சி. மு. மு. அரு. அலமேலு அருணாசலம் உயர்நிலைப்பள்ளி, பனையப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பனையப்பட்டி உயர்நிலைப்பள்ளி

சி. மு. மு. அரு. அலமேலு அருணாசலம் உயர்நிலைப்பள்ளி,பனையப்பட்டி என்பது இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சரகத்திற்குட்பட்ட பனையப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது[1]

நிர்வாகம்[தொகு]

பள்ளியானது பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்கள் நிர்வாகத்தில் செயல்படுகிறது.

கல்வி[தொகு]

ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. பனையப்பட்டி,மேலப்பனையூர்,பளுவினிப்பட்டி,பூவக்கோன்பட்டி,கூடலூர்,குலமங்களம்,வீரணாம்பட்டி,பூலாம்பட்டி,வடகாடு,பொன்னனூர்,விராச்சிலை,குழிபிறை போன்ற அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள் இப்பள்ளியில் கல்வி பயில்கின்றனர்.இப்பள்ளியில் சுமாராக 250 மாணவ,மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். இப்பள்ளியில் 2015-16 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் 100 சதவிகித தேர்ச்சியும்,2016-2017 கல்வி ஆண்டில் 94 சதவிகித தேர்ச்சியும் பெற்றது.சென்ற கல்வி ஆண்டில் 23 மாணவ மாணவியர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்தனர். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தலா 3 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றனர்.தரமான கல்வியை வழங்கி வருவதில் இப்பள்ளி பெருமை கொள்கிறது. தமிழ்நாடு அரசு வழங்கும் 14 வகை நலத்திட்ட உதவிகள் மாணவ,மாணவியர்களுக்கு பெற்று வழங்கி வருகிறது.

ஆசிரியர்கள்[தொகு]

தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள்,இரண்டு இடைநிலை ஆசிரியர்கள்,ஒரு நெசவு ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் நல்ல முறையில் கல்வி கற்பித்து வருகிறார்கள்.

பணியாளர்கள்[தொகு]

இப்பள்ளியில் ஒரு இளநிலை உதவியாளரும்,ஒரு அலுவலக உதவியாளரும்,இரண்டு பகுதி நேரப் பணியாளர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]