சி. பி. சிற்றரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. பி. சிற்றரசு
தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் தலைவர்
பதவியில்
23 ஏப்ரல் 1970 –  20 ஏப்ரல் 1976
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 11, 1906
இறப்பு16 பெப்ரவரி 1978(1978-02-16) (அகவை 71)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர்சி.கே.பெத்தசாமி நாயுடு - இலட்சுமி அம்மாள்
வாழிடம்(s)காஞ்சிபுரம் , தமிழ்நாடு, இந்தியா

சி. பி. சிற்றரசு (ஏப்ரல் 11, 1906[1] - பெப்ரவரி 16, 1978[1] ) ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர்[2]. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். “சிந்தனைச் சிற்பி” என்ற பட்டமும் பெற்றவர்.

சி.பி.சிற்றரசின் இயற்பெயர் சின்னராஜ் . தந்தையின் பெயர் சி.கே.பெத்தசாமி நாயுடு , தாயார் பெயர் இலட்சுமி அம்மாள். இவர்களது சொந்த ஊர் காஞ்சிபுரம் [3][4] . இவர் 1906- ஏப்ரல் 11ஆம் நாள் பிறந்தார்.[1] கு. மு. அண்ணல் தங்கோவின் தாக்கத்தால் தன் பெயரை சிற்றரசு என்று மாற்றிக் கொண்டார். 1930கள் முதல் அண்ணாவுடன் இணைந்து நீதிக்கட்சியில் பணியாற்றத் தொடங்கினார். 1949இல் திமுகவை அண்ணா உருவாக்கிய போது அதில் இணைந்தார்.[5]

குடும்பம்[தொகு]

சி.பி.சிற்றரசுக்கு சரசுவதி என்னும் மகள் இருந்தார்.[6] சரசுவதிக்கும் பி.வரதராசலு நாயுடு என்பவர் மகன் பி.வ.சுதர்சனன் என்பவருக்கும் 6-9-1959ஆம் நாள் சென்னை லாயிட்சு ரோட்டில் கதவெண்-156லிருந்த தென்னிந்த நடிகர்சங்கக் கட்டிடத்தில் கா. ந. அண்ணாதுரை தலைமையில் திருமணம் நடந்தது.[7]

இதழாளர்[தொகு]

  • 1952 ஆகஸ்டு 22ஆம் நாள் தீப்பொறி என்னும் வார இதழைத் தொடங்கினார்.[8]
  • 1956 மே 3ஆம் நாள் "தீச்சுடர்" என்னும் என்னும் இதழைத் தொடங்கினார்.[9]
  • 1959ல் இனமுழக்கம் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக இருந்த சிற்றரசு, அதன் அதிகாரப்பூர்வ இதழான “நம் நாடு” இன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

திரைப்படம்[தொகு]

1950களில் ஓராண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார்.

நூல்கள்[தொகு]

சிற்றரசு பின்வரும் நூல்களை எழுதியுள்ளார்:

