சி. மர்செல்லா கரோல்லோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. மர்செல்லா கரோல்லோ
C. Marcella Carollo
பிறப்புபலெர்மோ, இத்தாலி
வாழிடம்சுவிட்சர்லாந்து
தேசியம்இத்தாலியர், சுவீடியர்
துறைவானியல் வானியற்பியல்
பணியிடங்கள்ETH சூரிச்

கொலம்பியா பல்கலைக்கழகம்

ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகம்

இலெய்டன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்உலூத்விகு மேக்சிமில்லன் பல்கலைக்கழகம், மூனிச் (முனைவர்)
அறியப்படுவதுபால்வெளியின் தோற்றமும் படிமலர்ச்சியும் புறப்பால்வெளி வானியல்
துணைவர்சைமன் இலில்லி

சி. மர்செல்லா கரோல்லோ (C. Marcella Carollo) ETH சூரிச் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசிரியர் ஆவார்.[1]

கல்வி[தொகு]

இவர் பலெர்மோ பல்கலைக்கழகத்தில் தன் படிப்பைத் தொடங்கினார்.[2] இவர் இங்கே 1987 இல் இயற்பியலில் இளவல் பட்டத்தை உயிரியற்பியலில் பெற்றார். இவர் மூனிச்சில் உள்ள உலூத்விகு மேக்சிமில்லன் பலகலைக்கழகத்தில்1994 இல் வானியற்பியலில் முனைவர் பட்ட்த்தைப் பெற்றார்.

வாழ்க்கைப்பணி[தொகு]

கரோல்லோவுக்கு முதுமுனைவர் பட்ட ஆய்வுநல்கையான ஐரோப்பியக் குழுமப் பரிசு வழங்கப்பட்டது. இவர் இந்த ஆய்வை இலெய்டன் பல்கலைக்கழகத்தில் 1994 முதல் 1996 வரை மேற்கொண்டார். இவருக்கு விண்வெளித் தொலைநோக்கி அறிவியலுக்கான அபுள் முதுமுனைவர் ஆய்வுநல்கையும் கிடைத்தது[3] இந்த ஆய்வை இவர் 1997 முதல் 1999 வரை ஜான் ஆப்கின்சு பலகலைக்கழகத்தில்மேற்கொண்டார். இவர் 1999 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வானியல் துறையில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார். இவர் இப்பதவியில் 2001 வரை இருந்தார். இவர் 2002 இல் ETH சூரிச்சில் இணைப்பேராசிரியராகச் சேர்ந்தார். இவர்2007 இல் முழுப்பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். இவர் 2012 இல் VIA கல்விக்கழகத்தின் இத்தாலிய மீயுயர் அறிவியலாளர் பட்டியலில் இடம்பிடித்தார்[4] and in 2013 she was awarded the Winton Capital Research Prize.[5]

ஆராய்ச்சி[தொகு]

இவரது வானியல் சார்ந்த ஆய்வுப் புலங்கள் பால்வெளியின் தோற்றமும் படிமலர்ச்சியும், புறப்பால்வெளி வானியல் ஆகியவை ஆகும்.[6] இவரது தொடக்கநிலை ஆய்வு பொன்மத்தன்மைக்கும் பால்வெளிக் கோளவக விண்மீன் பொருண்மைக்கும் உள்ல உறவை நிறுவியது. மேலும் இந்த ஆய்வு அரை ஒளி ஆரங்களுக்கு அப்பால் கரும்பொருண்ம வளிம வட்டம் நிலவுதலையும் விளக்கிக் காட்டியது.

கருத்து வேறுபாடு[தொகு]

2017 ஆகத்தில் ETH சூரிச் தன் வானியல் நிறுவனத்தை கலைத்தது. 2017 அக்தோபரில் இவரது அலுவற்பணி முறைகேடுகளைப் பற்றிய குற்றச்சாட்டுகளை ஆய்வுக்குட்படுத்தியது.[7] பல்கலைக்கழகம் இவர் கடந்த பத்தாண்டுகளுக்கம் மேலாக பட்டப்படிப்பு மாணவரைத் தரக்குறைவாக நட்த்தியதைப் பற்றி ஆய்வுக்குட்படுத்தியது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Carollo's webpage at ETH". www.astro.ethz.ch. Archived from the original on 2016-10-20. பார்க்கப்பட்ட நாள் 2016-10-17.
  2. "Carollo's Hubble Heritage webpage".
  3. "Space Telescope Science Institute listing of all Hubble Fellows 1990-2016". Archived from the original on 2017-02-20.
  4. "Top Italian Scientists". Archived from the original on 2018-12-04.
  5. "Winton Capital research prize recipients". Archived from the original on 2016-10-21.
  6. "C. M. Carollo - Microsoft Academic". academic.microsoft.com. Archived from the original on 2019-09-10. பார்க்கப்பட்ட நாள் 2016-10-19.
  7. Donzé, René (21 October 2017). "Eklat an der ETH: Professorin mobbt Studenten" (in German). NZZ am Sonntag (Zurich). https://nzzas.nzz.ch/public/eklat-an-eth-professorin-mobbt-studenten-ld.1323367. 
  8. Vogel, Gretchen (25 October 2017). "Swiss university dissolves astronomy institute after misconduct allegations". Science (Washington). doi:10.1126/science.aar3257. http://www.sciencemag.org/news/2017/10/swiss-university-dissolves-astronomy-institute-after-misconduct-allegations. பார்த்த நாள்: 28 October 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._மர்செல்லா_கரோல்லோ&oldid=3583988" இலிருந்து மீள்விக்கப்பட்டது