உள்ளடக்கத்துக்குச் செல்

சி. சோதிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். சோதிநாதன்
S. Sothinathan
மலேசிய இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல்
நிலைத்தன்மை துணையமைச்சர்
பதவியில்
27 மார்ச் 2004 – 18 மார்ச் 2008
முன்னையவர்சைனல் டாலான்
பின்னவர்மசுனா மசுலான்
தொகுதிதெலுக் கெமாங்
தெலுக் கெமாங் மக்களவைத் தொகுதி
பதவியில்
10 சூன் 2000 – 8 மார்ச் 2008
முன்னையவர் சா. அன்பழகன்
பின்னவர் கமருல் பகரின் அபாஸ்
பெரும்பான்மை5,972 (2000 இடைத்தேர்தல்)
17,777 (2004)[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புSothinathan s/o Sinna Goundar
4 ஏப்ரல் 1960 (1960-04-04) (அகவை 66)
போர்டிக்சன், நெகிரி செம்பிலான்
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சி மஇகா
முன்னாள் மாணவர்மலாயா பல்கலைக்கழகம்
இலண்டன் பல்கலைக்கழகம்
பணிஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்
Messrs Sothi Bala & Associates

டத்தோ சி. சோதிநாதன் எனும் சோதிநாதன் சின்னக்கவுண்டர் (ஆங்கிலம்; மலாய்: S. Sothinathan அல்லது Sothinathan s/o Sinna Goundar) என்பவர் மலேசிய அரசியல்வாதி; 2000 முதல் 2008 வரை இரு தவணைகளுக்கு, நெகிரி செம்பிலான் தெலுக் கெமாங் மக்களவைத் தொகுதியின் (Telok Kemang Federal Constituency) நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்தவர்; மலேசிய இந்தியர் சமூகத்தின் உரிமைகளுக்காக மலேசிய நாடாளுமன்றத்தில் குரல்கொடுத்த முன்னணித் தலைவர்களில் ஒருவர் ஆவார். இவர் எஸ். சோதிநாதன் என பரவலாக அறியப்படுகிறார்.

2000 சூன் 10 அன்று தெலுக் கெமாங் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஏ. அன்பழகன் காலமானதைத் தொடர்ந்து, சோதிநாதன் 2000-ஆம் ஆண்டு தெலோக் கெமாங் இடைத்தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டார்.[2] 2004 மலேசியப் பொதுத் பொதுத் தேர்தலில் அவர் தெலுக் கெமாங் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இருப்பினும், 2008 மலேசியப் பொதுத் தேர்தலில் அவர் தன்னுடைய தெலுக் கெமாங் மக்களவைத் தொகுதியை இழந்தார். அந்தத் தேர்தலில், ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி 222 நாடாளுமன்ற இடங்களில் 82 இடங்களை எதிர்க்கட்சிகளிடம் இழந்தது.[3]

சர்ச்சை

[தொகு]

2005-ஆம் ஆண்டில், உக்ரைன் கிரிமியா அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் (Ukraine's Crimea State Medical University) வழங்கி வந்த மருத்துவப் பட்டங்களுக்கான அங்கீகாரத்தை மலேசிய மருத்துவ மன்றம் (Malaysian Medical Council) திடீரென மீட்டுக் கொண்டது.[4] இந்த முடிவின் காரணமாக, ஏற்கெனவே அந்தப் படிப்பில் சேர்ந்திருந்த 1,000-க்கும் மேற்பட்ட மலேசிய மருத்துவ மாணவர்கள் (அவர்களில் 500-க்கும் மேற்பட்ட மலேசிய இந்திய மாணவர்கள்) தவிக்க விடப்பட்ட நிலையில் செய்வதறியாது தடுமாறி நின்றனர்.[4]

அவர்களின் நிலை குறித்து நாடாளுமன்ற விவாதத்தில் சோதிநாதன் வாதிட்டபோது, ​​பாரிசான் நேசனல் அரசாங்கத்தை விமர்சித்ததற்காக அவர் நாடாளுமன்றத்தில் இருந்து[5] இடைநீக்கம் செய்யப்பட்டார்.

டத்தோ எஸ். சோதிநாதனின் செயல்கள் பாரிசான் நேசனல் தலைவர்கள் பலரால் விமர்சிக்கப்பட்டாலும், மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்குப் போராடுபவராக அவரை மலேசிய இந்தியர் பெரிதும் பாராட்டினர்.

பொது

[தொகு]

2000-ஆம் ஆண்டுகளில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான இவர், பாரிசான் நேசனல் கூட்டணியின், மலேசிய இந்தியர் காங்கிரசு கட்சியில் (MIC) தொடக்ககால மக்களவை உறுப்பினர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மஇகா கட்சியின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர்; மற்றும் சில முக்கியப் பொறுப்புகளையும் இவர் வகித்துள்ளார்.

1999 முதல் ஏறக்குறைய 10 ஆண்டுகள் மலேசியாவின் சுகாதார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராகவும், பின்னர் மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் துணை அமைச்சராகவும்; நாடாளுமன்ற உறுப்பினராகவும் சேவையாற்றி உள்ளார்.