வ.எண் நூலின் பெயர் வகை வெளியான ஆண்டு பதிப்பகம் குறிப்புகள்
01 இரத்த தடாகம் நாடகம் ? ?
02 இலங்கை எதிரொலி சொற்பொழிவுகள் 1953 திசம்பர் தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி
03 உலக விஞ்ஞானிகள் வாழ்க்கை வரலாறு 1979 ஆகஸ்ட் பூம்புகார் பிரசுரம், 15, மன்னார்சாமி கோவில் தெரு, சென்னை-108 12 அறிவியலாளர்களின் வரலாறு
04 உலகை திருத்திய உத்தமர்கள் வாழ்க்கை வரலாறு 1979 சூன் பூம்புகார் பிரசுரம், 15, மன்னார்சாமி கோவில் தெரு, சென்னை-108 18 மெய்யிலாளர்களின் வரலாறு
05 எமிலி ஜோலா - முதற்பாகம் கட்டுரைகள் 1952 மே தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி
06 எமிலி ஜோலா - இரண்டாம் பாகம் கட்டுரைகள் 1952 செப்டம்பர் தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி
07 கொலம்பஸ் வாழ்க்கை வரலாறு 1952 திராவிடப்பண்ணை, திருச்சி.[10]
08 சரிந்த சாம்ராஜ்யங்கள் வரலாறு 1958 மே தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி
09 சாக்கிய சிம்மன் ? 1952 திசம்பர் திராவிடப்பண்ணை, திருச்சி.[11]
10 சாய்ந்த கோபுரம் வாழ்க்கை வரலாறு 1951 நவம்பர் தமிழ்மன்றம், திருச்சி [12] மாஜினியின் வாழ்க்கை வரலாறு
11 சிந்தனைச் சுடர் ? ? ?
12 சீனத்தின் குரல் வரலாறு 1953 மே தமிழ் மன்றம், தெப்பக்குளம், திருச்சி
13 சுதந்திரத் தந்தை ரூசோ வரலாறு ? ?
14 சேரனாட்டதிபதி நாடகம் ? ?
15 சோகச்சுழல் கதை}}1951 இராஜன் பதிப்பகம், மேட்டுப்பாளையம், முசிறி வட்டம், திருச்சி மாவட்டம்
16 தங்க விலங்கு நாடகம் 1951 ஆகத்து தமிழ்மன்றம், திருச்சி [13]
17 போர்வாள் நாடகம் ? ?
18 மந்திரமுட்டை ? ? ?
19 மதி நாடகம் 1951 நவம்பர் தமிழ்மன்றம், திருச்சி [14]
20 மார்ட்டின் லூதர் வாழ்க்கை வரலாறு 1951 செப்டம்பர் தமிழ்மன்றம், திருச்சி [13]
21 விடுதலை வீரன் வாழ்க்கை வரலாறு ? ? ஆப்ரகாம் லிங்கன் வரலாறு
22 விஷக்கோப்பை வாழ்க்கை வரலாறு 1952 தமிழ்மன்றம், திருச்சி [13] சாக்ரடீஸ் வரலாறு
23 வெங்கலச்சிலை வாழ்க்கை வரலாறு 1951 செப்டம்பர் தமிழ்மன்றம், திருச்சி [13] லெனின் வரலாறு
24 ரோம்நாட்டு வீரன் வாழ்க்கை வரலாறு 1958 முத்துவேல் பதிப்பகம், திருச்சி[15]
25 ஜோதிப்பெண் ? ? ?

இவைதவிர "புறப்படு மகனே", "பேரனுக்கு" ஆகிய தொடர்களை இனமுழக்கம் இதழிலும் "கபாடபுரம்" என்னும் தொடரை முன்னணி இதழிலும் எழுதியுள்ளார்.[16]

திரைப்படம்[தொகு]

1960ம் ஆண்டு வெளியான ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.

தேர்தல்[தொகு]

1957 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.[17] 1962 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.[18]

சட்ட மேலவைத்தலைவர்[தொகு]

1964ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970-04-23 முதல் 1976-04-20ஆம் நாள் வரை அந்த அவையின் தலைவராகப் பணியாற்றினார்.[1]

வெளிநாட்டுப்பயணம்[தொகு]

1970 அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் நாடுகளின் 16ஆவது மாநாடு நடைபெற்றது; அதில் தமிழ்நாட்டின் சார்பில் சிற்றரசு கலந்துகொண்டார்.[1]

அ.தி.மு.க.வில்[தொகு]

1976ல் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

மரணம்[தொகு]

1978-பிப்ரவரி-16ஆம் நாள் நோய்வாய்பட்டு மரணமடைந்தார்.

நினைவேந்தல்[தொகு]

1989ல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.


