. 1904 ஆம் ஆண்டில் இவரது மனைவியின் அகால மரணம் வரை இந்த திருமணம் நீடித்தது. பின்னர், இவரது மூன்றாவது திருமணம் பாகீரதி அம்மாவின் மூத்த சகோதரியும், ரவி வர்மாவின் தம்பியான சி.ராஜ ராஜ வர்மாவின் விதவையான ஜானகி அம்மாவுடன் இருந்தது. இவர் 1922 மார்ச் 21 அன்று தனது 63 வயதில் இறந்தார். [1]

எழுத்து வாழ்க்கை[தொகு]

கிங் லியர் நாடகத்தில் எட்கராக சி.வி.

ராமன் பிள்ளையை பலர் வங்காள மொழியின் பங்கிம் சந்திர சட்டர்ஜி , மராத்தியில் ஹரி நாராயண் ஆப்தே ஆகியோருடன் ஒப்பிடுகிறார்கள். [3] இவரது முதல் வெளியிடப்பட்ட புத்தகமான சந்திரமுகிவிலாசம் என்பது ஒரு நையாண்டி எழுத்தாகும். இவர் தனது முதல் புதினமான மார்த்தாண்ட வர்மா என்பதை1885 இல் எழுதினார். ஆனால் இது 1891 இல் வெளியிடப்பட்டது. [4] இது தர்மராஜா, ராமராஜபகதூர், சமூக நாவலான பிரேமாமிருதம், பல கேலிக்கூத்துகள் போன்ற வரலாற்று புதினங்களைத் தொடர்ந்து வந்தது. நவீன மலையாள நாடகத்தின் தோற்றத்தை இவரது படைப்புகளில் காணலாம். சந்திரமுகிவிலாசம் என்ற நாடகம் 1884 ஆம் ஆண்டில் மலையாளத்தில் எழுதப்பட்ட முதல் நாடகம் என்ற பெருமையைப் பெற்றது. 1887 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டது. [1]

அகராதி[தொகு]

சி.வி.வியாக்யான கோசம் என்பது பிள்ளையின் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்ட நான்கு தொகுதிகளாக 400-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அகராதி படைப்பாகும். 700,000 க்கும் மேற்பட்ட மலையாளம், சமசுகிருதம், தமிழ், இந்துஸ்தானி, இவரது எழுத்துக்களில் இவர் பயன்படுத்திய ஆங்கிலச் சொற்களின் விளக்கங்கள், இந்தப் படைப்பில் அடங்கும். [5]

மரியாதை[தொகு]

இந்திய அஞ்சல் துறை 2010 மே 19 அன்று இவரின் நினைவு அஞ்சல்தலை வெளியிட்டது. [6] [7] திருவனந்தபுரத்தின் வழுதக்காட்டில் ஒரு சாலைக்கு சி.வி.ராமன் பிள்ளை சாலை என்று பெயரிடப்பட்டுள்ளது. [8] திருவனந்தபுரத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான அரையூரை உள்ளடக்கிய செங்கால் பஞ்சாயத்திற்கு , 1970 இல் சி.வி.ஆர் புரம் என மறுபெயரிடப்பட்டது. [9] [10]

ராமன் பிள்ளை பற்றிய எழுத்துக்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேலும் காண்க (கேரளாவின் சமூக சீர்திருத்தவாதிகள்):[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi. 2019-01-29. Archived from the original on 2018-06-25. பார்க்கப்பட்ட நாள் 2020-07-24.
  2. "History - UCT". www.universitycollege.ac.in. 2019-01-29. Archived from the original on 2019-01-30. பார்க்கப்பட்ட நாள் 2019-01-29.
  3. 3.0 3.1 3.2 Reddiar, Mahesh (2011-01-13). "C.V. Raman Pillai - a short biography". PhilaIndia.info (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-29.
  4. "C. V. Raman Pillai on Veethi portal". veethi.com. 2019-01-30. பார்க்கப்பட்ட நாள் 2019-01-30.
  5. "C. V. Raman Pillai - Veethi profile". veethi.com. 2019-01-29. பார்க்கப்பட்ட நாள் 2019-01-29.
  6. "Stamps – 2010". India Post. Department of Posts, Government of India. 2019-01-29. Archived from the original on 2013-08-14. பார்க்கப்பட்ட நாள் 2 August 2013.
  7. "C. V. Raman Pillai - Commemorative Stamp". www.istampgallery.com. 2019-01-29. பார்க்கப்பட்ட நாள் 2019-01-29.
  8. "Where to Stay". Kerala Tourism (in ஆங்கிலம்). 2019-01-30. பார்க்கப்பட்ட நாள் 2019-01-30.
  9. "C.V.RAMAN PILLAI - Wikimapia". wikimapia.org (in ஆங்கிலம்). 2019-01-30. பார்க்கப்பட்ட நாள் 2019-01-30.
  10. "CVR PURAM ROAD". wikimapia.org. பார்க்கப்பட்ட நாள் 2019-01-30.
  11. "A SHORT HISTORY OF MALAYALAM LITERATURE" (PDF). Suvarna Keralam - Government of Kerala. 2013-10-20. Archived from the original (PDF) on 2013-10-20. பார்க்கப்பட்ட நாள் 2019-01-30.

வெளி இணைப்புகள்[தொகு]

{{commons category|ச. வே. இராமன் பிள்ளை}

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._வே._இராமன்_பிள்ளை&oldid=3739364" இலிருந்து மீள்விக்கப்பட்டது