2008 மலேசியப் பொதுத் தேர்தலுக்கு பிறகு, 2010-ஆம் ஆண்டில் சோதி பாலா (Sothi Bala & Associates) எனும் சட்ட நிறுவனத்தைத் தொடங்கி, தற்போது கோலாலம்பூரில் சிவில் மற்றும் தொழில்முறை சட்ட வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.[6]

வாழ்க்கை

[தொகு]

டத்தோ எஸ். சோதிநாதன் 4 ஏப்ரல் 1960 அன்று நெகிரி செம்பிலான், போர்டிக்சன் நகரில் பிறந்தவர்;[7] பொருளாதாரத் துறை மற்றும் சட்டம் ஆகிய இரு துறைகளிலும் இரட்டைப் பட்டப் படிப்புகளை (Double Degree) முடித்துள்ளார்.[6] தனது தொழில்முறை வாழ்க்கையை, ஜெயா பணியாளர் கூட்டுறவு (Jaya Workers Cooperative Berhad) நிறுவனத்தில் ஒரு செயல்பாட்டுச் செயலாளராகத் தொடங்கினார்.

மலேசியாவின் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரான மறைந்த துன் சாமிவேலு அவர்களின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டது; எஸ். சோதிநாதனின் அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

பங்களிப்புகள்

[தொகு]

2018-ஆம் ஆண்டில், போர்டிக்சன் இடைத்தேர்தலில் பிகேஆர் தலைவர்; மற்றும் பாக்காத்தான் அரப்பான் தலைவர் அன்வர் இப்ராகீமுக்கு ஆதரவாக சோதிநாதன் களம் இறங்கினார்.[8] அவர் ஏற்கனவே மஇகாவில் இருந்து விலகிவிட்டதாகவும் அறிவித்துள்ளார்.[9][10]

மலேசிய நாடாளுமன்றத்திலும், அரசாங்கத்திலும் இந்தியர்களின், குறிப்பாகத் தமிழர்களின் குரலாக ஒலித்தவர் என அறியப்படும் டத்தோ எஸ். சோதிநாதன்; மலேசிய இந்தியர் என்றும் மறவாத அரசியல்வாதிகளில் ஒருவர் ஆவார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசிய மக்களவை
தெலுக் கெமாங் மக்களவைத் தொகுதி[11][12]
ஆண்டு தொகுதி வேட்பாளர் பெற்ற
வாக்குகள்
% எதிரணி பெற்ற
வாக்குகள்
% மொத்த
வாக்கு
பெரும்
பான்மை
%
2000 P119 தெலுக் கெமாங் எஸ். சோதிநாதன் (மஇகா) 24,500 56.94% ருசுலான் காசிம் (பிகேஆர்) 18,528 43.06% 44,079 5,972 66.14%
2004 P132 தெலுக் கெமாங் எஸ். சோதிநாதன் (மஇகா) 28,494 72.67% அப்துல் மனாப் சார்தின் (பிகேஆர்) 10,717 27.33% 41,189 17,777 72.95%
2008 எஸ். சோதிநாதன் (மஇகா) 20,544 46.17% கமருல் பகரின் அபாஸ் (பிகேஆர்) 23,348 52.48% 46,613 2,804 77.45%
ரசீட் அரசாத் (சுயேச்சை) 601 1.35%

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Sothinathan Sinna Goundar; Ahli Parlimen, P.119 Telok Kemang, Negeri Sembilan, By-Election·10 Jun 2000)". ElectionData.MY. Retrieved 1 June 2026.
  2. ↑ "Sothinanthan is BN's Teluk Kemang candidate" (PDF). lib.perdana.org.my. 23 May 2000.
  3. ↑ "Midnight win in Negri for BN". The Star (Malaysia). 9 March 2008. http://thestar.com.my/election/story.asp?file=/2008/3/9/election2008/20591912&sec=Election2008. பார்த்த நாள்: 23 January 2010.
  4. 1 2 "MMC's derecognition of Ukraine's Crimea State Medical University (CSMU) medical degree should be suspended to allow CSMU "grace period" to comply with MMC's requirements". Lim Kit Siang DAP. Retrieved 2 June 2026.
  5. ↑ "Sothinathan suspended from Deputy Minister's post". The Star. June 22, 2005. http://thestar.com.my/news/story.asp?file=/2005/6/22/latest/20050622151947&sec=latest. பார்த்த நாள்: 1 April 2011.
  6. 1 2 "Dato' S Sothinathan is the Founding Partner of Messrs Sothi Bala & Associates". Sothi Bala & Associates. Retrieved 1 June 2026.
  7. ↑ "Sothinathan Sinna Goundar". pru.sinarharian.com.my.
  8. ↑ "Former MIC VP Sothinathan campaigns for Anwar in PD". www.malaymail.com.
  9. ↑ "Sothinathan says he is no longer with MIC". www.nst.com.my.
  10. ↑ "Saya sudah keluar MIC - Sothinathan". www.bharian.com.my.
  11. ↑ "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri" (in Malay). Election Commission of Malaysia. Retrieved 4 February 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link) Percentage figures based on total turnout.
  12. ↑ "Malaysia General Election". undiinfo Malaysian Election Data. Malaysiakini. Retrieved 4 February 2017. Results only available from the 2004 Malaysian general election.

மேலும் காண்க

[தொகு]

நூல்கள்

[தொகு]
  • Zhang, Kevin; Choo, John; Fong, Sok Eng (2022). The Democratic Action Party in Johor (in ஆங்கிலம்). ISEAS Publishing. ISBN 978-981-5011-11-1.
  • Anzagain Sdn. Bhd. (2004). Almanac of General Election Results: Parliament & State Legislative Assembly, 1959-1999. Shah Alam, Selangor: Anzagain.
  • Hussain, M. (1987). Membangun demokrasi: Pilihanraya di Malaysia. Kuala Lumpur: Karya Bistari.
  • Ibnu, H. (1993). PAS kuasai Malaysia?: 1950-2000 sejarah kebangkitan dan masa depan. Kuala Lumpur: GG Edar.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சோதிநாதன்&oldid=4556410" இலிருந்து மீள்விக்கப்பட்டது