சான்றடைவு[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 தமிழரசு 01-03-1978, பக்.48
  2. விஜயாபானு, தொகுப்பாசிரியர் (1972). ஜாதிப்பூ. ஏகம்மை நிலையம். https://books.google.co.in/books?id=Z3gdVF06YMEC&dq=திரு.+சி.+பி.+சிற்றரசு+மேலவைத்+தலைவர்%2C+தமிழ்நாடு+அரசு%2C+சென்னை-+9&focus=searchwithinvolume&q=திரு.+சி.+பி.+சிற்றரசு+மேலவைத்+தலைவர்%2C+தமிழ்நாடு+அரசு%2C++-+9. 
  3. க. திருநாவுக்கரசு, தொகுப்பாசிரியர் (1999). திராவிட இயக்கத் தூண்கள். நக்கீரன் பதிப்பகம். பக். 157. https://books.google.co.in/books?id=8gRuAAAAMAAJ&dq=சி.பி.சிற்றாசின்+இயற்பெயர்+%27+சின்னராஜ்+++தந்தையின்+பெயர்+பெத்தசாமி+நாயுடு%3B+தாயார்+பெயர்+இலட்சுமி+அம்மாள்&focus=searchwithinvolume&q=சி.பி.சிற்றாசின்+இயற்பெயர்+%27+சின்னராஜ்+++தந்தையின்+பெயர்+பெத்தசாமி+நாயுடு%3B+தாயார்+பெயர்+இலட்சுமி+அம்மாள்+காஞ்சிபுரம்++இவர்களது+சொந்த+ஊர். "சி.பி.சிற்றாசின் இயற்பெயர் ' சின்னராஜ் தந்தையின் பெயர் பெத்தசாமி நாயுடு; தாயார் பெயர் இலட்சுமி அம்மாள் இவர்களது சொந்த ஊர் காஞ்சிபுரம்" 
  4. Tamil Nadu (India). Legislature. Legislative Council, தொகுப்பாசிரியர் (1972). Who is who, Volume 7. Legislative Council Departmen. பக். 21. https://books.google.co.in/books?id=xFbyYt6he9AC&q=கே.+பெத்தசாமி+நாயுடு+;+தாயார்+பெயர்+லட்சுமி+அம்மாள்&dq=கே.+பெத்தசாமி+நாயுடு+;+தாயார்+பெயர்+லட்சுமி+அம்மாள்&hl=en&sa=X&ved=0ahUKEwjTpsOH_KTlAhUNY48KHcPRAE8Q6AEIKTAA. 
  5. திராவிட இயக்கத் தூண்கள் - க. திருநாவுக்கரசு; நக்கீரன் பதிப்பகம்; பக் 155-167
  6. இனமுழக்கம், 14.10.60, பக்கம் 2
  7. தென்னகம்; 4-9-1959; பக்.2
  8. திராவிடநாடு (இதழ்) நாள்:13-7-1952, பக்கம் 6
  9. திராவிடநாடு (இதழ்) நாள்:15-4-1956, பக்கம் 10
  10. திராவிடநாடு (இதழ்) நாள்:6-7-1952, பக்கம் 12
  11. திராவிடநாடு (இதழ்) நாள்:22-12-1952, பக்கம் 2
  12. திராவிடநாடு (இதழ்) நாள்:9-9-1951, பக்கம் 5
  13. 13.0 13.1 13.2 13.3 திராவிடநாடு (இதழ்) நாள்:19-8-1951, பக்கம் 5
  14. திராவிடநாடு (இதழ்) நாள்:4-11-1951, பக்கம் 10
  15. திராவிடநாடு (இதழ்) நாள்:31-8-1958, பக்கம் 4
  16. இனமுழக்கம், 27-1-1961, பக்.6
  17. Volume I, 1957 Indian general election, 2nd Lok Sabha
  18. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2011-08-22.

வெளி இணைப்பு[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._பி._சிற்றரசு&oldid=3553703" இலிருந்து மீள்விக்கப்பட்டது